8 Best symptoms of blood cancer in tamil
இரத்தப் புற்றுநோய் அறிகுறிகள் என்ன…?
லுகேமியா என்பது இரத்தம் அல்லது எலும்பு மஜ்ஜையில் ஏற்படும் கூடிய ஒரு புற்று நோய் ஆகும்.
எலும்பு மஜ்ஜையில் தான் உடலில் ரத்த அணுக்கள் உற்பத்தி நடைபெறுகிறது எனவே இரத்த அணுக்கள் உற்பத்தியில் பாதிப்பு ஏற்படும் போது இந்த ரத்த புற்றுநோய் ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது.
ஆகவே ரத்த அணுக்கள் உற்பத்தியில் பாதிப்பு ஏற்படும்போது இந்த புற்றுநோய் ஏற்பட அதிக வாய்ப்புகள் இருக்கிறது.
அதாவது லீகோசைட் அல்லது வெள்ளை ரத்த அணுக்களை பாதிக்கிறது,லுகேமியா உடலில் எலும்புகள் மண்டலங்களில் அதிக அளவு பாதிப்புகளை ஏற்படுத்தி விடுகிறது.
இதன் காரணமாக அதிக அளவில் உடல் வெள்ளை அணுக்களை உற்பத்தி செய்யும்.
மனித உடல் பல Lymphocytes-ஐ உற்பத்தி செய்தால் அது Lymphocytes,Leukemia அல்லது Lymphoblastic Leukemia பிரச்சனையை ஏற்படுத்தி விடும் என்று அர்த்தமாகும்.
இந்த ரத்தப் புற்றுநோய் என்பது பெரும்பாலும் குழந்தைகள் மற்றும் இளம் வயதினருக்கு ஏற்படக்கூடிய நோய் என்று சொல்லலாம்.
இந்த கட்டுரையில் ரத்த புற்று நோய் இருப்பதற்கான அறிகுறிகளை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
சிராய்ப்பு
மனித உடலில் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாமல் உடலில் திடீரென்று காயங்கள் ஏற்பட்டால் அது லுகேமியா நோய் இருப்பதற்கான அறிகுறியாகும்.
அசாதாரணமாக ஏற்படும் காயம் என்பது குறைந்த அல்லது பிற ரத்த உறைதல் சிக்கலை ஏற்படுத்தும்.
இந்த காயங்கள் எங்கு வேண்டுமானாலும் ஏற்படலாம் ஆனால் பொதுவாக இவை கைகள் மற்றும் கால்களில் ஏற்படும்.
தலைவலி
தலைவலி என்பது பொதுவாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினருக்கும் ஏற்படக்கூடிய பொதுவான பிரச்சனையாகும்.
உடலிலுள்ள அனைத்து உயிர்களுக்கும் இரத்த சிவப்பணுக்களுக்கு ஆக்சிஜன் சப்ளை செய்கிறது, இந்த அணுக்களில் பற்றாக்குறை ஏற்படும்போது.
இதனால் தலைவலி போன்ற பல அறிகுறிகள் ஏற்பட்டுவிடும் என்று அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து புற்றுநோய் சங்கம் தெரிவிக்கிறது.
இருப்பினும் ஒரு நபருக்கு தொடர்ந்து மோசமான தலைவலி இருந்துகொண்டே இருந்தால் அது இரத்த புற்று நோய் இருப்பதற்கான அறிகுறிகள் ஆகும்.
எலும்புகளில் வலி
இந்த அறிகுறி வயதான பிறகு ஏற்படக்கூடிய ஒரு சாதாரண அறிகுறி என்றாலும் எலும்புகளில் உள்ள வலி என்பது தொடர்ச்சியான மற்றும் கடுமையாக இருந்தால்.
அது லுகேமியாவின் அறிகுறிகள் என்று மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.
ஒரு தொடர்ச்சியான லேசான வலி முதல் அதிதீவிர வலிகள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.
தோலில் ஏற்படும் சிவப்பு புள்ளிகள்
மனித உடல் பகுதியில் தோன்றும் சிறு சிறு சிவப்பு புள்ளிகள் கூட ரத்த புற்று நோய் இருப்பதற்கான அறிகுறிகள் மேலும் இந்த அறிகுறிகள் தோல் நோயாக இருக்கலாம்.
ஆகவே இந்த அறிகுறிகளை கண்டு நீங்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.
உடலில் தோன்றும் வீக்கங்கள்
மனித உடலில் திடீரென்று ஏற்படும் வீக்கங்கள் மற்றும் ஈறுகள் விரிவடைந்தால் கூட அவை இரத்த புற்று நோய் இருப்பதற்கான அறிகுறியாக இருக்கும்.
ஈறுகளில் வீக்கம் அல்லது விரிவடைவது என்பது ஹைபர்ப்ளசிய என அழைக்கப்படுகிறது.
குறிப்பாக லுகேமியா நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த அறிகுறிகள் இருக்கும் இது மிகவும் வெளிப்படையான அறிகுறிகளில் ஒன்றாக இருக்கிறது.
மேலும் லுகேமியா நோய்களை பரிசோதிக்கும் போது அவர்களது ஈறுகள் பெரிதாகி விட்டதா என்பதை முதலில் மருத்துவர்கள் சோதனை செய்கிறார்கள்.
இரத்தப்போக்கு ஏற்படுதல்
இரத்த புற்று நோய் உள்ளவர்களுக்கான அறிகுறி வரிசையில் இருக்கும் அறிகுறிதான் ரத்தப்போக்கு அதாவது குடல், நுரையீரல், தலையில் சிராய்ப்பு, ஈறுகள், அசாதாரண ரத்தப்போக்கு, என்பவை.
ப்ளேட்லெட்டில் ஏற்படும் குறைபாடு மற்றும் ரத்த உடலில் உள்ள பிரச்சனைகளை குறிக்கும் அறிகுறிகளாகும் லுகேமியாவின் கடுமையான அறிகுறிகளாகும்.
உடல் சோர்வு எப்பொழுதும்
உடலில் சோர்வு அல்லது பலவீனம் ஏற்படுவது சாதாரண விஷயம் தான் அது பெரும்பாலும் ரத்தசோகை பிரச்சனையால் இருக்கும் மனித உடலில் அணுக்கள் குறைபாடு ஏற்படும்போது உடல் சோர்வு மற்றும் உடல் பலவீனம் ஏற்படும்.
இந்த அறிகுறியானது தங்களுக்கு எப்போதாவது ஏற்படுகிறது என்றால் இந்த விஷயத்தை நீங்கள் சாதாரணமாக எடுத்துக் கொள்ளலாம்.
ஆனால் உடல் எப்போதும் சோர்வாகவும் பலவீனமாகவும் இருக்கிறது, என்றால் இந்த விஷயத்தில் நீங்கள் கட்டாயம் அலட்சியமாக இருக்காமல் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லதாகும்.
மூச்சுத் திணறல் பிரச்சனை
மூச்சுத்திணறல் பிரச்சினை ஏற்படுவதற்கு அதிக காரணங்கள் உள்ளது நுரையீரல் புற்று நோய் இருப்பவர்களுக்கு இந்த மூச்சுத்திணறல் பிரச்சனை ஏற்படும்.
உங்கள் இதயம் ஆபத்தில் இருக்கிறது என்று அர்த்தம்..!
இரத்தப் புற்று நோய் உள்ளவர்களுக்கு மிக மூச்சுத்திணறல் பிரச்சினை ஏற்படும் இதற்கு காரணம் என்ன என்றால் லுகேமியா உள்ள நோயாளிகள் மிகவும் களைப்பாக இருப்பார்கள்.
Leaf plate making business idea new tips 2022
அதேசமயம் அரிதான சந்தர்ப்பங்களில் அவர்கள் மூச்சுத் திணறலுக்கு உள்ளாகிறார்கள்,இந்த மூச்சுத் திணறலும் ரத்த புற்று நோய் இருப்பதற்கான அறிகுறியாக கருதப்படுகிறது.