திருமண வாழ்க்கையில் இந்த வழிமுறைகளை பின்பற்றினால் நீங்கள் சந்தோஷமாக இருக்கலாம் (7 Best Tips for long term married life)
இந்த உலகில் காதல் என்பது எல்லா உயிரினங்களின் ஆத்ம திருப்தி இது ஒரு உறவை இயக்கம் எரிபொருள் மற்றும் அதை உயிரோடு வைத்திருக்கவும் மிகவும் முக்கியமாக உள்ளது. வாழ்க்கையில் பல ஆயிரக்கணக்கான தம்பதிகள் தங்கள் பிசியான அட்டவணை அல்லது பிற காரணங்களால் காதலை உயிரோடு வைத்திருப்பதில்லை.
ஒரு உறவில் உண்மையான காதல் இருக்கும் போது சிக்கல்கள் ஏற்படுவதில்லை. உங்கள் காதல் உறவை வலுவாகவும் மகிழ்ச்சியாகவும் நீண்ட காலத்திற்கு நிலைத்து நிற்கவும் செய்ய உங்கள் காதலை உயிரோடு வைத்திருக்க வேண்டியது மிகவும் அவசியம்.
அதனால் தினசரி உங்கள் வாழ்க்கையில் சிறிது நேரம் உங்கள் வாழ்க்கைத் துணையுடன் மகிழ்ச்சியாகவும் அன்பு கலந்த காதல் செய்வதற்கு நேரம் ஒதுக்குங்கள்.
இது மட்டுமே உங்கள் வாழ்க்கையின் திருப்த்தி, வாழ்க்கையின் அர்த்தம், வாழ்க்கையின் சந்தோஷம், வாழ்க்கையில் நிம்மதி, போன்றவைகளைக் கொண்டு வரும் மேலும் நீண்ட கால உறவின் தரத்தை இது மேம்படுத்துகிறது.
உங்கள் உறவில் நீங்கள் எவ்வாறு அதிக காதல் கொள்ள முடியும் என்பதை அறிய விரும்பினால் தம்பதிகளை ஊக்குவிக்கும் காதல் நடவடிக்கைகள் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.
திடீரென்று பரிசு கொடுங்கள்
ஒரு உறவில் பரிசு கொடுப்பது அந்த உறவின் தரத்தையும், மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும், ஏற்படுத்தும் மேலும் நீங்கள் பரிசு கொடுக்கும் பொழுது எப்போதும் மூடப்பட்டிருப்தை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
இதனால் உங்கள் வாழ்க்கைத்துணை பரிசை பார்த்தவுடன் மகிழ்ச்சி அடைவார்கள் மேலும் பரவசப்படுவார்கள் இது பிஸியான வாழ்க்கையுடன் இருப்பவர்களுக்கு உதவ ஒரு உதவி குறிப்பு
வாழ்த்து அட்டைகள்
உங்கள் காதல் குறிப்பைக் கொண்டு எளிய அல்லது கையால் செய்யப்பட்ட அட்டைகள் உங்கள் உறவுக்கு அதிசயங்களை செய்யும் கூடுதலாக பூக்கள் பலூன்கள் சாக்லேட்கள் போன்ற எந்த ஒரு பரிசுடன் இதை கொடுக்கலாம்.
உங்கள் துணை தற்செயலாக அதை கண்டுபிடிக்கும் இடத்தில் கூட அதை மறைத்து வைக்க முடியும். நினைவில் கொள்ளுங்கள் ஆச்சரியங்கள் எப்போதும் உங்கள் வாழ்க்கையில் பரவசப்படுத்தும்
சமையல் செய்யுங்கள் ஒன்றாக
தம்பதிகள் மாதத்திற்கு இரு முறையாவது ஒன்றாக சேர்ந்து தங்களுக்கு பிடித்தமான உணவுகளை சமையுங்கள் அதுமட்டுமில்லாமல் சமையலறை என்பது பழங்கால முதல் இன்றுவரை சந்தோசங்கள் தரும் ஒரு இடமாகவே உள்ளது திருமண வாழ்க்கையில்.
வீட்டில் சமையலறையில் எப்பொழுது மகிழ்ச்சி உண்டாக கூடிய நுட்பங்கள் மறைந்து இருக்கிறது அதை தம்பதிகள் கண்டுபிடித்தது தங்களுக்கு பிடித்தார் போல் வாழ்க்கையில் மாற்றிக்கொள்ள வேண்டும்
புதிதாக முயற்சி செய்யுங்கள்
உங்கள் மனதிற்குள் உங்கள் வாழ்க்கைத்துணை இதுபோல் ஆடை உடுத்தினால் அழகாக இருக்கும் மேலும் இது அவர்களின் அழகை அதிகரிக்கும் என்று ஒரு கற்பனை எப்பொழுதும் உங்களுக்கு இருக்கும்.
அதற்கு ஏற்றார் போல் ஒரு ஆடையைக் கொடுத்து அவர்களை சந்தோஷப்படுத்தும் இதன் மூலம் உங்களுக்கும் மன திருப்தி உண்டாகும் அதுமட்டுமில்லாமல் உங்கள் உறவில் நெருக்கம் பலமடங்கு அதிகரிக்கும்.
மசாஜ் செய்து விடுங்கள்
உங்கள் வாழ்க்கைத் துணைக்கு மாதத்திற்கு இரண்டு முறையாவது மசாஜ் செய்து விடுங்கள் அதுமட்டுமில்லாமல் நீங்கள் மசாஜ் செய்ய முடிவு செய்கிநாள், அதற்கான நேரம், குறித்துக் கொள்ளுங்கள் இதன் மூலம் உங்களுடைய காதல் நெருக்கம் அதிகரிக்கும் அதுமட்டுமில்லாமல் உங்களுக்குள் ஒரு புத்துணர்ச்சி ஏற்பட்டு விடும்.
வீட்டை அலங்காரம் செய்யுங்கள்
தம்பதிகள் இருவரும் தங்களுடைய வீட்டை எவ்வளவு அழகாக வைத்துக்கொள்கிறார்கள் அந்த அளவிற்கு அவர்களுடைய நெருக்கம் அதிகரிக்கும் காரணம் இருவரும் ஒன்றாக சேர்ந்து வாழும் இடத்தை அழகாக அமைப்பதால்.
உடற்பயிற்சி இல்லாமல் எடை குறைக்க 6 எளிய வழிகள்
இதனால் அவர்களுக்குள் அழகான காதல் உருவாகிவிடும் அதுமட்டுமில்லாமல் இது அவர்களுடைய வாழ்க்கையில் எப்பொழுதும் சந்தோசத்தை கொடுத்துக்கொண்டே இருக்கும்.
எங்கள் YouTube சேனலைக் காண இங்கே கிளிக் செய்க
பிடித்தமான இடத்திற்கு செல்லுங்கள்
உங்களுக்கு காதல் திருமணம் என்றால் முதல்முறையாக இருவரும் சந்தித்த இடம் அல்லது தங்களுடைய காதலை வெளிப்படுத்திய இடத்துக்கு அடிக்கடி செல்லுங்கள்
Best 5 healthy kidney diet food list in tamil
இயற்கையான இடங்கள் அல்லது கடற்கரை போன்ற இடங்களுக்கு இருவரும் ஒன்றாக சேர்ந்து கைகோர்த்து நீண்டதூரம் நடை பயணம் செல்லுங்கள் இது உங்களுடைய காதலை வலுவாக்கி விடும்