இந்தியாவில் மிகவும் இலாபகரமான 7 கிராமப்புற தொழில்கள்.!!!(7Most Profitable Rural Industries in India)
நீங்கள் தொலைக்காட்சி பத்திரிக்கை அல்லது பிரபல யூடியூப் சேனலில் பின்வரும் தொழில்கள் மூலம் அதிக பணம் சம்பாதிக்கும் சில நபர்களின் பேட்டியை கண்டிருப்பீர்கள் உண்மையில் அத்தகைய தொழில்களில் அதிக வருமானம் கிடைத்துக் கொண்டிருக்கிறது. காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்று திருவள்ளுவர் சொல்லியிருக்கிறார் அதுபோல் காலத்திற்கேற்ப நாம் நம்மளுடைய அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும் அப்பொழுதுதான் இந்த உலகில் நிலையாக இருக்க முடியும். ஏனென்றால் பணம் மட்டுமே 80 சதவீத பிரச்சினைகளுக்கு சரியான தீர்வாகும் இதை சரியாக செய்யும் நபர்கள் மட்டுமே வாழ்க்கையில் சரியாக இருக்கிறார்கள்.
கிராமப்புறங்களில் அதிக தொழில்கள் இருந்தாலும் இலட்சக்கணக்கான ரூபாய் பணம் கொடுக்கும் ஒரே தொழில் என்றால் விவசாயம் மட்டுமே ஆனால் விவசாயத் தொழிலை காலத்திற்கேற்ப சரியாக செய்ய வேண்டும் அதுவும் அதிக நிலப்பரப்பில் இயற்கையான முறையில் மகசூல் எடுப்பதற்கு சரியாக திட்டமிட வேண்டும் இதற்கு கடினமாக உழைத்தால் கூடுதல் லாபத்தை இதில் பார்க்கலாம்.
சரியாக திட்டமிடலுடன் தொடங்கும் தொழில்களுக்கு எப்பொழுதும் வரவேற்பு இருந்து கொண்டே இருக்கிறது.
உங்களிடம் நிலம் இல்லை அல்லது குறைந்த ஹெக்டேரில் இருக்கிறது விவசாய நிலம் என்றாலும் கவலையை விடுங்க பெரிய முதலீடுகள் இல்லாமல் தூக்கி எறியும் சில பொருட்களை கொண்டு நீங்களும் தொழில் தொடங்கலாம் அத்தகைய வகையில் இயற்கை உரம் தயாரித்தல், தேங்காய் சிரட்டை, வேப்பங்குச்சி ஏற்றுமதி, கரித்தூள் தயாரிப்பு, போன்ற பல தொழில்கள் மூலம் ஏனென்றால் இத்தகைய தொழில்கள் இப்பொழுது இயற்கையை விரும்பும் மக்களுக்கு அடிப்படையாக அமைந்துள்ளது.
கரி தூள் வியாபாரம் (Charcoal powder business)
தேங்காய் மட்டையை அல்லது ஓட்டை எரிப்பதன் மூலம் கிடைக்கும் கரித்தூளை விற்பனை செய்தாள் நல்ல லாபம் பார்க்க முடியும் ஏனென்றால் இதில் activated carbon உள்ளதால் இதைப் பற்றி விழிப்புணர்வு வந்திருக்கிறது இணையதளத்தில் இதைப் பற்றி நீங்கள் தேடினால் காணலாம். 100 கிராம் கரித்தூளை ரூபாய் 100 ரூபாய்க்கு விற்பனை செய்கிறது சில முன்னணி நிறுவனங்கள். மேலும் அதிக அளவில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
தேனீ வளர்ப்பு (Beekeeping)
இந்த உலகில் கெட்டுப்போகாத பொருள் என்றால் அது தேன் மட்டும் சில நாட்களுக்கு முன்பு அனைத்து பத்திரிகைகளிலும் வெளிவந்த தலைப்பு செய்திகளில் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் தேன்களில் ஒரே ஒரு நிறுவனம் தயாரிக்கும் தேன் மட்டுமே கலப்படம் இல்லாமல் இருக்கிறது என்று செய்தி வெளியிட்டு இருக்கும் அனைத்து பத்திரிக்கை நிறுவனங்களும். அதன் பிறகு தேன் வாங்குபவர்கள் இயற்கையான முறையில் கிராமப்புறங்களில் பண்ணைகளில் விற்பனை செய்யப்படும் தேன்காளை அதிக அளவில் வாங்குவதற்கு ஆர்வம் காட்டுகிறார்கள்.
முருங்கை இலை பொடி (Drumstick leaf powder)
கிராமபுறங்களில் எளிதாக கிடைக்கும் பொருள்கள் மற்ற இடங்களுக்கு எளிதாக கிடைப்பதில்லை. நகர்புற மக்களுக்கும் மற்றும் வெளிநாட்டில் வாழும் மக்களுக்கும் இந்தியாவின் பாராம்பரிய மசாலா வகைகள் எளிதாக கிடைப்பதில்லை அத்தகைய தொழில்களுக்கு நல்ல வரவேற்பு இருந்துகொண்டே இருக்கிறது முருங்கை இலையை பொடியாக்கி அதனுடன் சில மூலிகை சேர்த்து விற்பனை செய்தால் நல்ல வரவேற்பு இருக்கும்.
மாட்டு சாணம் வரட்டி (Dry cow dung)
மாட்டு சாணம் கிராமபுறங்களில் எளிதாக கிடைக்கும் ஒரு பொருள் நீங்கள் இதை ஒட்டு மொத்தமாக வாங்கி அழகிய கண்கவர் பாக்கெட்களில் அடைத்து இணையதளம் மூலம் விற்பனை செய்யலாம் ஏனென்றால் நகர்புற மக்கள் இதனை இணையதளம் மூலம் மட்டுமே வாங்கக்கூடிய சூழ்நிலைகளில் உள்ளார்கள் அமேசான் போன்ற இணையதளங்களில் ஒரு பாக்கெட்டின் விலை 500 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
வேப்பங்குச்சி (Neem Business)
வேப்பங்குச்சி சிறு சிறு துண்டுகளாக சரிசமமாக வெட்டி அதனை பாக்கெட்களில் அடைத்து விற்பனை செய்யலாம் மேலும் விற்பனையை அதிகரிக்க மற்றும் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த பாக்கெட்களில் மீது வேப்பங்குச்சி நன்மைகளை ஒரு காகிதத்தில் எழுதலாம் வேப்பம் குச்சியால் பல் துலக்கினால் பற்கள் கற்கள் போல வலுவாகும் என்ற பழமொழி உள்ளது மேலும் வேப்பங்குச்சியுடன் ஆலங்குச்சி சேர்த்து விற்பனை செய்தால் நல்ல லாபம் பார்க்க முடியும் இதை நீங்கள் சிறிய பெட்டி கடை மூலம் விற்பனை செய்தால் மற்ற செலவுகளை எளிதாக தவிர்க்கலாம் ஏனென்றால் சிறிய பெட்டிக் கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் எளிதாக உங்கள் பொருட்களை அடையாளம் கண்டு கொள்ள முடியும்.
தென்னை மரம் மூலம் கிடைக்கும் வருமானம் (Income from coconut tree)
தென்னை மரம் மூலம் உங்களுக்கு பல்வேறு மூலப்பொருட்கள் கிடைக்கும் குறிப்பாக வளைகுடா நாடுகளில் கட்டுமான பணிகளுக்கு தென்னைமர நார்கள் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. தமிழகத்தில் கட்டுமான பணிகளுக்கு தென்னைமர கயிறுகள் முக்கியமாக பயன்படுத்தப்படுகிறது மேலும் கோடைக்காலங்களில் ஒரு இளநீர் 40 ரூபாய் முதல் 60 ரூபாய் வரை விற்கப்படுகிறது. மேலும் தென்னை மர ஓடுகளில் கைவண்ண பொருட்கள் செய்து உள்ளூரில் விற்பனை செய்தால் அதிக வரவேற்பு கிடைக்கும் மற்றும் துபாய் போன்ற வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது சில குடிசை தொழில் மூலம்.
Top 10 Business Ideas for Agriculture 2020
இயற்கை உரம் தயாரித்தல் (Making compost)
6 மாதத்திற்கு அல்லது 1 வருடத்திற்கு ஒருமுறை விவசாயிகள் பயன்படுத்தப்படும் செயற்கை உரங்களின் விலை ஏற்றப்படுகிறது. மேலும் விவசாயிகளுக்கு சரியான வருமானம் கிடைப்பதில்லை இந்த விலை ஏற்றத்தால் விவசாயிகளின் நிலைமையை நன்கு உணர்ந்து குறைந்த விலையில் இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட உரங்களுக்கு விவசாயிகளிடையே நல்ல வரவேற்பு உள்ளது.
2020 ஆம் ஆண்டு மூலம் நாம் கற்க வேண்டிய அடிப்படை விஷயங்கள் பற்றி பார்ப்போம்.!!!
இயற்கை உரம் எப்படி தயாரிப்பது என்பது பற்றி நீங்கள் தெரிந்துக்கொள்ள வேண்டுமானால் உங்கள் மாவட்டத்தில் உள்ள வேளாண்மை அலுவலகத்தை அணுகலாம்.