8 Best tips how to reduce stubborn belly fat
என்ன பண்ணாலும் அடிவைத்து தொப்பை மட்டும் குறையாமல் இருக்க இதை செய்தாள் கண்டிப்பாக குறையும்..!
அதிக உடல் எடை பல்வேறு வகையான ஆரோக்கிய பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது அதிலும் தொப்பை படுத்தும்பாடு மிக அதிகம்.
எளிமையான வாழ்க்கை முறை மாற்றங்களால் எப்படி தொப்பையை குறைக்கலாம் என்று தெரிந்து கொள்ளுங்கள்.
உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் சில நபர்களுக்கு கூட இடுப்பு அடிவயிற்றுப் பகுதியில் கொழுப்புகள் அதிக அளவில் தேங்கிக்கிடக்கும்.
அவற்றை எந்த வித பக்கவிளைவுகளும் இல்லாமல் அதிக சிரமம் இல்லாமல் எப்படி குறைக்கலாம் என்று பார்க்கலாம்.
எவ்வளவுதான் கடினமாக உடற்பயிற்சி செய்தாலும் மற்றும் கடுமையான உணவுக் கட்டுப்பாடுகள் இருந்தாலும் அடி வயிற்று தொப்பையை குறைப்பது என்பது ஒரு சாதாரண விஷயம் இல்லை.
பல்வேறு புதிய உடற்பயிற்சிகள் மற்றும் உணவு கட்டுப்பாடுகள் பற்றி மருத்துவ நிபுணர்கள் அறிமுகம் செய்கிறார்கள், ஆனால் இதற்கெல்லாம் அடிப்படையாக இருப்பது உங்களுடைய வாழ்க்கை முறை மட்டுமே.
சர்க்கரை சேர்த்த பானங்கள் தவிர்க்க வேண்டும்
சர்க்கரை சேர்க்கப்பட்ட பானங்களை முற்றிலும் நீங்கள் தவிர்க்க வேண்டியது அவசியமாக இருக்கிறது.
அடிக்கடி சர்க்கரை சேர்த்த பானங்கள், கார்போஹைட்ரேட் பானங்கள் மற்றும் பழச்சாறுகளை எடுத்துக்கொள்பவர்களுக்கு அடிவயிற்றில் அதிக அளவில் கொழுப்புகள் தேங்கும்.
இதனால் வயிறு பெரிதாகிக் கொண்டே தான் போகும் இது போன்ற பானங்களை தவிர்ப்பது தேவையற்ற கொழுப்புகள் தேங்குவதை சரிசெய்துவிடலாம்.
காய்கறி உணவுகள்
அன்றாடம் உணவில் குறைந்தபட்சம் 20 சதவீத அளவிற்கு பச்சை காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
காய்கறிகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொண்டால் இயல்பாகவே நீங்கள் எடுத்துக்கொள்ளும் நார்ச்சத்தின் அளவு அதிகரித்துவிடும்.
அதேபோல் நீங்கள் சாப்பிடும் ஒவ்வொரு நேரம் உணவிலும் புரதச்சத்து நிறைந்த காய்கறிகள் அதிகம் இருக்கும்படி உறுதி செய்து கொள்ள வேண்டும்.
இதனால் நீண்ட நேரம் பசியை கட்டுப்படுத்தி அதிக கலோரிகள் எடுத்துக் கொள்ளாமல் பார்த்துக் கொள்ளும்.
நார்ச்சத்து உணவுகள் கட்டாயம் தேவை
அடிவயிற்றில் அதிக அளவு கொழுப்பு தொப்பை வராமல் இருக்க வேண்டுமென்றால், அன்றாட உணவில் அதிக அளவில் நார்ச்சத்து நிறைந்த உணவுகளை சேர்த்துகொள்ள வேண்டும்.
முழு தானியங்கள், முட்டை, நட்ஸ், கொட்டை வகைகள், பருப்புகள், அவகோடா, ஆகிய நார்ச்சத்து நிறைந்த உணவுகள் தினசரி உணவில் கட்டாயம் சேர்த்துக் கொள்ள வேண்டியது அவசியமாக அமைகிறது.
உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டிய முக்கிய சத்துக்கள்
இனிப்பு எதுவும் சேர்க்காத யோகர்ட்டுடன் நட்ஸ் சேர்த்து நீங்கள் சாப்பிடலாம்.
பிரட், முட்டை, அவகோடா, ஆகியவற்றுடன் சேர்த்து சுவையைக் கூட்டி சாப்பிடலாம்.
சூரியகாந்தி விதைகளை அதிக அளவில் வறுத்து அல்லது பச்சையாக சாப்பிட்டு வரலாம்.
ஸ்நாக்ஸ் நேரங்களில் சிறிய துண்டு பாலாடைக்கட்டி சாப்பிடுங்கள் இது மற்ற ஆரோக்கியமற்ற உணவுகள் சாப்பிடுவதை முற்றிலும் தவிர்த்து விடும்.
தினசரி உணவில் நாட்டுக்கோழி முட்டை சேர்த்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள், பாதாம், வால்நட்ஸ், வேர்கடலை, போன்றவை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் இதயத்திற்கு எப்பொழுதும் நல்லதாக அமையும்.
உடற்பயிற்சி தேவை
குறைக்க முடியாத கடினமான தொப்பையை குறைக்க வேண்டுமென்றால் அதற்கு சிறந்த உடற்பயிற்சி தேவை.
அதிகப்படியான கொழுப்பை கரைக்க வேண்டும் என்றால் தினசரி குறைந்தபட்சம் 30 நிமிடங்கள் வரை கட்டாயம் உடற்பயிற்சி செய்வது அவசியம் என மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
40 நிமிடங்களும் ஒரே பயிற்சி செய்ய வேண்டியது அவசியம் இல்லை 15 நிமிடங்கள் நடைப்பயிற்சி, 15 நிமிடங்கள் சைக்கிள் ஓட்டுதல், மீதி 15 நிமிடங்கள் மற்ற உடற்பயிற்சிகள் எனப் பிரித்துச் செய்யுங்கள்.
இப்படி செய்வதால் உடல் உடலும் மனமும் சோர்வடையாமல் இருக்கும் அடிவயிற்று தொப்பையும் குறைந்துவிடும்.
வாழ்க்கை முறையில் சில மாற்றங்கள் தேவை
ஆரோக்கியமான உணவுப் பழக்கம், உடற்பயிற்சி, எவ்வளவு சிறந்தது, அந்த அளவிற்கு ஆரோக்கியமான வாழ்க்கை முறை மிக மிக முக்கியம்.
ஆரோக்கியமான வாழ்க்கை முறை அடிவயிற்றில் கொழுப்பு தேங்காமல் பார்த்துக் கொள்ள உதவும்.
நல்ல நீரோட்டத்துடன் எப்பொழுதும் இருக்க வேண்டும், அதே சமயம் சமச்சீர் உணவுகளை எடுத்துக் கொள்வதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
வெறும் சாதாரண தண்ணீரை மட்டும் குடிக்க உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால், எலுமிச்சை சாறு கலந்த நீரை அல்லது சீரகம் கலந்த நீரை எடுத்துக் கொள்ளுங்கள்.
சரியான தூக்கம் தேவை
இரவு நேரத்தில் நல்ல தூக்கம் மிக அவசியமாக அமைந்துவிடுகிறது உடல் ஆரோக்கியத்திற்கு, மிக குறைவாக தூங்குபவர்களுக்கு அதிக அளவில் வயிறு பெரிதாக இருக்கிறது.
ஆழ்ந்த நிம்மதியான தூக்கம் என்பது பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை உடலுக்கு எப்பொழுதும் வழங்கும்.
கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான முக்கியமான ஊட்டச்சத்து விவரங்கள்
நோயெதிர்ப்பு மண்டலத்தை அதிகமாக பலப்படுத்தும், ஹார்மோன் சமநிலை படுத்தும், உடலில் மெட்டபாலிசத்தை அதிகரிக்கச் செய்யும், ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 7 மணி நேரத்திற்கு மேல்தூங்கி விடுங்கள்.
5 best health benefits of tilapia eating fish
மது பழக்கம் மற்றும் புகை பிடிக்கும் பழக்கம்
மது பழக்கம் எடுத்துக் கொள்ளும் நபர்கள் அதை முதலில் தவிர்ப்பது நல்லதாக அமையும், ஆல்கஹால் அதிகம் எடுத்துக் கொண்டால் தொப்பை அதிகரிக்க அதிக வாய்ப்புகள் இருக்கிறது.