இதையெல்லாம் செய்தால் நீங்கள் எப்பொழுதும் அழகாக காட்சியளிக்கலாம்.(8 Best health tips for men in tamil)
இன்றைய காலகட்டங்களில் பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் தங்களுடைய அழகுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் தங்களுடைய அழகை அதிகரிக்க பல ஆண்கள் பல்வேறு வகையான கிரீம்கள் மற்றும் ஜெல்களை பயன்படுத்துகிறார்கள்.
ஒருவருடைய அழகை அதிகரிக்க செயற்கையாக கடைகளில் விற்கப்படும் அழகு சாதன பொருட்கள் எப்போதும் 10 சதவீத அளவிற்கு மட்டுமே பயன் கொடுக்கும்.
ஆண்களின் அழகு அவர்கள் எப்படி தங்களுடைய உடலை பராமரிக்கிறார்கள் என்பதைப் பொறுத்து மாறுபடும். ஆண்கள் எப்பொழுதும் அழகாக தெரிவதற்கு தங்களுடைய உடலையும் சருமத்தையும் பராமரிக்க சில செயல்கள் பட்டியலிடப்பட்டுள்ளது.
உடற்பயிற்சி அல்லது விளையாட்டு.
ஆண்கள் அன்றாட உடற்பயிற்சி செய்வதன் மூலம் உடலில் ஊளைச் சதைகள் சேராமல் தடுக்க முடியும் அல்லது யோகா, கிரிக்கெட், விளையாட்டு, கால்பந்து, கூடைப்பந்து, அல்லது குறைந்தது 3 கிலோ மீட்டர் நடை பயிற்சி போன்றவைகளை வாரத்திற்கு ஐந்து நாட்கள் செய்தால் போதும்.
உடலில் தேவையில்லாமல் கொழுப்புக்கள் சேர்வது இதனால் தவிர்க்கப்படும் மேலும் முகம் மற்றும் வயிற்று பகுதிகளில் கொழுப்புகள் சேராமல் இருந்தால் ஆண்களின் தோற்றம் எப்போதும் அழகாக தெரியும்.
சன்ஸ்க்கிரீன் மற்றும் மாய்ஸ்சரைசர் கிரீம் பயன்படுத்துங்கள்.
சன்ஸ்க்கிரீன் மற்றும் மாய்ஸ்சரைசர் கிரீம் இவை இரண்டும் 5 வருடங்களுக்கு முன்பு பெண்கள் மட்டும் பயன்படுத்தும் வகையில் பல நிறுவனங்கள் தயாரித்து வெளியிட்டன.
ஆனால் இப்போது நிலைமை மாறிவிட்டது ஆண்களுக்கும் இந்த கிரீம்களை பல்வேறு முன்னணி நிறுவனங்கள் விற்பனை செய்கிறது இதன் மூலம் நல்ல பலன்கள் கிடைக்கிறது சருமம் எப்போதும் ஈரப்பதத்துடன் இருந்தால் மட்டுமே செல்கள் ஆரோக்கியமாக இருக்கும்.
உடனடியாக நிறுத்த வேண்டும்.
புகைப்பிடிப்பதால் தோல்களில் வேகமாக சுருக்கங்கள் ஏற்படும் மற்றும் உடல் உபாதைகள் பல்வேறு வழியில் தொந்தரவு செய்து கொண்டே இருக்கும். இதனால் உங்களுடைய தோற்றம் வயதானவர் போல் தெரிய ஆரம்பிக்கும் இதை தடுப்பதற்கு புகை பிடிப்பதை நிறுத்த வேண்டும்.
ஆரோக்கியமான உணவு.
ஆரோக்கியமான இயற்கையான உணவை எடுத்துக் கொள்வதால் மட்டுமே 80 சதவிகித அளவிற்கு உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள முடியும் இது உடல்நலத்திற்கு மட்டுமல்லாமல் உங்களுடைய அழகிற்கு முக்கியத்துவம் கொடுக்கும்.
சரியான தூக்கம்.
இரவில் நீண்ட நேரம் கணினி மற்றும் செல்போன் பயன்படுத்துவதை தவிர்த்துவிடுங்கள் இதனால் கண்களுக்கு கீழ் தோன்றும் கருவளையம் வராமல் இருக்கும் மேலும் குறைந்தது 7 மணி நேரம் ஒரு நாளைக்கு தூங்குங்கள்.
முகப்பொலிவு இழக்காமல் இருப்பதற்கு சரியான நேரத்தில் சரியான நேரம் தூங்க வேண்டும் இது அனைவருக்கும் பொருந்தும்.
சரியான அளவில் தண்ணீர் தேவை.
ஒருவருடைய உடலில் அதிகப்படியான நஞ்சுகள் இருந்தாள் அவர்களுடைய வெளிப்புறத்தில் இருக்கும் சருமங்கள் பொலிவாக தெரியாது மேலும் செல்கள் ஆரோக்கியத்திற்கு தண்ணீர் முக்கிய பங்காற்றுகிறது இதனால் ஒரு நாளைக்கு குறைந்தது 2 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் அனைவரும்.
நீங்கள் செய்யும் சில தவறுகளால் உங்களுடைய முடி வளர்ச்சி பாதிக்கப்படும்.
தவிர்க்க வேண்டிய உணவு வகைகள்.
பேக்கரி பொருட்கள் பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் அதிகமாக செறிவூட்டப்பட்ட உணவுகளை பயன்படுத்த வேண்டாம் மேலும் மாலை மற்றும் காலை நேரங்களில் பச்சைக் காய்கறிகளை எடுத்துக்கொள்ளுங்கள் இதனால் உங்களுடைய சருமம் மற்றும் குடலுக்கு நல்லதாக அமையும்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் ட்விட்டர் பக்கத்தை லைக் செய்யுங்கள்.
முகம் பிரகாசமாக இருப்பதற்கு இதனை செய்ய வேண்டும்.
தினமும் நடைப்பயிற்சி, சைக்கிள் ஓட்டுதல்,கார்டியோ போன்ற பயிற்சிகள் குறைந்தது 30 நிமிடம் செய்யுங்கள் இதனால் உங்களுடைய மன அழுத்தம் குறைய தொடங்கும். இந்த பயிற்சியால் உங்கள் உடலில் இருக்கும் கலோரிகள் எரிக்கப்பட்டு இதயத்திற்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லாமல் நீண்ட நாட்கள் வாழ முடியும்.