அவகோடா பழத்தை சாப்பிடுவதால் ஏற்படும் 7 நன்மைகள்(7 Benefits of Eating Avocado Fruit in tamil)
மனிதர்களுக்கு ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் மிகச்சிறந்த பங்கு வகிக்கிறது இந்த அவகோடா பழம் இதில் நல்ல கொழுப்புகள் மக்னீசியம், பொட்டாசியம், வைட்டமின் சி, வைட்டமின் பி1, வைட்டமின் பி6, மற்றும் கார்போஹைட்ரேட்கள் அடங்கியுள்ளது.
எண்ணெய் சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ள இப்பழத்தில் வைட்டமின், புரதம் மற்றும் தாது உப்புகள் அதிக அளவில் உள்ளது. வறண்ட சருமத்தினருக்கு இப்பழம் ஒரு வரப்பிரசாதம் எண்ணெய் சத்து மிகுந்த அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பில் முக்கிய இடம் வகிக்கிறது.
அவகோடா பழத்தை அப்படியே சாப்பிடுவதை விட மில்க் ஷேக் போட்டு குடித்தால் அற்புதமாக இருக்கும் இங்கு அவகோடா பழத்தை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி பட்டியலிடப்பட்டுள்ளது அதை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
வாழைப்பழத்தை விட மிகச் சிறந்தது
இரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்கள் இந்த பழத்தை கண்டிப்பாக எடுத்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால் உடலில் ரத்த அழுத்தத்தை சீராக வைத்துக் கொள்வதற்கு பொட்டாசியம் மிகவும் அவசியமாக தேவைப்படுகிறது. பொட்டாசியம் சத்தும் வாழைப்பழத்தில் தான் அதிகம் உள்ளது என்று கருதவேண்டாம் வாழைப்பழத்தை விட அதிக அளவில் பொட்டாசியத்தை அவகோடா பழம் கொண்டுள்ளது .
கொலஸ்ட்ராலை குறைத்து விடும்
இந்த அவகோடா பழத்தை தொடர்ந்து உங்கள் உணவுப் பட்டியலில் சேர்த்து வந்தால் உடலில் உள்ள கொலஸ்ட்ரால் பிரச்சனை குறையும். அது மட்டுமில்லாமல் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளின் அளவையும் குறைக்கிறது மற்றும் நல்ல கொழுப்பு அளவையும் அதிகரிக்கிறது.
புற்றுநோயை எதிர்க்கும் பண்புகள் கொண்டுள்ளது
அவகோடா பழத்தில் இருக்கும் ஆன்டி-ஆக்சிடன்ட்கள், பாலி நியூட்ரியன்ட்டுகல், நோய் எதிர்ப்பு சக்தியை உடலில் வலிமை படுத்துகிறது மற்றும் ப்ரி-ராடிக்கல்களை எதிர்த்துப் போராடி புற்றுநோய் செல்களை உற்பத்தியாகாமல் தடுக்கிறது.
நார்ச்சத்து நிறைந்துள்ளது
உடல் எடையை குறைக்க விரும்பும் நபர்கள் அவகோடா பழத்தை அதிக அளவில் எடுத்துக்கொள்ளலாம் ஏனென்றால் இதில் அதிக அளவில் நார்ச்சத்து உள்ளது. இதனால் உடல் எடை குறைக்கவும், உயர் ரத்த சர்க்கரையின் அளவை குறைக்கவும் உதவும், அது மட்டுமில்லாமல் செரிமான பிரச்சனைகள் இருந்தாலும் அவற்றை சரிசெய்து விடுகிறது.
சிறுநீரகங்களுக்கு நன்மை அளிக்கிறது
சிறுநீரகப் பிரச்சினைகள் இருப்பவர்கள் இந்த பழத்தை எடுத்துக்கொள்ளலாம். இந்த பழத்தில் இருக்கும் ஒலியிக் அமிலம் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் சிறுநீரக சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை தடுக்கிறது. எனவே உங்களுக்கு சிறுநீரக பிரச்சனைகள் வராமல் இருக்க அவகோடா பழத்தை அடிக்கடி எடுத்துக் கொள்ளுங்கள்.
எங்கள் YouTube சேனலைக் காண இங்கே கிளிக் செய்க
கண் பார்வையே மேம்படுத்துகிறது
இந்த பழத்தில் லூடின் மற்றும் ஸிக்ஸாக்தைன் பண்புகள் அடங்கியுள்ளது இந்த கரோட்டினாய்டுகள் கண்புரை மற்றும் மாகுலர் திசு செயலிழப்பு கண்களில் ஏற்படுவதை குறைக்கவும் செய்கிறது. வேறு சில கண்பார்வை பிரச்சனைகளை சரி செய்கிறது ஆரோக்கியமான கண் பார்வைக்கு இந்த பழம் உதவுகிறது.
coronavirus 3rd wave in India precautions Now
ஆர்த்ரிடிஸ்
மருத்துவ ஆய்வுகளில் அவகோடா பழத்தில் உள்ள ஆர்த்ரிடிஸ் சேர்மங்கள் வலி மற்றும் இதர எலும்பு சம்பந்தமான பிரச்சினைகளை சரி செய்வதாக தெரியவந்துள்ளது. எனவே உங்களுக்கு வலுவான எலும்புகள் தேவை என்றால் இந்த பழத்தை உங்கள் உணவுப் பட்டியலில் சேர்த்துக் கொள்ளுங்கள்.