6 best small business ideas in tamil

6 best small business ideas in tamil

சமீபகாலமாக தமிழ்நாட்டில் பட்டப்படிப்பு முடித்தவர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகமாகி விட்டது ஆனால் வேலைவாய்ப்பு என்பது மிகக் குறைந்த அளவே உள்ளது.

கொரோனா வைரஸ் காரணத்தால் பல நிறுவனங்கள் இழுத்து மூடப்பட்டது, இப்போதுதான் மெல்ல மெல்ல வேலைவாய்ப்புகள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. ஆனால் சம்பளம் என வரும்போது மிக குறைந்த சம்பளத்தில் லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலை செய்கிறார்கள்.

இதனால் வீட்டிற்குத் தேவையான சில பொருட்களை வாங்குவது கூட என்பது முடியாத சூழ்நிலையில் உள்ளது, சொந்தமாக ஏதாவது தொழில் செய்தால் நன்றாக இருக்கும் என்று பல நபர்கள் இப்பொழுது நினைக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

அதே நேரத்தில் குறைந்த முதலீடு இருக்க வேண்டும் என்பது அவர்களின் எண்ணம் இதுபோன்ற இருக்கும் நபர்களுக்கு குறைவான முதலீட்டில் செய்யக் கூடிய சிறு தொழில் பட்டியல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

6 best small business ideas in tamil

ஐஸ்கிரீம் தயாரிக்கும் தொழில் (The ice cream industry)

ஐஸ்கிரீம் என்றாலே எல்லா காலங்களிலும் நன்றாக விற்பனையாக கூடிய தொழிலாக இருக்கிறது, சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் பொருளாக ஐஸ்கிரீம் இருக்கிறது.

ஐஸ்கிரீம் பால் உற்பத்தி பொருட்களில் ஒன்று, உலகில் பால் உற்பத்தி செய்யும் நாடுகளில் அதிக அளவில் இந்தியா உற்பத்தி செய்கிறது.

எனவே இந்தப் பாலில் இருந்து தயார் செய்யக்கூடிய ஐஸ்க்ரீம் தயார் செய்து விற்பனை செய்தால் நல்ல லாபம் பார்க்க முடியும் கோயில் திருவிழாக்கள், வீட்டு விசேஷங்கள், திருமணங்கள், கோடைகாலங்களில் ஐஸ்கிரீம் விற்பனை பல மடங்கு அதிகரிக்கும்.

ஐஸ்கிரீம் பல வர்ணங்களில் பல சுவைகளில் நீங்கள் தயாரிக்கலாம் மற்ற உணவு வகையான பழங்கள் மற்றும் தானிய வகைகள் சேர்த்து சாப்பிடலாம்.

புதிதாக தொழில் தொடங்க நினைப்பவர்கள் இந்த ஐஸ்கிரீம் தொழிலை தேர்ந்தெடுக்கலாம், ஏனென்றால் குறைந்த முதலீட்டில் நிறைவான லாபம் தரக்கூடிய தொழில், அதுமட்டுமில்லாமல் நீங்கள் இந்த தொழிலை பற்றி நன்றாக தெரிந்து கொண்டு தொழிலை தொடங்கினாள் தொழிலில் எளிதாக வெற்றி பெறலாம்.

6 best small business ideas in tamil

தீவனம் தயாரிப்பு தொழில் (Fodder preparation industry)

உலகில் அதிக அளவில் பால் உற்பத்தி செய்யப்படும் நாடு இந்தியா இந்தியாவில் தற்போது 182 மில்லியன் டன் பால் உற்பத்தி செய்யப்படுகிறது.

உலகிலுள்ள 25% மாடுகள் இந்தியாவில்தான் உள்ளது. இந்த மாடுகளுக்கு சரியான ஊட்டச்சத்து தீவனம் அவசியம் தேவைப்படுகிறது.

மக்காச்சோளம், புண்ணாக்கு, தவிடு மற்றும் தேவையான தாது உப்புகளின் கலவையாக இருக்கிறது, மாட்டுக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் தீவனத்தில் இருக்கும் மற்றும் தீவனங்களை உட்கொள்வதால் மாடுகள் அதிகமாக பால் சுரக்கும்.

மூலப்பொருட்கள் எளிதில் கிராமப்புறங்களில் கிடைப்பதால் இந்தத் தொழிலை ஏற்று நடத்தலாம், குறைந்த மூலதனத்தில் கால்நடைத் தீவனம் தயாரித்து விற்பனை செய்யலாம், அதிக அளவில் லாபம் பார்க்க முடியும்.

இப்பொழுது எல்லா கிராமங்களிலும் எல்லா விவசாயிகளும் கால்நடை தீவனத்தை வாங்கும் நபர்களாக இருக்கிறார்கள், மாடுகள் அதிகமாக உண்பதால் இதனுடைய தேவை மிக மிக அதிகரித்துள்ளது.

அருகில் உள்ள ஒரு சில கிராமங்களுக்கு இதன் உற்பத்தியை நேரடியாகவும், டீலர்ஷிப் மூலமும் நீங்கள் விற்பனை செய்து கொள்ளலாம்.

கரும்பு ஜூஸ் தொழில் (Sugarcane juice industry)

இணையதளம் நன்றாக வளர்ந்து விட்டதால் இதன் மூலம் அனைத்து தரப்பு மக்களும் ஓரளவிற்கு ஆரோக்கியம் குறித்த தகவல்களை தெரிந்து கொண்டார்கள்.

இதனால் பெரும்பாலான மக்கள் இயற்கையான முறையில் கிடைக்கக்கூடிய மூலப்பொருட்களை விரும்பக்கூடியவர்களாக இருக்கிறார்கள்.

மக்களிடத்தில் ஏற்பட்டுள்ள அதிக விழிப்புணர்வு காரணமாக கோடைக்காலம், குளிர்காலம், மழைக்காலம், என எல்லா காலங்களிலும்.

பழச்சாறு, கரும்பு ஜூஸ், உள்ளிட்டவற்றை மக்கள் விரும்பி சாப்பிடுகிறார்கள், ஏனென்றால் உடலுக்கு தேவையான பெரும்பாலான நீர்ச்சத்து இதன் மூலம் கிடைக்கிறது.

தினமும் கணிசமான வருமானம் தரக்கூடிய தொழிலாக கரும்பு ஜூஸ் தயாரிக்கும் தொழில் இருக்கிறது. கரும்பு ஜூஸ் தயாரிக்கும் இயந்திரம் விலை குறைந்ததாகவும் கிடைக்கிறது.

இந்த கரும்பு ஜூஸ் தயாரிக்கும் இயந்திரம் குறைந்தபட்சம் ரூபாய் 20,000 முதல் அதிகபட்சம் ரூபாய் 70,000 வரையில் விற்பனை செய்யப்படுகிறது.

பொதுவாக கரும்பு ஜூஸ் தயாரிக்கும் தொழிலை மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள இடங்களில் தொடங்கினால் அதிக லாபம் பெற முடியும்.

அதாவது பேருந்து நிலையம், கடைவீதிகளில், கோயில் திருவிழாக்களில், திருமண மண்டபம் அருகில், கல்லூரி அருகில், போன்ற இடங்களில் இதன் வரவேற்பு மக்களிடம் எப்பொழுதும் அதிகமாக இருக்கிறது.

தரை துடைப்பான் (Floor wiper)

மக்களிடத்தில் அதிக வரவேற்பு உள்ள பொருளாக தரை (Mop)  துடைப்பான் இருக்கிறது, ஏனென்றால் இப்பொழுது கட்டப்படும் வீடுகள் அனைத்தும் காங்கிரட் வீடு, அதுமட்டுமில்லாமல் டைல்ஸ் பொருத்தப்படுகிறது. என்பதால் வீடுகளில் இதனுடைய தேவை இப்பொழுது மிக மிக அதிகரித்துள்ளது.

இதனைத் தயாரித்து சந்தைகளில் விற்பனை செய்தால் அதிக லாபம் பார்க்க முடியும், இதற்கான இயந்திரங்கள் மற்றும் மூலப் பொருட்கள் அனைத்தும் மிக குறைந்த விலையில் இணையதளம் மூலம் கிடைக்கிறது.

எனவே சுயமாக தொழில் தொடங்க நினைப்பவர்கள், இந்த தொழிலை தேர்ந்தெடுத்து செய்யலாம். இது எப்பொழுதும் ஒரு பாதுகாப்பான மற்றும் லாபம் தரக்கூடிய தொழிலாக இருக்கிறது.

ரெடிமேட் உணவு பொருட்கள் (Readymade food products)

இன்றைய காலகட்டத்தில் ஆண்களும், பெண்களும், வேலைக்கு சென்றால் மட்டுமே ஓரளவுக்கு பணத்தை சேமிக்க முடியும் என்ற சூழ்நிலை இருக்கிறது.

இதனால் சரியான நேரத்தில் வீட்டு வேலைகள் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது, எனவே அது போல் இருக்கும் நபர்களுக்கு பயன்படும் வகையில் ரெடிமேட் சப்பாத்தி, தோசை மாவு, இட்லி மாவு, ரவை, விற்பனை செய்யலாம்.

இதன் மூலம் தினசரி ஓரளவுக்கு வருமானத்தை பெற முடியும் குறைந்த முதலீட்டில் பெண்கள் வீட்டில் இருந்தபடி இந்த தொழிலை செய்யலாம்.

இது ஒரு சிறந்த சிறு தொழிலாக இருக்கிறது, குறைந்த முதலீட்டில் என்ன தொழில் செய்யலாம் என்று நினைத்துக் கொண்டு இருப்பவர்களுக்கு இது ஒரு சிறந்த வரப்பிரசாதமாக அமைகிறது.

உணவு கடை தொடங்கலாம் (Let’s start the food shop)

மக்கள் அதிகமான ஆரோக்கியமான உணவுகளை நாட ஆரம்பித்துவிட்டார்கள், அந்த வகையில் சூப்கடை, சிறிய தள்ளுவண்டி கடை வைத்து விற்பனை செய்தால் நல்ல லாபம் பார்க்க முடியும்.

சூப் கடை என்றால் வாழைத்தண்டு சூப், காய்கறி சூப், ஆட்டுக்கால் சூப், நாட்டுக் கோழி சூப், என்று விதவிதமாக தயார் செய்து விற்பனை செய்தால் அதிக லாபத்தைப் பார்க்க முடியும். காலை  மற்றும் மாலை நேரங்களில் விற்பனை என்பது அதிக அளவில் நடைபெறும்.

நகர்ப்புறங்களில் இருக்கும் மக்கள் தங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று காலை மற்றும் மாலை என்று இரண்டு வேலைகளில் நடைப்பயிற்சி மேற்கொள்கிறார்கள். அது போன்ற இடங்களில் நீங்கள் இயற்கையான முறையில் சூப் தயார் செய்து விற்பனை செய்யலாம்.

இந்த சூப் கடை தொழில் செய்வதற்கு குறைந்த முதலீடு போதுமானது அதாவது ரூபாய் 20,000 முதலீடு தேவைப்படும் அதுவும் இந்த முதலீட்டுத் தொகை ஆரம்ப செலவுகளுக்கு மட்டுமே.

உங்கள் ஆயுசுக்கும் தலைமுடி பிரச்சனை வராது

ஒரு சிறிய தள்ளுவண்டி கடை, சூப் தயார் செய்வதற்கு தேவையான பாத்திரங்கள் மற்றும் மூலப் பொருட்கள் வாங்குவதற்கு இந்த 20,000  ரூபாய் முதலீடு தேவைப்படும்.

Click here to view our YouTube channel

அதன் பிறகு தினமும் சூப் தயார் செய்வதற்கு தேவையான மூலப் பொருட்கள், காய்கறிகள் மற்றும் மசாலா பொருட்கள் போன்ற பொருட்கள் வாங்குவதற்கு சிறிய அளவில் முதலீடு செய்ய வேண்டிய சூழ்நிலை இருக்கும்.

Nethili meen health benefits 5 list in Tamil

நீங்கள் தயார் செய்யும் சூப் வகைகளுக்கு ஏற்ப சூப்களின் விலையை 15 ரூபாயிலிருந்து 30 ரூபாய் வரை நிர்ணயம் செய்யலாம். இதன் மூலம் கண்டிப்பாக உங்களால் நல்ல லாபத்தைப் பார்க்க முடியும் தினமும்.

 

Leave a Comment