7 Amazing health benefits of keluthi fish

7 Amazing health benefits of keluthi fish

கெளுத்தி மீன் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது..!

பொதுவாக மீன் இறைச்சி என்பது அதிக புரதம் மற்றும் உடலுக்கு தேவையான அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்களின் நல்ல ஆதாரமாக இருக்கிறது.

அவற்றில் உயர்தர புரதம் நிறைந்த மற்றும் குறைந்த கலோரி கொண்ட ஒரு மீன் என்றால் அது கெளுத்தி மீன் என்று சொல்லலாம்.

இந்த மீன் இறைச்சியில் குறைந்த கலோரி உள்ளடக்கம் இருப்பதன் காரணமாக எடை குறைக்க விரும்பும் நபர்கள் அல்லது குறைந்த கலோரி உணவுகளை எடுத்துக் கொள்ள விரும்புபவர்கள் இதனை தேர்ந்தெடுக்கலாம்.

7 Amazing health benefits of keluthi fish

எடை குறைக்க உதவும்

கெளுத்தி மீனில் அதிக அளவு புரதச்சத்து மற்றும் குறைந்த கொழுப்பு உள்ளடக்கம் இருக்கிறது.

உடல் எடையை குறைக்க முயற்சிக்கும் மக்கள் கெளுத்தி மீன் தங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

இதில் அதிக புரதம் கொழுப்பு மற்றும் கலோரிகள் குறைவாக இருப்பதால் உடலில் அதிகப்படியான கெட்ட கொழுப்பை கரைக்க உதவுகிறது.

அதிகப்படியான புரதச்சத்து

கெளுத்தி மீன் உயர்தர புரதச்சத்தால் நிரம்பியுள்ளது அதாவது இது மனித உடலுக்கு தேவையான அனைத்து அத்தியாவசியமான அமினோ அமிலங்கள் மற்றும் ஒமேகா-3 ஊட்டச் சத்தை கொண்டுள்ளது.

நமது உடலில் உயிர் அணுக்களை சரி செய்வது, புதியவற்றை உருவாக்குதல், மிகவும் அவசியமாக தேவைப்படுகிறது.

தசைகள், திசுக்கள், மற்றும் ஒட்டுமொத்த உடலுக்கு தேவையான அடித்தளத்தை உருவாகிறது.

வளரும் குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள், மற்றும் இளம் வயதினர் தங்கள் உணவில் அதிக அளவில் இந்த கெளுத்தி மீனை சேர்த்து கொள்ளலாம்.

7 Amazing health benefits of keluthi fish

குறைந்த கார்போஹைட்ரேட்டுகள்

கெளுத்தி மீன் இறைச்சி கார்போஹைட்ரேட்கள் இல்லாத மற்றும் எடை இழப்புக்கு ஒரு சிறந்த ஆதாரமாக இருக்கிறது.

நீங்கள் மதிய உணவிற்கு இதை எடுத்துக் கொண்டாலும் உங்களுக்கு சோம்பல் அல்லது தூக்கம் போன்ற பிரச்சனைகள் வராது.

இரத்த அழுத்தம்

கெளுத்தி மீனில் குறைந்து சோடியம் அளவு இருக்கிறது கெளுத்தி மீனில் 100 கிராம் இறைச்சியில் 47 மில்லி கிராம் சோடியம் மட்டுமே நிறைந்துள்ளது.

உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள நபர்கள் கெளுத்தி மீனை தவறாமல் தங்கள் உணவில் சேர்த்துக் கொண்டால் ரத்தம் அழுத்தம் சம்பந்தமான பிரச்சினைகள் சரி செய்யப்படும்.

முக்கிய தனிமங்கள் நிறைந்துள்ளது

கெளுத்தி மீனில் துத்தநாகம், பொட்டாசியம், கால்சியம், போன்ற உடலுக்கு தேவையான முக்கிய தனிமங்கள் நிறைந்துள்ளன.

பொட்டாசியம், துத்தநாகம், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் காயமடைந்த திசுக்களை மறுபடியும் புதுப்பிக்கவும், உடலில் எலக்ட்ரோலைட் சமநிலை சீராக்கவும் உதவுகிறது.

மனித ஆயுளை அதிகரிக்கிறது

உடலில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிக அளவில் உள்ளவர்கள், குறைந்த அளவு ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களைக் கொண்ட உள்ளவர்களை விட சுமார் 2.2 ஆண்டுகள் வாழ்ந்ததாக மருத்துவ ஆராய்ச்சி மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

TNPSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு ஏப்ரல் 30ஆம் தேதி கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது..!

கெளுத்தி மீனில் ஒமேகா-3 கொழுப்பமிலங்கள் அதிக அளவில் நிறைந்துள்ளன மற்றும் மாரடைப்பு, மூளை பாதிப்பு, பக்கவாதம், போன்றவற்றை உடலில் குறைக்கிறது.

Construction Materials Price New in tamil 2022

மூளை ஆரோக்கியத்திற்கு

மீன் இறைச்சி சாப்பிடுவதால் மூளையின் ஆரோக்கியம் அதிக அளவில் மேம்படும் கெளுத்தி மீனில் உள்ள (DHA )இது மூளையின் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது, இது அல்சர் மற்றும் பார்க்கின்சன் நோய் அபாயத்தையும் குறைக்கின்றது.

Leave a Comment