8 Best symptoms of diseases in the body
உடலுறுப்புகளின் அறிகுறிகளை வைத்து உங்களுக்கு என்ன நோய் வரப்போகிறது என்று எளிதாக தெரிந்து கொள்ளலாம்..!
நம்மளுடைய உடல் உறுப்பு ஒவ்வொரு செயல்களையும் சிறப்பாக செய்கிறது அவ்வாறு இருக்கையில் நமது உடல் உறுப்புகள் பழுதடைந்தால் அல்லது பழுதடைவதற்கு ஏதாவது நோய் வந்தால் அதனை சில அறிகுறிகள் மூலம் உடல் வெளிப்படுத்தும்.
எனவே நம்முடைய உடல் அறிகுறிகளை வைத்து என்ன நோய் வரும் என்பதை எளிதாக தெரிந்து கொள்ளலாம்.
இன்றைய காலகட்டங்களில் வயது வித்தியாசமின்றி அனைவருக்கும் இதய நோய், கல்லீரல் பழுது, சிறுநீரக செயலிழப்பு, நுரையீரல் சேதம், மார்பக கேன்சர், மாரடைப்பு, என பல கொடிய நோய்கள் மக்களை தாக்கிக் கொண்டிருக்கிறது.
மக்கள் பல லட்சம் ரூபாய் மருத்துவ செலவுக்கே செலவு செய்கிறார்கள் அதற்கு தினமும் குறைந்தது ஒரு மணி நேரம் ஒதுக்கி ஒவ்வொரு நோய்க்கும் என்ன அறிகுறி இதனை எப்படி தடுப்பது இதற்கு என்ன இயற்கையான மருந்து என்பதை தெரிந்து கொண்டால்.
நோய்களில் இருந்து தப்பிக்கலாம் அதுமட்டுமில்லாமல் அதிகமான பணம் மருத்துவத்திற்கு செலவு செய்வதை தடுத்துவிடலாம்.
கண்கள் மூலம் வெளியாகும் அறிகுறி
கண்கள் வீங்கி இருந்தால் என்ன நோய் என்று எளிமையாக தெரிந்து கொள்ளலாம் சிறுநீரகங்கள் மோசமாக இருப்பதைக் குறிக்கிறது சிறுநீரகங்கள் உடலில் இருக்கும் கழிவுப் பொருட்களை அகற்றும் வேலையைச் செய்கிறது.
அவை சரிவர வேலை செய்யவில்லை என்றால் உடலில் சேரும் அசுத்த நீர் வெளியேற முடியாமல் போகும், இவை கண்களைச் சுற்றித் தேங்கி விடுவதால் கண்களைச் சுற்றி வீக்கம் போலத் தோன்ற ஆரம்பித்துவிடும்.
சிறுநீரகங்கள் செயலிழப்புக்கு உணவில் அதிகப்படியான உப்பு சேர்ப்பது ஒரு காரணமாக அமைகிறது, அதுமட்டுமில்லாமல் துரித உணவுகள் மூலமும் சிறுநீரக செயலிழப்பு ஏற்படும், இதனை நீங்கள் கருத்தில் கொண்டு உணவில் கவனமாக இருக்க வேண்டும்.
கண் இமைகளில் வலி
அதிகப்படியான வேலைப்பளு காரணமாக இந்த வலி வரலாம் மேலும் உடலில் மக்னீசியம் ஊட்டச்சத்து குறைவதால் உடல் சோர்வடைந்து கண் இமைகளில் வலி ஏற்பட்டுவிடும்.
இதற்கு அதிக அளவு ஓய்வு எடுக்க வேண்டும் மேலும் உணவில் முட்டைக்கோஸ் மற்றும் கீரைகளை அதிக அளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
கண்களில் தெரியும் அதிகப்படியான வெளிச்சம்
அதிகமாக வேலை செய்து கொண்டே இருப்பது மற்றும் மன அழுத்தத்தில் இருந்தால் உங்கள் மூளை குழப்பமடைந்து கண்களுக்கு தவறான தகவல்களை அனுப்பிவிடுகிறது.
அந்த நேரத்தில் நமக்கு அதிகப்படியான வெளிச்சங்களும் புள்ளிகளும் பார்வைக்குத் தெரிகிறது.
எப்பொழுதும் நிமிர்ந்து நிற்க வேண்டும் மேலும் அதிகமான காபி குடிக்கும் பழக்கத்தை தவிர்க்க வேண்டும் இதனை சரிசெய்ய.
கண்கள் உலர்ந்து போவது
நீங்கள் ஏசி நிறைந்த இடங்களில் அதிக நேரத்தைச் செலவிடும் போதும் கண்கள் அதிக வேலையினால் களைப்படையும் அப்பொழுது உங்களுடைய கண்கள் உலர்ந்து போவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது.
தினமும் குறைந்தது 8 மணிநேரம் தூங்குவது உடலுக்கு மற்றும் கண்களுக்கு நல்லது.
தினமும் கண்களை மேலும் கீழும் பக்கவாட்டில் இருபுறமும் அசைத்தல் போன்ற எளிய கண்களுக்கான உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும் இதனை சரி செய்ய.
தோலில் தடிப்புகள் ஏற்படுவது எதற்கு
தோலில் தடிப்புகள் ஏற்பட்டால் இருதய நோய்கள் இருப்பதற்கு கூட அதிக வாய்ப்புகள் இருக்கிறது.
அதுவும் காது பக்கத்திலிருக்கும் தோலில் தடிப்பு ஏற்பட்டால் கண்டிப்பாக உங்களுக்கு இருதய கோளாறு இருக்கிறது என்று ஒரு அறிகுறியாக இருக்கலாம்.
எப்பொழுதும் அதிகப்படியான மன அழுத்தம் மாரடைப்பு ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகளை ஏற்படுத்தி விடுகிறது, எனவே நீங்கள் மனதை அமைதியாக வைத்துக் கொள்வதன் மூலம் இந்த பிரச்சனைக்கு சரியான தீர்வை காண முடியும்.
தோல் இளம் மஞ்சளாக எதனால் மாறுகிறது
கல்லீரல் நோய், கல்லீரல் பாதிப்படையும்போது உடலில் பித்த நீர் போன்ற மஞ்சள் நிற திரவங்களை வெளியேற்ற முடிவதில்லை இதனால் தோல் மஞ்சள் நிறத்திற்கு எளிமையாக மாறுகிறது அதிகப்படியான மது பழக்கம் இப்படி தோல் மஞ்சள் நிறமாக மாறுவதற்கு கல்லீரலை பாதிப்படைய செய்கிறது.
முகத்தில் வீக்கம் வருவதற்கு என்ன காரணம்
உடலில் நீர்ச்சத்து குறைவின் காரணமாக இந்த பிரச்சினை ஏற்படுகிறது உடலுக்குப் போதுமான தண்ணீர் கிடைக்காமல் போனால் ரத்த செல்கள் விரிவடைந்து முகம் வீங்கிவிடுகிறது எனவே உடலுக்கு தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.
பாதம் கை கால்களில் சுறுசுறுவென்று வலி ஏற்படுவது
சீரான இரத்தம் ஓட்டம் இல்லாததே ரத்தக் குழாயில் அடைப்பு இருந்தால் உடலின் ரத்த ஓட்டம் சீராக இருக்காது இந்த அறிகுறி உங்கள் ரத்தமானது பாதம் வரை சீராக ஓடச் செய்யும் முயற்சியே ஆகும்.
புதிய கொரோனா ஓமிக்ரானின் அறிகுறிகள் என்ன
நீங்கள் உணவில் வைட்டமின் சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொண்டால் இதனை சரிசெய்யலாம்.
How to use PAN and Aadhar card safety 2022
நகங்களில் குழி விழுந்தால்
சோரியாஸிஸ் இருக்கிறது என்று அர்த்தம் இது ஒரு மோசமான தோல் வியாதி இதன் மூலம் தோலும் நகங்களும் மிகவும் மென்மையாகி விடும்.
இந்த வியாதி வந்தால் மென்மையான நகங்களில் குழிகள் வரக்கூடும்.