கட்லா மீன் சாப்பிடுவதால் கிடைக்கும் அற்புதமான நன்மைகள்(8 Amazing Benefits of Eating Katla Fish)
நமது உடல் சரியாக இயங்குவதற்கு பல்வேறு மூலப் பொருட்களிலிருந்து ஊட்டச்சத்துக்களை எடுத்துக் கொள்கிறோம் அவைகள் காய்கறிகள், பழங்கள், பால், இறைச்சி, போன்றவைகள் அடங்கும்.
இன்றைய காலகட்டங்களில் பெரும்பான்மையான மக்கள் இறைச்சி உணவை விரும்பி சாப்பிடுகிறார்கள். ஆனால் அவைகளில் அனைத்தும் இயற்கையான முறைகளில் கிடைப்பதில்லை.
பிராய்லர் கோழி, பண்ணைகளில் வளர்க்கப்படும் மீன்கள், நண்டுகள், இறால்கள், போன்றவைகள் வேகமாக வளர்வதற்கு ஆண்டிபாடி ஊசிகள் பயன்படுத்தப்படுகிறது.
இவைகளை உணவில் எடுத்துக்கொண்டால் நமது உடலுக்கு விரைவில் சில தீய விளைவுகள் ஏற்பட்டு விடுகிறது. இதைப்பற்றி மருத்துவர்களும் பலமுறை மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது
பொதுவாக மீன்களில் ஒமேகா 3 ஊட்டச்சத்து அதிகமாக காணப்படும். இவை உடலில் பல்வேறு நன்மைகளை வாரி வழங்கும் ஒரு ஊட்டச்சத்தாகும். ஆராய்ச்சியாளர்களின் கூற்றின்படி கட்லா மீன் இரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை குறைக்கிறது. இதனால் நீங்கள் ஆரோக்கியமான இதயத்தை உங்களால் பேணிக்காக்க முடியும்.
உங்களுக்கு ஆரோக்கியமாக இயற்கை முறையில் வளர்ந்த கட்லா மீன் வேண்டும் என்றால் அதற்கு நீங்கள் கடலில் இருந்து பிடித்து வரப்படும் மீனை தேர்வு செய்யலாம்.
மூட்டுகளுக்கு நன்மைகளை அளிக்கிறது
குறிப்பிட்ட வயதிற்கு பிறகு முடக்கு வாதம் என்னும் நோய் அதிகப்படியான மக்களை பாதிக்கிறது இதனால் மூட்டுகளில் வீக்கம் ஏற்பட்டு சரியாக நடக்க முடியாத சூழ்நிலைகள் உருவாகிவிடும். இதனை சரி செய்வதற்கு கடல் மீனை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்ளலாம் ஒமேகா-3 எண்ணெய் கீல்வாதம் ஏற்படாமல் உடலில் தடுக்கிறது.
இது போல் இருக்கும் நோய்களை தடுக்க இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதால் கடல் உணவை குறிப்பாக கட்லா மீனை அதிகம் சாப்பிட வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.
கண்பார்வையை மேம்படுத்துகிறது
இந்த கட்லா மீன் பார்க்க சிறியதாக இருந்தாலும் ரெட்டினோல் போன்ற ஏராளமான ஊட்டச் சத்துக்களை தன்னுள் அடக்கியுள்ளது. இது ஒரு வகை விட்டமின் ஏ ஆகும் இது கண் பார்வையை அதிகரிக்கிறது.
வயது தொடர்பான (மாகுலர் டிஜெனரேசன்) எனப்படும் நோயால் பாதிக்கப்பட்டிருந்தால் குறிப்பாக அந்த நபர் கண் பார்வையை பாதுகாக்க கட்லாமீனை அடிக்கடி உணவில் எடுத்துக் கொள்ளலாம்
உங்கள் ஆற்றலை அதிகரிக்கிறது
இந்தக் கடல் மீனில் அயோடின், துத்தநாகம், பொட்டாசியம், செலினியம், போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது என மருத்துவர்களால் நிரூபிக்கப்பட்டுள்ளது. உங்களுக்கு விட்டமின் ஏ மற்றும் டி தேவைப்பட்டால் கடல் மீனை உணவில் அதிகமாக சேர்த்துக் கொள்ளுங்கள்.
இந்த சிறிய மீன் நுரையீரலுக்கு பல்வேறு நன்மைகளை வழங்கும் ஒரு ஆய்வின் முடிவில் தொடர்ந்து கட்லா மீனை உணவில் எடுத்துக்கொண்ட நபர்களுக்கும் கட்லா மீன் சாப்பிடாத நபர்களுக்கும் ஒப்பிட்டு பார்க்கையில் கடல் மீனை எடுத்துக் கொண்ட நபர்களின் நுரையீரல் ஆரோக்கியமாக இருப்பதாக தெரியவந்துள்ளது.
மனச்சோர்வில் இருந்து உங்களைப் பாதுகாக்கிறது
21ஆம் நூற்றாண்டில் இருக்கக்கூடிய நோய்களில் முதன்மையானது மன அழுத்தம்தான் இதனை சரி செய்வதற்கு மக்கள் பல்வேறு வழிமுறைகளை தேடுகிறார்கள்.
இந்த மிகச் சிறிய கட்லா மீன் பல நன்மைகளை வழங்குகிறது இது மிக முக்கியமான ஒன்றாகும் கடல் உணவுக்கு மனச்சோர்வை தீர்க்கும் ஆற்றல் இருப்பதாக மருத்துவரால் நிரூபிக்கப்பட்டுள்ளது.
ஒமேகா 3 கொழுப்பு நிறைந்திருப்பதால் கட்லா மீன் மன அழுத்தத்தை குறைக்க உதவுகிறது என்ற உண்மையை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளார்கள். பருவக் கோளாறு மற்றும் பிரசவத்திற்கு பிந்தைய மனச்சோர்வை தவிர்ப்பதற்கு இது உதவியாக இருக்கும்.
ஒளிரும் சருமம்
கட்லா மீன் உங்கள் உடலுக்கு பல்வேறு ஊட்டச்சத்துக்களை வழங்குவது மட்டுமில்லாமல் உங்கள் சருமத்தை புற ஊதா கதிர்களில் இருந்து பாதுகாக்கிறது.
கட்லா மீனில் ஒமேகா-3 கொழுப்புகள் உங்கள் சருமத்தை அரிக்கும் தோல் அலர்ஜி, தடிப்பு தோல் அலர்ஜி, போன்ற பல்வேறு அறிகுறிகளில் இருந்து பாதுகாக்கிறது. மேலும் கொலாஜன் என்ற பொருளை சேர்ப்பதன் காரணமாக சரூமத்தை உறுதியாகவும் மிகவும் அழகாக இருக்கிறது.
Top 3 Benefits of using onion oil to hair
உங்கள் மூளைக்கு நல்லது
மனித மூளையில் நினைவாற்றல் மற்றும் டிமென்ஷியா போன்ற நோய்களால் பாதிப்பு ஏற்படுவதை கட்லா மீனில் உள்ள ஊட்டச்சத்துக்கள் குறைகிறது என தெரியவந்துள்ளது ஆய்வுகளின் முடிவில்.
எங்கள் YouTube சேனலைக் காண இங்கே கிளிக் செய்க
உடலுக்கு நல்ல கொழுப்பை வழங்குகிறது
சால்மன் மீன் உடன் ஒப்பிடும்போது கட்லா மீன்களில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் கடல் உணவுகளில் பொதுவாக காணப்படும் ஒமேகா-3 கொழுப்புகள் மனிதர்கலின் மூளை, கண்கள், சருமம், போன்றவற்றை பாதுகாக்கிறது மற்றும் ஆரோக்கியமாக வைத்திருக்கிறது.
Sukanya Samriddhi scheme benefit 2021 in tamil
தாய்மார்கள் தங்களை ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாக வைத்திருக்க தினசரி உணவில் கட்லா மீனை எடுத்துக்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். மனித உடலில் நல்ல கொழுப்பு அதிகரிப்பதற்கு கட்லா மீன் தேவைப்படுகிறது.