8 Best herbal plants in tamilnadu

நம் வீட்டில் எப்போதும் இருக்க வேண்டிய அற்புதமான மூலிகை செடிகள்.(8 Best herbal plants in tamilnadu)

1990ல் பிறந்த குழந்தைகள் அல்லது அதற்கு முன்பு பிறந்தவர்களுக்கு வீட்டில் இருக்கும் மூலிகைச் செடியை கொண்டு சளி காய்ச்சல் இருமல் மற்றும் சில வியாதிகளுக்கு நம்முடைய பாட்டிமார்கள் வைத்தியம் செய்திருப்பார்கள். இதனால் எந்த ஒரு பக்க விளைவுகளும் இல்லாமல் ஆரோக்கியமாக 90களில் பிறந்த குழந்தைகள் வளர்ந்தார்கள்.

இப்பொழுது இருக்கும் காலகட்டங்களில் சிறிய அளவில் காய்ச்சல் அல்லது இருமல் போன்றவைகள் ஏற்பட்டு மருத்துவமனைக்கு சென்றால் குறைந்தது 500 ரூபாய் செலவாகிறது மற்றும் ஆங்கில மருந்துகளை அதிக அளவில் எடுத்துக் கொள்வதால் நாளடைவில் உடல் உறுப்புகள் பாதிக்கப்படுகிறது.

இதனை கருத்தில் கொண்டு எந்த ஒரு பக்க விளைவுகளும் ஏற்படுத்தாமல் உடலுக்கு நன்மைகளை தரக்கூடிய நம்முடைய பாரம்பரிய மூலிகை செடிகளை வீட்டில் வளர்த்தால் போதும் பணமும் மிச்சமாகும் மேலும் உடல் ஆரோக்கியத்திற்கு எந்த ஒரு பக்க விளைவுகள் இல்லாமல் இருக்கலாம்.

இந்த மூலிகைச் செடிகள் எல்லாம் நம்முடைய பாரம்பரிய சொத்தாக நம்முடைய முன்னோர்கள் பாதுகாப்பாக அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் சென்றார்கள். இதனை இப்பொழுது நாம் மறந்ததால் பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாகிறோம்.

1.துளசி (Basil)

துளசி இந்துக்களின் புனித செடியாக கருதப்படுகிறது மேலும் இது ஹோலி பேசில் என்று அழைக்கப்படுகிறது. இதன் மருத்துவ குணங்கள் மற்ற மூலிகை செடிகளை விட அதிகமாக இருப்பதால் இதனை மூலிகை செடிகளின் ராணி என்று அழைக்கப்படுகிறது.

துளசி செடிகள் நான்கு வகைகளாக உள்ளது அவைகளில் கற்பூர துளசி, வன துளசி, ராம துளசி, கிருஷ்ண துளசி.

கோயில், ஹெர்பல் டீ, ஆயில் தயாரிப்பதற்கு, காதுக்குச் சொட்டு மருந்தாக, சோப்பு, ஷாம்பு, மற்றும் அழகு சாதன பொருட்கள் தயாரிப்பதற்கு  துளசியை அதிக அளவில் நாம் பயன்படுத்துகிறோம்.

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா துளசி செடியை பல்வேறு ஆராய்ச்சிகள் செய்வதற்கு விண்வெளியில் வளர்த்தது.

துளசிச் செடியில் கிருமி எதிர்ப்பு சக்தி, பூஞ்சை எதிர்ப்பு பொருட்கள், ஆன்டிபாக்டீரியல் பொருட்கள், ஆண்டிபயோடிக் பொருட்கள், போன்றவைகள் இருப்பதால் சளிக் காய்ச்சல், தோலில் ஏற்படும் அலர்ஜி மூச்சுப் பிரச்சனைகளுக்கு மருந்தாக பயன்படுகிறது.

2.வெந்தயம் (Fenugreek)

8 Best herbal plants in tamilnadu

இந்தியாவில் மெத்தி என்ற பெயரில் வெந்தயம் அழைக்கப்படுகிறது இதன் இலைகள் விதைகள் நிறைய மருத்துவ குணங்கள் கொண்டதாக உள்ளது  உடல் சூட்டை குறைப்பதற்கு பாட்டி வைத்தியத்தில் முதன்மையாக வெந்தயம் உள்ளது.

இந்த செடி எந்த ஒரு சூழ்நிலைகளுக்கும் ஏற்ற வகையில் வளரும் தன்மை கொண்டது மேலும் பல்வேறு மருத்துவ குணங்கள் கொண்ட செடியாக உள்ளது உடல் எடை அதிகரிப்பதற்கும் மற்றும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கு முக்கிய பங்காற்றுகிறது.

மனித உடலில் கல்லீரல் புற்றுநோயை தடுக்கிறது, தாய்மார்களுக்கு பால் உற்பத்தியை அதிகரிக்கிறது, ஜீரண கோளாறுகள் ஏற்படாமல் பாதுகாக்கிறது, பிரசவ வலி மற்றும் மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வலியை குறைக்கிறது.

மேலும் உடல் அலர்ஜி, அல்சர் மற்றும் ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவை குறைக்கிறது கெட்ட சுவாசத்தை தடுக்கிறது இந்த அற்புதமான மூலிகை செடியை வீட்டில் வளர்த்தால் எண்ணற்ற நன்மைகளை நாம் பெற முடியும்.

3.கற்பூரவள்ளி இலை (Camphor leaf)

8 Best herbal plants in tamilnadu

கற்பூரவள்ளி இலை அதிக நீர்ச்சத்து மற்றும் காரத்தன்மை கொண்ட இலையாக உள்ளது இது துளசி செடிக்கு இணையான  நன்மைகளை கொண்டுள்ளது. நமது முன்னோர்கள் வீட்டின் முன்புறத்தில் துளசிச்செடி  செடியுடன் இந்த கற்புறவல்லி செடியையும் வளர்த்தார்கள் இவைகள் கிருமிநாசினியாக பயன்படுகிறது.

கற்பூரவள்ளி இலையை நாம் அப்படியே எடுத்து சாப்பிடலாம் அல்லது  தேனுடன் கலந்து சாப்பிடலாம் மற்றும் குழந்தைகளுக்கு அடிக்கடி ஜலதோஷம் ஏற்பட்டால் கற்பூரவல்லி இலையை மருந்து பொருட்களாக பயன்படுத்தலாம் இதன் இலையை கையால் தொட்டு முகர்ந்து பார்த்தாள் ஓமத்தின் வாசனை வரும்.

சளிக்காய்ச்சல், வறட்டு இரும்பல், தோல் சம்பந்தமான அலர்ஜி நீங்க, எலும்பு மற்றும் மூட்டுத் தேய்மானத்தை குறைக்க, மன அழுத்தம், படபடப்பு தன்மை நீங்க, சிறுநீரகத்தில்  தேங்கும் அதிகப்படியான உப்பை குறைக்க, ஆஸ்துமா நோய் குணமாக, நுரையீரல் புற்றுநோயை குணமாக்க, அஜீரணக் கோளாறா மற்றும் சுவாச பிரச்சனைகளை குணமாக்க கற்பூரவல்லி இலை மருந்து பொருளாக பயன்படுகிறது.

4.வேப்பிலை (Mistletoe)

8 Best herbal plants in tamilnadu

இது மிகவும் பழங்காலமாக தமிழ் பாரம்பரியத்துடன் தொடர்புடைய முதன்மையான மரமாக இது வளர்க்கப்படுகிறது. மேலும் இந்த மரம் தமிழ் கலாச்சாரத்தில் தெய்வ மரமாக கொண்டாடப்படுகிறது ஏனென்றால் அந்த அளவிற்கு இதன் மருத்துவ குணங்கள் உள்ளது.

வீட்டில் வளர்க்கக்கூடிய முக்கியமான மரமாகும் உங்களுக்கு போதுமான இடவசதி இல்லாமல் இருந்தாலும் ஒரு தொட்டியில் இதனை வளர்க்கலாம்.

இதில் ஆன்டி-செப்டிக் பொருட்கள் அதிகமாக உள்ளது இதன் இலை பழம் ஆயில் ஆகியவை கிருமிநாசினிகாளாக பயன்படுகிறது பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் இந்த மூலிகை செடியை பயன்படுத்தலாம் இதனால் எந்த ஒரு பக்க விளைவுகளும் ஏற்படாது.

5.அஸ்வகந்தா (Ashwagandha)

8 Best herbal plants in tamilnadu

அஸ்வகந்தா இது பழைய காலங்களில் அதிக அளவில் பயன்படுத்திய மூலிகை செடியாக உள்ளது மற்றும் பண்டைய காலங்களில் சித்தர்கள் எழுதிய குறிப்புகளில் அஸ்வகந்தா முக்கிய இடத்தில் உள்ளது.

மன அழுத்தத்தை குறைத்து நரம்பு மண்டலத்தை பாதுகாக்கிறது, கருவுறுதல், காயங்களை குணமாக்குதல், நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது, கண்களின் ஆரோக்கியம், ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைப்பது, கொலஸ்ட்ரால் அளவை குறைப்பது,  அனிஸ்சிட்டி போன்றவைகள் வராமல் தடுக்கிறது.

6.வல்லாரைக் கீரை.

8 Best herbal plants in tamilnadu

வல்லாரை கீரை அதன் தனித்துவமான மருத்துவ குணங்கள் நமது மூளை வளர்ச்சி மற்றும் நினைவாற்றலுக்கு மிகச் சிறந்ததாக உள்ளது இது சிறிய செடியாக வளரும் தன்மை கொண்டது.

மேலும் அல்சர், சரும அலர்ஜி பாதிப்பு, ரத்தக்குழாய் சுருக்கம், உடலை இளமையாக வைத்துக் கொள்வதற்கு பயன்படுகிறது, மற்றும் வெளிப்புறத்தில் ஏற்படும் காயங்களில் இதன் இலையை கசக்கி சாறு எடுத்து தடவினாள் புண்கள் விரைவில் குணமாகும் நரம்பு மண்டல சீரான இயக்கத்திற்கு முக்கிய பங்காற்றுகிறது மனித உடலில்.

https://twitter.com/liveintamilnadu     செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் ட்விட்டர் பக்கத்தை லைக் செய்யுங்கள்.

7.புதினா (Mint)

8 Best herbal plants in tamilnadu

புதினா உலகில் உள்ள அனைத்து மக்களும் விரும்பி உண்ணக் கூடிய உணவாக இதன் இலைகள் உள்ளது. இந்த செடியை சிறிய தொட்டில் எந்த ஒரு சூழ்நிலைகளுக்கும் ஏற்ப  வளர்க்கலாம்.

இதில் இயற்கையாகவே வைட்டமின் ஏ, சி, மக்னீசியம் போன்றவைகள் உள்ளது இதன் இலைகளில் இருந்து தயாரிக்கப்படும் சாறு தசைகளின் பிடிமானத்தை குறைப்பதற்கும் வாய் துர்நாற்றம் போக்குவதற்கும் பயன்படுகிறது.

மேலும் வாய்வு, வயிற்று மந்தம், காய்ச்சல், மலம் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சல், பெருங்குடல் பிரச்சனை, போன்றவைகளுக்கு முக்கிய நிவாரணியாக புதினா இலை உள்ளது.உடலில் தீங்குகளை ஏற்படுத்தும் பாக்டீரியாவின் வளர்ச்சியை தடுக்கிறது.

https://liveintamilnadu.com/best-4-foods-for-hair-growth-in-tamil/  அழகான பளபளப்பான கூந்தலுக்கு தேவைப்படும் ஊட்டச்சத்துக்கள்.

8.கற்றாழை (Cactus)

8 Best herbal plants in tamilnadu

கற்றாழை எல்லா சூழ்நிலைகளுக்கும் பயன்படுத்தும் ஒரு அற்புதமான மூலிகையாக உள்ளது இது எங்கு வேண்டுமானாலும் வளரும் இந்த செடி நன்றாக வளரும் வளர்வதற்கு கண்டிப்பாக சூரிய ஒளி தேவைப்படுகிறது.

உங்கள் வீட்டில் வளர்த்தால் கொசுக்கள் வராமல் இருக்க உதவி புரிகிறது. இந்த செடியில் 90 சதவீத அளவிற்கு நீர் சத்து உள்ளது. இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலை எப்போதும் இளமையாக வைத்திருக்கிறது.

அடிப்பட்ட வெட்டுக்காயங்கள், தீக்காயங்கள், மற்றும் உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்வதற்கு கற்றாழை பயன்படுகிறது.

5 Best hair growth tips in Tamil

மேலும் பசியின்மை, அஜீரணக் கோளாறு, மலச்சிக்கல், குடல் அலர்ஜி, தோல் அலர்ஜி, முகத்தில் இருக்கும் கரும் புள்ளி, போன்றவைகளை குணமாக்க பயன்படுகிறது.

JOIN US OUR TELEGRAM GROUP

Leave a Comment