7 best foods reduce symptoms of asthma
ஆஸ்துமா பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமா? அப்ப இந்த உணவுகளை அதிகமாக எடுத்துக் கொள்ளுங்கள்..!
இன்றைய காலகட்டத்தில் மாசடைந்த சுற்றுச்சூழலால் பெரும்பாலான மக்கள் ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வருகிறார்கள்.
சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இந்த பிரச்சனையால் கஷ்டப்பட்டு வருகிறார்கள்.
ஆஸ்துமா என்னும் நிலையானது எப்போதும் ஒருவரது சுவாசக்குழாய் வீங்கி அதை சுற்றியுள்ள தசைகள் இறுக்கமடைந்து, அந்த சுவாசக்குழாயில் சளி தேங்கி, காற்று சரிவர செல்ல முடியாமல், போகும் போது இது ஏற்படுகிறது.
ஆஸ்துமாவினால் பாதிக்கப்பட்டவர்கள் மூச்சு விடுவதில் மிகுந்த சிரமத்தை சந்திப்பார்கள் இதனால் மூச்சுத் திணறல், நெஞ்சு வலி, இருமல், என பல்வேறு வகையான உடல் உபாதைகள் ஏற்பட தொடங்கிவிடும்.
ஆஸ்துமா பிரச்சினையை கொண்டவர்களுக்கு சிகிச்சையின்போது இன்ஹேலர் பயன்படுத்தப்படுகிறது.
இருப்பினும் இந்த ஆஸ்துமா நோயை குணப்படுத்த மற்றும் கட்டுப்படுத்த ஒரு சில பழங்கள் மற்றும் காய்கறிகல் இருக்கின்றன, அவற்றை உங்கள் உணவில் அடிக்கடி சேர்த்துக் கொண்டால் போதும் இதனுடைய தன்மையை குறைத்து விடலாம்.
குடைமிளகாய்
குடைமிளகாயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிக அளவில் நிறைந்துள்ளது வைட்டமின் சி மற்றும் பைட்டோ நியூட்ரியன்ட்டுகள் போன்றவை அதிகமாக நிறைந்துள்ளது.
எனவே இந்த குடைமிளகாயை சுவாசப் பிரச்சினை உள்ளவர்கள் அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் போதும் ஆஸ்துமா போன்ற சுவாச பிரச்சனைகள் நீங்கி சுவாசம் அமைப்பின் ஆரோக்கியம் மேம்படும்.
பச்சை பட்டாணி
பச்சை பட்டாணியில் வைட்டமின் கே, வைட்டமின் சி, வைட்டமின் ஏ, போலிக் அமிலம், நார்ச்சத்து மற்றும் கால்சியம் போன்றவை அதிக அளவில் நிறைந்துள்ளன.
எலும்புகளின் வலிமை மற்றும் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிப்பது, எலும்பு முறிவு அபாயத்தை குறைக்கிறது, குறிப்பாக இதில் உள்ள வைட்டமின்கள் பி மன இறுக்கத்தை குறைத்துவிடுகிறது.
அவகோடா பழம்
அவகோடா பழத்தில் ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் நார்ச் சத்து, மெக்னீசியம், வைட்டமின் ஏ, வைட்டமின் சி, ஃபோலேட், போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன நுரையீரல் தொடர்பான நோய்களை குணப்படுத்தும்.
ஆரஞ்சு பழம்
ஆரஞ்சு பழத்தில் கனிமச்சத்துக்கள், வைட்டமின்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிக அளவில் நிறைந்துள்ளன.
முக்கியமாக இப்பழத்தில் வைட்டமின் சி மற்றும் பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன, இவை அனைத்துமே நுரையீரல் சம்பந்தமான நோய்களை குணப்படுத்தும் தன்மை கொண்டது.
தக்காளி ஜூஸ்
7 best foods reduce symptoms of asthma தக்காளியில் வைட்டமின் சி, வைட்டமின் பி மற்றும் பொட்டாசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிக அளவில் நிறைந்துள்ளன.
இது தவிர இதில் லைகோபைன் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிக அளவில் நிறைந்துள்ளன, இது இதய நோய் மற்றும் குறிப்பிட்ட வகையான புற்றுநோய்களில் அபாயத்தை குறைக்கிறது.
இஞ்சி
இஞ்சியில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் நிறைந்துள்ளன இது மன அழுத்தத்தைக் குறைக்கும் டிஎன்ஏ சேதம் அடைவதை தடுக்கும் மேலும் சில ரத்த அழுத்தம் இதய நோய் மற்றும் நுரையீரல் நோய் போன்ற பல நோய்களை எதிர்த்துப் போராடி உடலுக்கு பல்வேறு நன்மைகளை அளிக்கும்.
பசலைக்கீரை
7 best foods reduce symptoms of asthma கீரைகளில் பசலைக் கீரை, புரோட்டின், இரும்பு சத்து, வைட்டமின்கள், பொட்டாசியம், மெக்னீசியம், வைட்டமின் கே, நார்ச்சத்து, கனிமச்சத்து, தயாமின், பாஸ்பரஸ், மற்றும் வைட்டமின் ஏ போன்ற அதிகமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்து உள்ளன.
இவை அனைத்தும் தலை முடி மற்றும் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு மிக நல்லது அதோடு இது ஆஸ்துமாவின் அறிகுறிகளை முற்றிலும் குறைத்து விடுகிறது.