7 Best lung cancer symptoms in tamil
நுரையீரல் புற்றுநோய் வருவதற்கான அறிகுறிகள் என்ன..!
ஒரு நபரின் உயிரை பொறுமையாக அமைதியாக இருந்து அழிக்கும் நோய்கள் புற்றுநோய்.
புற்றுநோயில் மார்பகப் புற்றுநோய், கர்ப்பப்பை புற்றுநோய், இரத்த புற்றுநோய், தொண்டை புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய், என பல வகைகள் உள்ளது.
இதில் ஒரு சில புற்றுநோய்கள் வந்தால் ஆரம்பத்தில் அறிகுறி என்பது தெரியவே தெரியாது.
அப்படிப்பட்ட புற்றுநோயில் ஒன்றுதான் நுரையீரல் புற்றுநோய் இந்த பதிவில் நுரையீரல் புற்றுநோய் வருவதற்கான அறிகுறிகள் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளலாம்.
நுரையீரல் புற்றுநோய் வர முக்கிய காரணம் என்ன
புகை பிடித்தல் அல்லது புகை பிடிப்பவர் விடும் காற்றை சுவாசிப்பது, தொழிற்சாலையில் இருந்து வரும் புகை, வாகன புகை, போன்ற காரணங்களால் நுரையீரல் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
தொடர்ந்து வறட்டு இருமல்
தொடர்ச்சியாக இருமல் வந்துகொண்டே இருந்தால் அது நுரையீரல் புற்றுநோய்க்கான முதல் அறிகுறியாக இருக்கலாம்.
நாள்பட்ட நிலையில் ஏதேனும் மாற்றம் இருந்தால் உடனே கவனிக்க வேண்டும்.
வரட்டு இருமல் அல்லது சளி இருமல் வந்தால், இருமலின் போது ரத்தக் கசிவு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகுவது மிகவும் நல்லது.
மூச்சுத் திணறல்
இந்த புற்றுநோய் இருக்கும் போது மூச்சு விடுவதில் சிரமம் இருந்துகொண்டே இருக்கும்.
நுரையீரலில் புற்றுநோய் இருந்தால் சுவாசப் பாதையில் அடைப்பு ஏற்பட்டு மூச்சு திணறல் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
கொஞ்சம் தூரம் நடந்தால்கூட சுவாசிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுவிடும்.
தொடர்ந்து காய்ச்சல்
சாதாரணமாக காய்ச்சல் என்றால் சில மணி நேரத்திற்கு உடல் வெப்பநிலை மாறுபடலாம், ஆனால் நுரையீரலில் புற்றுநோய் இருந்தால், எப்போதும் காய்ச்சல் இருந்து கொண்டே இருக்கும் உடலில்.
நுரையீரல் பகுதியில் வலி
இந்த புற்றுநோய் இருந்தால் நுரையீரல் பகுதியில் வலி ஏற்படும், வேகமாக சிரிக்கும்போது, தூங்கும்போது, திரும்பி படுத்தால், நுரையீரல் இருக்கும், பகுதியில் கடுமையான வலி ஏற்படும்.
நுரையீரலில் நீர் கோர்த்தல் போன்றவை இந்த புற்றுநோய்க்கான முக்கிய அறிகுறி
வயிற்றுப்போக்கு ஏற்படும்
நுரையீரல் புற்றுநோய் இருக்கும்போது திடீரென்று அதிகமான வயிற்றுப்போக்கு ஏற்படும் சளி கலந்த மலம் வெளியேறும்.
இந்த அறிகுறி தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
எலும்புகளில் வலி
7 Best lung cancer symptoms எலும்புகளில் புற்றுநோய் செல்களைப் பரப்பி முதுகு அல்லது உடம்புகளில் வலியை ஏற்படுத்த தொடங்கிவிட, அதுவும் தூங்கும் போதும்,திரும்ப முடியாத, அளவிற்கு உடலில் கடுமையான வலி ஏற்படும்.
உடல் எடையில் மாற்றம்
7 Best lung cancer symptoms சாதாரணமாக நீங்கள் உடல் எடையை குறைப்பதற்கு முயற்சி செய்து கொண்டிருக்கும் போது அல்லது உடற்பயிற்சி மேற்கொள்ளும் போது உடல் எடை குறைதல் எந்த ஒரு மாற்றமும் இல்லை.
ஆனால் திடீரென்று உங்களின் உடலில் எடை குறைந்தால் அது நுரையீரல் புற்றுநோய்க்கான அறிகுறியாக இருக்கலாம்.