நமது உடலில் இயற்கையாக நோய் எதிர்ப்பு சக்திகளை அதிகரிப்பதற்கான 6 எளிய வழிகள்.( 6 Best tips to boost your body’s immune system)
நீங்கள் ஆரோக்கியமாக வாழ வேண்டுமென்றால் உங்கள் உடல் எப்படி நோய்களை எதிர்த்து போராடுகிறது என்பதை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
நாம் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கான வழிமுறைகளை தேடுவோம் ஆனால் பல வகையான உணவு மற்றும் வாழ்க்கைமுறை மாற்றங்களால் நம் உடலில் இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்திகளை பலமடங்கு வலுப்படுத்தலாம்.
நமது உடலில் இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்திகளை வலுப்படுத்த நாம் கடைப்பிடிக்க வேண்டிய 6 வழிமுறைகள்.
சரியான தூக்கம் முதல் தீர்வாக அமைகிறது.
தூக்கமும் நோய் எதிர்ப்பு சக்தியும் நமது உடலில் ஒரு இணைப்பாக இணைக்கப்பட்டுள்ளது.
உண்மையில் ஒரு நாளைக்கு குறைந்தது 7 மணி நேரத்திற்கு மேலாக தூங்கும் நபர்களுக்கு அதிகப்படியான மன அழுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவாக உள்ளது.
சரியான தூக்கம் நமது சிறுநீரகங்களை பாதுகாக்கும் மற்றும் இயற்கையான முறையில் சரியான நேரத்தில் பசியைத் தூண்டும். நாம் நோய்வாய் பட்டிருக்கும் போது அதிக நேரம் ஓய்வு எடுக்க வேண்டும் அல்லது தூங்க வேண்டும் என்று அறிவுரை கூறுவார்கள் மருத்துவர்கள்.
சரியான தூக்கம் நமது உடலில் உள்ள நோய் எதிர்ப்பு மண்டலத்தை நோய்களை எதிர்த்துப் போராட தூண்டிவிடும்.
இயற்கையான தாவர உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ளுங்கள்.
பழங்கள் காய்கறிகள் விதைகள் கொட்டை வகைகள் மற்றும் பருப்பு வகைகளில் அதிக அளவில் ஆக்சிஜனேற்றம் நிறைந்துள்ள ஊட்டச்சத்துக்கள் உள்ளது.
தாவர வகைகளில் உள்ள ஊட்டச்சத்துக்கள் அதிக அளவில் நார்ச்சத்து உள்ளது இந்த நார்ச்சத்து நமது குடலில் உள்ள ஆரோக்கியமான நுண்ணுயிரி அல்லது பாக்டீரியாக்களுக்கு சரியான ஊட்டச்சத்துக்கள்யாக அமைந்துள்ளது.
நாம் உண்ணும் உணவை ஒரு ஆரோக்கியமான பாக்டீரியாக்கள் அல்லது நுண்ணுயிரிகள் சரியான வழியில் செரிமானம் செய்து உணவில் உள்ள ஊட்டச்சத்துக்களை உடலில் சேர்க்கும்.
காய்கறிகள் மற்றும் பழங்களில் அதிக அளவில் வைட்டமின் சி சத்து நிறைந்துள்ளது இவை உடலில் இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்திகளை அதிகரிக்கும்.
அதிக ஆரோக்கியமான கொழுப்பு எண்ணெய்களை தேர்வு செய்யுங்கள்.
நமது தமிழ் நாட்டில் நிகழும் தட்பவெப்ப சூழ்நிலைக்கு ஏற்ப நமது முன்னோர்கள் கடலெண்ணெய் பயன்படுத்தினார்கள் இதனால் ஆரோக்கியமான இதயத்துடன் அதிக ஆண்டுகள் ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள்.
இன்றைய காலகட்டங்களில் சந்தைகளில் கிடைக்கும் கடலெண்ணெய் 90% கலப்படம் சேர்க்கப்பட்டது இதனை அதிக அளவில் நாம் எடுத்துக் கொள்வதால் நமக்கு தெரியாமல் பல வகையான நோய்களுக்கு நாம் அடிமையாகி உள்ளோம்.
குறிப்பாக உடலில் தேவையற்ற கொழுப்புகள் அதிகமாக சேரும் மேலும் நீரிழிவு மற்றும் இருதய சம்பந்தமான நோய்கள் அதிக அளவில் இன்றைய காலகட்டங்களில் மக்களை தாக்கிக் கொண்டிருக்கிறது.
இயற்கையான முறையில் உற்பத்தி செய்யப்பட்ட கடலை எண்ணெய் ஒமேகா 3 போன்ற எண்ணெய்களை எடுத்துக் கொண்டால் நம் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த நல்ல கொழுப்புகள் நமக்கு கிடைக்கும்.
இயற்கையான முறையில் புளித்த உணவுகளை அதிக அளவில் உணவில் எடுத்துக் கொள்ளுங்கள்.
புரோபயாடிக்ஸ் எனப்படும் அதிக நன்மைகளை ஏற்படுத்தும் பாக்டீரியாக்கள் உள்ளது இவை உங்கள் செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.
புளித்த உணவுகளை தவறாமல் நமது உணவில் சேர்த்துக் கொண்டால் நமக்கு இயற்கையான முறையில் புரோபயாடிக்ஸ் கிடைப்பதற்கு மற்றொரு வழியாக அமைகிறது.
குடலில் உள்ள ஆரோக்கியமான பாக்டீரியாக்கள் நமது உடலிலுள்ள அனைத்து செல்களையும் ஆரோக்கியமாகவும் மற்றும் பாதுகாப்பாகவும் வைத்திருக்க முக்கிய பங்காக உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் ட்விட்டர் பக்கத்தை லைக் செய்யுங்கள்.
உங்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தை சரியாக கையாளுங்கள்.
இன்றைய காலகட்டங்களில் இருக்கும் இளைஞர்களுக்கு முதல் ஒரு விஷயமாக மன அழுத்தம் உள்ளது. இதனால் உடலில் உயிரணுக்கள், நோய் எதிர்ப்பு சக்தி, ஆரோக்கியமான செல்கள், தலைமுடி உதிர்வு, வயதான தோற்றம், மற்றும் நாள்பட இருதய பாதிப்பு போன்றவைகள் ஏற்படுகிறது
உங்கள் மன அழுத்தத்தை குறைப்பதற்கு நீங்கள் தூங்கி எழுந்தவுடன் குறைந்தது 20 நிமிடம் உங்களுக்குப் பிடித்த பாடல்கள் அல்லது புத்தகம் படிப்பது அல்லது நகைச்சுவைகளை பார்ப்பது போன்றவைகளை செய்யுங்கள்.
மேலும் இரவு தூங்குவதற்கு முன்பு இதே போன்று செய்யுங்கள் இந்த பழக்கவழக்கங்கள் உங்களுக்கு 80 சதவீதம் மன அழுத்தம் ஏற்படுவதை குறைத்துவிடும்.
பிப்ரவரி 1 முதல் தொடங்குகிறது அரசின் அசத்தலான திட்டம் தங்கத்தில் முதலீடு செய்ய சரியான நேரம் இதுதான்.
உடலை நீரோட்டமாக எப்போதும் வைத்திருங்கள்.
நமது உடலில் தொடர்ச்சியான நீர் இழப்பு ஏற்பட்டால் தலைவலி, மனச்சோர்வு, உடல் வெப்பம் அடைதல், சிறுநீரகம் பாதிப்பு, கவனச்சிதறல், இது போன்ற பாதிப்புகள் ஏற்படும் இவைகள் உங்கள் உடலில் நோய்கள் ஏற்படுவதற்கான அதிக வாய்ப்புகளை ஏற்படுத்தும்.
How to hide whatsapp status hide in tamil 2021
நீங்கள் தினந்தோறும் எடுத்துக்கொள்ளும் தேனீர் பழச்சாறுகள் நீர்ச்சத்து நிறைந்த உணவுகள் அல்லது காய்கறிகள் பழங்கள் மூலம் உடலுக்கு தேவையான நீர்ச்சத்து உங்கள் உடலில் கிடைக்கும்.
ஆனால் பழச்சாறு தேனீர்களில் நீங்கள் சேர்க்கும் சர்க்கரை அளவுகளை கட்டுப்படுத்த வேண்டும்.
கொரோனா வைரஸால் உங்கள் இதயம் பாதிக்கப்பட்டு உள்ளது என்பதை சுட்டிக் காட்டும் அறிகுறிகள்.
உடற்பயிற்சி செய்யும் பொழுது ,அதிக நேரம் வெளிப்புறத்தில் இருக்கும் பொழுது, தாகம் ஏற்படும் பொழுது, வயிற்று வலி, செரிமான பிரச்சனைகள், தலைவலி, போன்றவைகள் உங்களுக்கு இருக்கும் பொழுது மிதமான வெப்பமான நீரை நீங்கள் எடுத்துக் கொண்டால் இவைகளையெல்லாம் நீங்கள் தவிர்க்கலாம்.