7 amazing fish health benefits list in tamil
குளிர் காலத்தில் மீன் சாப்பிடுவதால் இந்த நன்மைகளெல்லாம் கிடைக்கும் தெரிந்துகொள்ளுங்கள்..!
குளிர்காலம் தொடங்கி விட்டால் பல்வேறு வகையான உடல் உபாதைகள் சந்திக்க நேரிடும் இந்த காலநிலையில் நோய்வாய்ப்படும் வாய்ப்புகள் மிக மிக அதிகம்.
கொரோனா வைரஸ் நோய்த்தொற்று காலத்தில் உங்களுடைய நோய் எதிர்ப்பு சக்தியை நீங்கள் எப்போதும் பல மடங்கு அதிகரித்து வைத்திருக்க வேண்டும்.
சரியான உணவு பழக்க வழக்கம் மூலம் நோய் தாக்கும் அபாயம் குறையும், குளிர் காலத்தில் மீன் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும், என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
மீன்களில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன மருத்துவர்களின் பரிந்துரை படி வாரத்திற்கு குறைந்தது இரண்டு முறை மீன் இறைச்சி சாப்பிட்டால், உடலில் பல்வேறு வகையான உடல் உபாதைகள் ஏற்படுவது முற்றிலும் தவிர்க்கப்படும்.
நீங்கள் வாங்கும் மீன் ஆரோக்கியமானதா, இயற்கை முறையில் வளர்ந்த மீனா, என்று பார்த்து வாங்கவேண்டும் அது மட்டுமில்லாமல் அழுகிய மீன்கள் இருக்கக்கூடாது.
சளி மற்றும் இருமல்
மீனில் ஒமேகா-3 ஊட்டச்சத்து கொழுப்பு அமிலம் ஏராளமாக நிறைந்துள்ளதால், நுரையீரல் மற்றும் மூச்சுக் குழாயை பாதுகாக்கும் இதனால் சளி இருமலை தவிர்த்துவிடலாம்.
தோலுக்கு நல்லது
மீனில் அதிக அளவு ஒமேகா-3,மற்றும் ஒமேகா-6 அமிலம் இருப்பதால் அவற்றை சாப்பிடுவது தோலின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.
வைட்டமின் டி ஊட்டச்சத்து
மீனில் வைட்டமின் டி அதிகமாக நிறைந்துள்ளது குளிர்காலத்தில் அதிக அளவு மீன் சாப்பிட்டு வர உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் முழுவதும் கிடைக்கும்.
நல்ல கொழுப்பு ஊட்டச்சத்து
மீனில் அதிக அளவு நல்ல கொழுப்பு நிறைந்துள்ளது, மீனை தினந்தோறும் சாப்பிட்டு வர கண்கள் மற்றும் இதயம் பாதுகாக்கும்.
பக்கவாதம்
பக்க வாதம் உள்ளவர்கள் குளிர்காலத்தில் மீன்களை சாப்பிடுவதன் மூலம் உடலில் ஏற்படும் வீக்கத்தை குறைத்து விடலாம்.
பொடுகுத் தொல்லையில் இருந்து விடுபட எளிய சில குறிப்புகள்
மாரடைப்பைத் தடுக்கலாம்
மீனில் ஒமேகா-3 ஊட்டச்சத்து அதிகமாக நிறைந்துள்ளதால் இதயத் தமனிகளில் சேரும் தேவையற்ற கொழுப்பை குறைக்கும்பண்பு இருக்கிறது, இதனால் மீன் அடிக்கடி சாப்பிட்டு வந்தால் மாரடைப்பு ஏற்படுவதைத் தடுத்து விடலாம்.
These foods can cause bad breath 2022
பற்களை வலுவாக்கும்
மீன்களில் அதிக அளவு நியாசின் ஊட்டச் சத்து இருப்பதால் பற்கள் தேய்மானம் மற்றும் உடைவது முற்றிலும் தடுக்கப்படும் இதனால்.
பற்களில் கரை படிவது மஞ்சள் கரை உள்ளிட்ட கரைகளை மீனில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் நீக்கிவிடும்.