8 Best Herbs to Prevent Cancer in tamil
புற்றுநோய் வராமல் தடுக்கும் 8 அதிசய மூலிகைகள் என்ன..!
புற்றுநோய் என்பது இப்பொழுது மனித குலத்திற்கு மிகப்பெரிய ஒரு அச்சுறுத்தல் ஏற்படும் ஒரு தீராத நோயாக இருக்கிறது.
இந்த நோயால் சிறு குழந்தைகள் முதல், வயதானவர்கள் வரை கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள்.
இதில் பல்வேறு வகையான நோய் பிரிவுகள் இருப்பதால் இதனை கண்டறிந்து குணப்படுத்துவது என்பது மருத்துவத்துறைக்கு இப்பொழுது பெரும் சவாலாக உள்ளது.
இருப்பினும் அதிநவீன அறிவியல் தொழில்நுட்பம் மூலம் புதிய புதிய சிகிச்சைகள் மூலம் பல்வேறு வகையான புற்றுநோய்களை குணப்படுத்துவதற்கான முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
நம்மளுடைய பாரம்பரிய மருத்துவம் என்பது ஒரு மிகச் சிறந்த மருத்துவம் அதில் அனைத்து வகையான மூலிகைகளும் அடங்கியுள்ளது.
நம்முடைய முன்னோர்கள், சித்தர்கள், பாட்டி வைத்தியம், நாட்டு வைத்தியம், சித்தவைத்தியம், என பல்வேறு வகையான வைத்தியங்களில்.
வீட்டில் பயன்படுத்தப்படும் 8 உணவுப் பொருட்களை வைத்து அனைத்து வகையான நோய்களையும் குணப்படுத்தலாம், அதைப் பற்றி முழுமையாக இந்த கட்டுரையில் காணலாம்.
சீரகம்
சீரகத்தில் உள்ள தைமோகுயினோன் என்ற மூலப் பொருள் புற்றுநோயை விரட்டும் தன்மை கொண்டது.
இலவங்கப்பட்டை
தினமும் அரைக் கரண்டி லவங்க தூளை எடுத்து கொண்டால் புற்றுநோய் அபாயங்களிலிருந்து நிச்சயம் நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம்.
இயற்கையாகவே உணவை கெட்டுப் போகவிடாமல் காக்கும் தன்மை இதில் இருக்கிறது, கூடுதலாக இரும்புச்சத்து, கால்சியம், நிறைந்துள்ளது.
பெருஞ்சீரகம்
பெருஞ்சீரகத்தில் உள்ள அனீதோல் என்னும் மூலப் பொருள் புற்றுநோய் செல்களின் புற்றுநோய் பிசின் மற்றும் ஊடுருவல் நடவடிக்கைகளில் கட்டுப்படுத்துகிறது.
வறுக்கப்பட்ட பெருஞ்சீரகத்தூள் சேர்க்கப்பட்ட தக்காளி சூப் புற்றுநோய் நோயாளிகளுக்கான நிச்சயம் ஒரு சிறந்த உணவாகும்.
மிளகாய் விதைகள்
இரண்டு கப் திராட்சைகளை சாப்பிடுவதற்கு பதிலாக ஒரு டீஸ்பூன் மிளகாய் விதைகளை சாப்பிட்டால் இதில் உள்ள குவார்சிடின் என்ற மூலப் பொருள் புற்றுநோய் உயிரணுக்களை அழிப்பதற்காக வேலை செய்கிறது என்று மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.
இஞ்சி
கொழுப்பை குறைப்பதிலும் உடல் செயல்பாட்டிற்கு ஊக்கம் அளிப்பதிலும், புற்றுநோய் கிருமிகளை அழிப்பதிலும், ஊட்டச்சத்துக்களைக் கொண்டது, இது பழங்கால முதல் நம்முடைய கலாச்சாரம் பண்பாடுகளில் கலந்தது.
மஞ்சள்
புற்றுநோய் செல்களை அழிப்பதில் மஞ்சள் முதன்மையானது இதில் உள்ள பாலிபீனால், குர்குமின், என்ற வேதிப்பொருள் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தாமதப்படுத்துகிறது, என்று ஒரு ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
மிளகு
8 Best Herbs to Prevent Cancer மிளகு இது ஒரு அதிசய மூலிகை என்று சொல்லலாம் லுகீமியாவின் புற்றுநோய் செல்களை அழிப்பதிலும் குறைப்பதிலும் மிளகின் பங்கு முக்கியமாக இருக்கிறது, உடலில் நோய் கிருமிகளை அழிப்பதில் மிளகு எப்போதும் முதன்மையாக இருக்கிறது.
குங்குமப்பூ
8 Best Herbs to Prevent Cancer இயற்கையாகவே காரடெனாய்டு டை கார்போசிலிக் அமிலம் எனப்படும் குரோசிடின் குங்குமப்பூவில் அதிகமாக நிறைந்துள்ளது.
இது புற்றுநோய் செல்களை அழிப்பதில் வல்லமை கொண்டது.