600 apps are fake play in store full details
இணையதளம் மூலம் கடன் வாங்குவோர் கவனத்திற்கு 600 போலி செயலிகள் ரிசர்வ் வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது..!
இணையதளம் மூலம் இயங்கி வரும் சட்டவிரோதமான கடன் செயலிகளை கட்டுப்படுத்த புதிய சட்டம் கொண்டு வர வேண்டும் என இந்திய அரசிடம் ரிசர்வ் வங்கி பரிந்துரைத்துள்ளது, அதுமட்டுமில்லாமல் ஒரு எச்சரிக்கையும் மக்களுக்கு விடுத்துள்ளது.
தற்போதைய காலகட்டத்தில் அனைவரின் தேவையை பூர்த்தி செய்வதற்கு பணம் கட்டாயம் தேவைப்படுகிறது, பலரது வாழ்க்கையில் தேவைக்கேற்ப பணம் கிடைக்காத காரணத்தால், கடனாக பெறப்படும் தேவைகள் சில நேரத்தில் ஏற்படுகிறது.
கடனாக பணம் வங்கிகள் மூலம் பெறப்படும் பொழுது பாதுகாப்பானதாக இருக்கிறது, அனைத்தும் டிஜிட்டல் மயமாகி வருவதால்.
மோசடிகளும் அதிக அளவில் இணையதளம், மூலம் டிஜிட்டல், முறையில் நடத்தப்படுகிறது. இணையதளம் மூலம் கடன் வழங்கும் செயலிகள் அதிகமாக இயங்கி வருகிறது சட்டவிரோதமாக.
இதுபோன்ற சட்ட விரோதமான கடன் கொடுக்கும் செயலிகளால் பணத்தை இழந்த நபர்கள் அதிகம், உயிரை இழந்தவர்களும் அதிகமாக உள்ளார்கள் இந்தியாவில்.
இது குறித்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசியல் கட்சித் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தி வருகிறார்கள்.
இந்தியாவில் ஆன்ராய்ட் மொபைல்கள் மூலம் சுமார் 600 சட்டவிரோதமான கடன் கொடுக்கும் இணையதள செயலிகள் இயங்கி வருவதாக ரிசர்வ் வங்கி ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளது.
உடனடி கடன், இன்ஸ்டன்ட் கடன், போன்றவற்றை வழங்கும் சுமார் 1,100 கடன் செயலியல் இந்தியாவில் ஆண்ட்ராய்டு ஸ்டோர்களில் இருப்பதாக ரிசர்வ் வங்கி குழு கண்டறிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் 600 செயலிகள் சட்டவிரோதமாக இயங்கி வருவதாக ரிசர்வ் வங்கி கண்டறிந்து மத்திய அரசு தெரிவித்துள்ளது.
சட்டவிரோதமாக கடன் வழங்கும் செயலிகளை கட்டுப்படுத்த மத்திய அரசு உடனடியாக புதிய சட்டத்தை கொண்டுவர வேண்டும் என ரிசர்வ் வங்கி பரிந்துரைத்துள்ளது.
தொப்புளில் ஒரு சொட்டு எண்ணெய் வைத்தால் என்ன மாற்றம் உடலில் நிகழும்.
இதுகுறித்து கடந்த ஆண்டில் 2,562 புகார்கள் வந்துள்ளன இதுபோன்ற புகார்கள் கர்நாடகா, டெல்லி, ஹரியானா, மகாராஷ்டிரா, குஜராத், தமிழ்நாடு, உத்தரபிரதேசம், மேற்கு வங்காளம், ஆந்திர பிரதேசம், தெலுங்கானா, ஆகிய மாநிலங்களில் இருந்து அதிகமாக வருவதாக ரிசர்வ் வங்கி ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளது.
Kadalai mittai seivathu eappadi new idea 2021
இணையதளம் மூலம் கடன் வழங்கும் மொபைல் செயலியல் மக்களுக்கு பல்வேறு வகையில் கெடுதல்களை ஏற்படுத்துவதாக செய்திகள் மற்றும் சமூக வலைதளங்களில் அடிக்கடி இது குறித்து செய்திகள் வெளிவந்து கொண்டே இருக்கும்.