7 worst Side Effects Caused by Smoking

7 worst Side Effects Caused by Smoking

சிகரெட் பிடிப்பது புற்றுநோயை மட்டுமில்லாமல் இந்த கொடூரமான நோய்களையும் ஏற்படுத்தும் உஷாராக இருங்கள்..!

புகைப்பிடிப்பது ஆரோக்கியமற்ற பழக்கம் என்பதை நாம் அனைவரும் அறிவோம்.

அனைத்து திரைப்படங்களிலும் ஏன் சிகரெட் அட்டைப் பெட்டிகளில் கூட புகைபிடித்தலின் தீமைகளை பற்றி குறிப்பிட்டு இருப்பார்கள்.

ஆண்டுதோறும் புகை பிடிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது ஒரு கவலைக்குரிய விஷயம் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

புகைப்பிடிப்பது நுரையீரலை மட்டும் பாதிக்கும் அதனால் அதனை தொடரலாம் என பல நபர்கள் தவறாக நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

புகைப்பிடிப்பது விரைவான மன அழுத்தத்தை குறைக்கும் என்று நீங்கள் நினைக்கலாம் அது உங்கள் ஆயுள் காலத்தையும் குறைக்கும் விரைவில் மரணத்தை ஏற்படுத்தும்.

ஆனால் மரணத்திற்கு முன் சில பயங்கரமான நோய்கள் மற்றும் மோசமான உடல்நிலை களையும் நீங்கள் சந்திப்பீர்கள்.

பலரும் அறியாத புகைப்பிடிப்பதால் ஏற்படும் மிகக் கொடூரமான சில நோய்கள் பற்றி இந்த கட்டுரையில் பட்டியலிடப்பட்டுள்ளது.

7 worst Side Effects Caused by Smoking

 

நுரையீரல் புற்றுநோய்

மற்ற வகை புற்று நோயை விட அதிகமான மக்கள் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்படுகிறார்கள், நுரையீரல் புற்று நோய்க்கான ஆபத்து காரணிகளில் புகை பிடிப்பது முதலிடத்தில் உள்ளது.

90% நுரையீரல் புற்றுநோய்க்கு காரணமாக இருக்கிறது நுரையீரல் புற்று நோய் கண்டறியப்பட்டு 5 ஆண்டுகளுக்கு பிறகு உயிருடன் இருப்பதற்கான வாய்ப்புகள் மிக மிக குறைவு.

சிஓபிடி என்பது நுரையீரல் செயல்பாட்டை தடைசெய்யும் நுரையீரல் நோய் ஆகும் இதை சுவாசிப்பதை கடினமாகிவிடும் இது தீவிரமான நீண்டகால இயலாமை மற்றும் மரணத்தை ஏற்படுத்தும்.

இது மக்கள் விரும்பும் விஷயங்களில் செய்யவோ அல்லது நண்பர்களை பார்க்க முடியாமல் ஒரு இடத்தில் முடக்கிவிடும் சிஇஓ பிடியில் 85 சதவீதம் முதல் 90 சதவீதம் வரை சிகரெட் புகைப்பதால் ஏற்படுகிறது.

7 worst Side Effects Caused by Smoking

பக்கவாதம்

புகைபிடித்தல் உங்கள் தமனிகளை பாதிக்கும் என்பதால் அது பக்கவாதத்தை தூண்டிவிடும் உங்கள் மூளைக்கு ரத்த ஓட்டம் தற்காலிகமாகத் தடைப்படும் போது பக்கவாதம் ஏற்படும்.

மூளை செல்கள் ஆக்சிஜனை இழந்து உயிரிழக்க தொடங்கிவிடும் பக்கவாதம் மந்தமான பேச்சு மூளையின் செயல்பாட்டில் மாற்றம் மற்றும் மரணத்தை ஏற்படுத்தும்.

பக்கவாதம் அமெரிக்காவில் உயிரிழப்புகளை 5வது முக்கிய காரணியாக வைத்துள்ளது.

ஆஸ்துமா

ஆஸ்துமா என்பது ஒரு நாள்பட்ட நுரையீரல் நோய் ஆகும் இது உங்கள் நுரையீரலுக்கு உள்ளேயும் வெளியேயும் காற்று செல்வதை கடினமாக்கி விடும்.

சிகரெட் புகை காற்று பாகங்களை எரிச்சலூட்டுவதால்  திடீர் மற்றும் கடுமையான ஆஸ்துமா தாக்குதலை ஏற்படுத்திவிடும்.

நீரிழிவு நோய்

நீங்கள் புகை பிடித்தால் 2ம் வகை நீரிழிவு நோய் வருவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது, புகைப்பிடிப்பவர்களுக்கு 2ம் வகை நீரிழிவு நோய் வருவதற்கு 40 முதல் 60 சதவீதம் கூடுதல் வாய்ப்பு இருக்கிறது.

இதய மற்றும் சிறுநீரக நோய்கள் மற்றும் கால்களுக்கு மோசமான ரத்த ஓட்டம், குருட்டுத் தன்மை மற்றும் நரம்பு சேதம் போன்ற சிக்கல்களை அதிகமாக்குகிறது.

பல வகையான புற்றுநோய்கள்

புற்று நோயாளிகள் மற்றும் புற்றுநோயிலிருந்து குணமானவர்கள் புகைப்பிடிப்பதை தொடர்ந்தாள் மேலும் புற்றுநோய் உருவாவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது.

புகைபிடித்தல் கல்லீரல் மற்றும் பெருங்குடல் உட்பட குறைந்தது 10 க்கும் மேற்பட்ட புற்றுநோய்களை உடலில் ஏற்படுத்துகிறது.

இருதய நோய்

புகைபிடித்தல் உங்கள் இதயம் உட்பட உங்கள் உடலிலுள்ள அனைத்து உறுப்புகளையும் கடுமையாக பாதிக்கும்.

புகைபிடித்தல் தமனிகளில் அடைப்பு மற்றும் குறுகளை ஏற்படுத்தும் அதாவது உங்கள் இதயத்திற்கு குறைந்த இரத்த ஓட்டம் மற்றும் ஆக்ஸிஜன்.

போலிக் ஆசிட் மாத்திரை பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் என்ன…!

இனப்பெருக்கத் திறனை பாதிக்கும்

புகைபிடித்தல் பெண்களுக்கு எக்டோபிக் கர்ப்பத்தை ஏற்படுத்தும் அதாவது கருமுட்டை கர்பப்பை தவிர வேறு எங்கேயாவது பொருத்தப்படும் முட்டை உயிர் வாழ முடியாது.

8 Best symptoms of blood cancer in tamil

இதற்கு சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் தாயின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தி விடும், புகை பிடித்தல் கருவுறுதலை குறைகிறது, அதாவது கர்ப்பம் தரிப்பதை கடினமாக்கி விடுகிறது.

 

Leave a Comment