8 Best Ways to Prevent Hair Loss in tamil
முடி உதிர்தலைத் தடுக்க சிறந்த வழிகள்
உடலின் உச்சிப் பகுதியை ஆக்கிரமித்துள்ளவை ரோமங்களே. அதை தலைமுடி என்றும், கேசம் என்றும், கூந்தல் என்றும், அழைக்கிறோம். ஒவ்வொரு ஆணும், பெண்ணும், தனது கூந்தல் நீளமாகவும், அடர்த்தியாகவும், பளபளப்புடனும், இருக்க வேண்டும் என்பதில் அதிக ஆர்வமாக இருக்கிறார்கள்.
ஆண்களைவிட பெண்களே கூந்தல் அலங்காரம் செய்து கொள்ள அதிக நேரத்தை செலவிடுகின்றனர், கூந்தலை பராமரிக்க ஒரு தொகையை செலவு செய்கிறார்கள்.
தலை முடி அழகை மட்டும் தருவதில்லை தலைக்கு பாதுகாப்பையும் உடலின் வெப்பநிலை சமன்படுத்தி உடலுக்கு பாதுகாப்பை அளிக்கிறது. சித்தர்கள், முனிவர்கள், ரிஷிகள், இவர்கள் அதிக தலை முடியுடன் காட்சி தருவதற்கு இதுவும் ஒரு காரணம்.
பிறக்கும் பொழுது எல்லோருக்கும் ஆரோக்கியமான தலைமுடி இருக்கிறது, ஆனால் நாட்கள் செல்லச்செல்ல தலைமுடியை பாதுகாப்பதில் ஏற்படும் பிரச்சினைகள், ஊட்டச் சத்துக் குறைபாட்டினாலும் முடி கொட்டுதல் பிரச்சினை ஏற்படுகிறது.
முடி கொட்டுதலுக்கான முக்கிய காரணம்
மனச்சோர்வு, தூக்கமின்மை மற்றும் நீண்ட நாள் நோய் காரணமாக முடி கொட்டுதல் ஏற்படும். மேலும் ஊட்டச்சத்து குறைபாடும், அதிக சூடான நீரில் குளிப்பதாலும், குளித்த பின் தலையை நன்கு உலர விடாத காரணத்தாலும், முடி கொட்டுதல் ஏற்படும்.
பெண்களின் உடல் சுரக்கும் பெண்மை ஹார்மோன் ஈஸ்டரோஜென், ஆண்களுக்கு ஆண்மையை வெளிப்படுத்தும் ஆன்ட்ரோஜன், என்ற ஹார்மோன்கள் சுரப்பில் ஏற்படும் மாற்றங்களும் முடி கொட்டுதலை ஏற்படுத்தும்.
தலையில் ஏற்படும் பொடுகு, தோல் நோய்கள், பெண்களின் மாதவிடாய் கோளாறுகள் மற்றும் பிரசவத்திற்கு பின் ஏற்படும் இரத்த சோகை, ஒத்துவராத மருந்துகள், ரசாயன கலப்பு ஹேர் ஆயில், ஷாம்பு ஆகியவற்றிலும் முடி கொட்டுதல் ஏற்படும்.
மேலும் ஒரு சிலருக்கு உப்புத் தண்ணீரில் குளிப்பதாலும், மலச்சிக்கல் ஏற்படுவதாலும், உடல் உஷ்ணம் காரணமாக முடி கொட்டுதல் ஏற்படும்.
முடி கொட்டுவதை நிறுத்த சித்த மருத்துவம்
கரிசாலை இலை, நெல்லி வற்றல், அதிமதுரம் சமமாக, எடுத்து அரைத்து பூசி பின் குளித்து வரும் பழக்கத்தை மேற்கொண்டால் முடி கொட்டுதல் பிரச்சனை நிற்கும்.
துவரம் பருப்பை முதல்நாள் ஊறவைத்து, மறுநாள் அதே நீரில், அரைத்து தலைக்கு பற்றுப் போட்டு சிறிது நேரம் கழித்து குளித்து வந்தால் முடி உதிர்தல் நிற்கும்.
சிறிய வெங்காயத்தை நன்கு அரைத்து தலையில் தேய்த்து சிறிது நேரம் கழித்து குளித்தால் முடி உதிருதல் நிற்கும்.
செம்பருத்தி பூவை நன்கு அரைத்து, வாரம் ஒரு முறை தலைக்குத் தேய்த்து, ஊறவைத்து குளித்து வந்தால் முடி உதிர்தல் நிற்கும்.
பொன்னாங்கண்ணி சாறு, கரிசலாங்கண்ணிச் சாறு, தேங்காய் எண்ணெய், எடுத்து நீர் வற்றக் காய்ச்சி தலைக்கு தேய்த்து வர முடி உதிர்தல் நிற்கும்.
செரிமான பிரச்சனையை சரி செய்யும் பாட்டி வைத்தியங்களைப்
உலர்ந்த மருதாணி இலை பொடி 2 ஸ்பூன், 2 ஸ்பூன் அதிமதுரப் பொடி, 2 ஸ்பூன் நெல்லி வற்றல், 2 ஸ்பூன் இவைகளை பால்விட்டு அரைத்து தண்ணீர் கலந்து பின் சூடாக்கி இளஞ்சூட்டில் இறக்கி தலைக்கு தேய்த்து வர வேர்களில் படும்படி, மசாஜ் செய்து சிறிது நேரம் கழித்து குளிக்க முடி உதிர்தல் நிற்கும்.
Click here to view our YouTube channel
கோழி முட்டையின் வெண்கருவில் வெங்காயத்தை நசுக்கி போட்டு தலையில் தேய்த்து ஊறவைத்து குளித்தால் முடி உதிருதல் நிற்கும்.
8 best foods that protect the heart in tamil
மேலும் உடல் உஷ்ணம் மிகுந்த நபர்கள் இரவில் நல்லெண்ணையை உள்ளங்கையில் தேய்த்து மசாஜ் செய்யவும், சத்து குறைவாக உள்ளவர்கள் பழங்கள், கீரைகள், தாவரஎண்ணெய், கொட்டைகள், போன்றவற்றை உணவில் அதிகம் சேர்த்துக் கொண்டால் முடி கொட்டுவது நிற்கும்.