6 Rajya Sabha MP selection better plan aiadmk
முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமாருக்கு மாநிலங்களவை எம்பி பதவியா..!
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு மாநிலங்களவை எம்பி பதவி கொடுக்கப்படும் என்ற தகவல் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
தமிழகத்திலிருந்து ராஜ்ய சபாவுக்கு தேர்வு செய்யப்பட்ட 6 எம்பிக்களின் பதவிக்காலம் விரைவில் முடிவடைய போகிறது.
திமுகவின் ஆர் எஸ் பாரதி, டிகேஎஸ் இளங்கோவன், ராஜேஷ்குமார்.
அதிமுகவின் சார்பில் எஸ் ஆர் பாலசுப்பிரமணியம்,நவநீத கிருஷ்ணன், விஜயகுமார், ஆகியோரின் பதவிக்காலம் தான் இப்பொழுது முடிவடையப் போகிறது.
இதனால் ஜூன் மாதம் இந்த காலிப்பணியிடங்களுக்கு சட்டசபையில் தேர்தல் நடைபெறுகிறது.
தமிழக சட்டசபையில் உள்ள எம்எல்ஏக்கள் பலத்தைப் பொறுத்து ஒரு ராஜ்யசபா பதவிக்கு 34 அல்லது 36 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவைப்படும்.
திமுகவுக்கு 3 எம்பி பதவி உறுதி
இந்த அடிப்படையில் திமுகவுக்கு 3 எம்பி பதவிகள் கிடைப்பது உறுதியாகி உள்ளது.
அதிமுக சார்பில் 2 எம்பி பதவிகள் கிடைக்கும் 6வது உள்ள எம்பி பதவியை காங்கிரஸ் திமுகவிலிருந்து கேட்டுப் பெறும் என தெரிய வருகிறது, இந்த நிலையில் திமுகவில் மூன்று பதிவுகள் யார் என்ற போட்டி இப்பொழுது தொடங்கியுள்ளது.
ராஜ்யசபா எம்பி பதவி
அதுபோல் ஒரே ஒரு ராஜ்யசபா எம்பி பதவிக்கு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பல மூத்த தலைவர்கள் இப்பொழுது போட்டியிடும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்த சீட்டை பெறுவதற்கு தற்போது எம்பியாக உள்ள ஒரு நபர் இப்போதே சாதுரியமாக காய் நகர்த்தி வருகிறார் என காங்கிரஸ் வட்டாரங்கள் பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.
இந்த நிலையில் அதிமுக சார்பில் இரு பதவிகள் யாருக்கு வழங்கப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
எம்பி போட்டியில் ஜெயகுமார்
6 Rajya Sabha MP selection இந்த இரு பதவிகளுக்கு கோகுல இந்திரா, பொன்னையன், செம்மலை, உள்ளிட்டோர் போட்டி போட்டு வருகிறார்கள்.
அவர்களுடன் போட்டியில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமி ஆட்சி அமைத்தபோது பத்திரிக்கையாளர்களை முதன்முதலில் சந்தித்தது ஜெயக்குமார் தான்.
கடுமையான நெருக்கடி
6 Rajya Sabha MP selection எத்தனையோ கடுமையான நெருக்கடி நேரத்தில் ஜெயக்குமார் சாதுர்யமாக செயல்பட்டு அதிமுகவை வழி நடத்தியுள்ளார் அதுமட்டுமில்லாமல் பத்திரிக்கையாளர்களுக்கு பதில் சொல்லியுள்ளார்.
எந்த கேள்வி கேட்டாலும், கோபப்படாமல் சிரித்தபடி பொறுமையாக பதில் சொல்பவர்.
இவர் கடந்த சட்டசபை தேர்தலில் ராயபுர தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார், எனவே இந்த முறை இவருக்கு எம்பி பதவி வழங்குவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது என அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கிறது.