7 Habits Can Cause Bone Depreciation new tips
இந்த பழக்கவழக்கங்கள் இருந்தால் எலும்பு தேய்மானம் அதிகமாக இருக்கும் எதையெல்லாம் தவிர்க்க வேண்டும்..!
40 வயதிற்கு மேல் எலும்பு தேய்மானம் மூட்டு வலி ஆகியவை பெரும்பாலான நபர்களுக்கு ஏற்பட்டுவிடுகிறது இது இப்பொழுது மிக இயல்பான ஒரு செயலாக மாறிவிட்டது.
பொதுவாக எலும்புகள் தான் மனிதனுடைய உடலை பாதுகாக்கிறது நாம் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு நகர்ந்து செல்வதற்கு காரணம் இருப்பது உடலில் உள்ள அனைத்து எலும்புகள் தான்.
அவை என்னென்ன விஷயங்களால் தேய்மானம் அடைகின்றன எப்படி தடுக்கலாம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
மனித உடலில் உள்ள எலும்புகள் தான் கால்சியம், பாஸ்பரஸ், போன்ற தனிமங்கள் சேமித்து வைக்கப்படுகின்றன.
இந்த ஊட்டச்சத்துக்கள் தான் மனித உடலை மிக வலிமையுடன் வைத்திருக்க உதவுகிறது, சில ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக அதன் அடிப்படையில் எலும்பு தேய்மானம் ஏற்படுகிறது.
அதுதவிர என்ன மாதிரியான வாழ்க்கை முறை மாற்றங்கள் எலும்பு தேய்மான பிரச்சனைக்கு முக்கிய காரணமாக இருக்கிறது, எவற்றை தவிர்க்க வேண்டும் என்று மிகத் தெளிவாக இந்தப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
புகைப்பிடிக்கும் பழக்கம்
புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு எலும்பு சம்பந்தமான பிரச்சனைகள் அதிகமாக ஏற்படும் சிகரெட்டில் உள்ள புகையை உள்ளிழுக்கும் போது.
உங்கள் உடலில் புதிய ஆரோக்கியமான எலும்பு திசுக்கள் எளிதில் உருவாக்குவதில்லை.
இது நீங்கள் புகைக்கும் நேரத்தை பொருத்து மாறுபடும், இதனை குணப்படுத்த அதிக வாய்ப்புகள் உள்ளது.
ஆனால் நீங்கள் புகைப்பிடிக்கும் பழக்கத்தை முற்றிலும் கைவிட்டால் இந்த அபாயங்களைத் தவிர்க்க முடியும்.
மது குளிர்பானங்கள் போன்றவை
மது அருந்துவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் ஆல்கஹால் மனித உடலில் உள்ள கால்சியத்தை உறிஞ்சிவிடுகிறது இது எலும்புகளை மிகவும் பலவீனப்படுத்திவிடும்.
கார்போஹைட்ரேட் எனப்படும் சர்க்கரை சேர்த்த பானங்களை எடுத்துக் கொள்ளும் போது எலும்புகள் மிகவும் பலவீனமாகிவிடும்.
சோடா போன்ற சர்க்கரை அதிகம் சேர்க்கப்பட்ட பானங்கள் எலும்பு தேய்மானத்தை அதிக அளவில் ஏற்படுத்திவிடுகிறது.
ஒல்லியாக இருக்கும் நபர்கள்
உடல் பருமன் உள்ளவர்களுக்கு தான் அதிகமான எலும்பு தேய்மானம், மூட்டு வலி ஆகிய பிரச்சினைகள் ஏற்படும் என்று பல தரப்பு மக்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் உயரத்திற்கு ஏற்ற எடை இல்லாமல் இருப்பவர்களுக்கு இந்தப் பிரச்சினை ஏற்படும், எடை குறைவாக இருந்தால் எலும்பு முறிவு, எலும்பு தேய்மானம் ஏற்பட அதிக வாய்ப்புகள் இருக்கிறது.
என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள், அதனால் எடை குறைவாக இருப்பவர்கள், எடை அதிகரிப்பதற்கு செய்ய வேண்டிய செயல்களை செய்வது நல்லது.
சைக்கிளிங் பயிற்சி
தினமும் சைக்கிளிங் போன்ற உடற்பயிற்சிகளில் நீங்கள் ஈடுபடுவது உடலுக்கு நல்லது குறிப்பாக இதயம் மற்றும் நுரையீரலை வலிமையாக்க இது உதவும்.
நடைப்பயிற்சி, நடனம், மலை ஏறுதல், மற்றும் நீச்சல் போன்ற தண்ணீர் எதிர்ப்பு பயிற்சிகள் போன்றவற்றை மேற்கொள்ளுவது உங்களுடைய எலும்புகளை மிகவும் வலுவாக்க உதவும்.
வைட்டமின் டி ஊட்டச்சத்து
மனித உடலின் இயக்கத்திற்கு வைட்டமின் டி ஊட்டச்சத்து மிக அடிப்படையானது ஒன்று, உங்களுடைய உடலுக்கு தேவையான அளவு வைட்டமின் டி சூரிய ஒளியில் இருந்து இன்னும் சில உணவுகளில் இருந்து கிடைக்கும்.
காலை நேரத்தில் சுமார் 20 நிமிடங்கள் சூரிய ஒளியில் நில்லுங்கள் முழு தானியங்கள், பழங்கள், பால் சார்ந்த பொருட்கள், ஆகியவற்றை அதிக அளவில் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
அதிக அளவு சோடியம்
உணவில் அதிக அளவில் உப்பு சேர்த்துக் கொள்வது சோடியத்தின் அளவை பல மடங்கு அதிகரிக்க செய்யும், உடலில் உள்ள கால்சியத்தின் அளவு இதனால் குறையும்.
இயல்பாகவே ரொட்டி, சிப்ஸ், போன்ற பதப்படுத்தப்பட்ட உணவுகளில் உப்பு அதிகமாக சேர்க்கப்பட்டிருக்கும்.
அவை உடலில் சோடியத்தின் அளவை திடீரென்று அதிகரிக்கும் ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் 2 கிராம் அளவு மட்டுமே நம்முடைய உணவில் சோடியத்தை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
அதிகமான வேலைப்பளு
அதிகமாக நடந்தாலோ வேலை செய்தல் உடல் விரைவில் சோர்வடையும், எலும்புகள் சோர்வடையும், மூட்டுவலி போன்ற பிரச்சினைகளும் ஏற்படும்.
ஆனால் அதிலும் ஒரே இடத்தில் கணினி முன் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கு எலும்பு சம்பந்தமான பிரச்சனைகள் அதிகமாக ஏற்பட்டுவிடும்.
ஆயுர்வேத மருத்துவம் தரும் சிறந்த குறிப்புகள்..!
அதற்கு காரணம் ஒரே இடத்தில் அசைவின்றி அமர்ந்திருப்பது தான் உடலை எப்போதும் சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ள வேண்டியது மிக முக்கியம்.
Amazing 7 types of kiss in kamasutra in tamil
ஒரே இடத்திலிருந்து வேலை செய்ய வேண்டிய நிர்பந்தம் இருக்கிறவர்கள், அதற்கேற்றபடி தினசரி உடற்பயிற்சி செய்வதற்கு கொஞ்ச நேரம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.