8 High Profitable small agriculture business

வேளாண் சார்ந்த துறைகளில் அதிக லாபம் தரக்கூடிய சிறு தொழில்கள்(8 High Profitable small agriculture business)

ஒரு தொழிலைத் தொடங்குவதற்கு முன்பு சரியான திட்டமிடல் என்பது மிகவும் அவசியம் ஒரு மடங்கு தேடல், இருமடங்கு  முயற்சி, மூன்று மடங்கு பொறுமை, நான்கு மடங்கு உழைப்பு, தேவைப்படும்.

தொழிலில் முக்கியமாக நிதிநிலை அறிக்கை சரியாக நடைபெற்றால் மட்டுமே அந்த தொழில் தொடர்ந்து முன்னேறிக் கொண்டே செல்லும். தொழிலை நடத்தும் தலைவருக்கு நிதிநிலை சார்ந்த அனுபவம் அறிவு மிக முக்கியமாக தெரிந்திருக்க வேண்டும். மேலும் தொடர்ந்து தினமும் ஒரு மணி நேரம் அல்லது இரண்டு மணி நேரம் ஒதுக்கி தொழிலில் நிதி நிலையை பற்றி அலசி ஆராய வேண்டும் அப்போதுதான் அந்தத் தொழில் நிலையாக போட்டி போட்டுக்கொண்டு முன்னேறிச் செல்லும்.

இந்த உலகில் வேளாண் சார்ந்த துறைகளில் எப்பொழுதும் லாபம் தரக்கூடிய தொழில்கள் நிறைய உண்டு அதை சரியாக வழிநடத்தும் தலைவர்கள் பலமடங்கு லாபத்துடன் முன்னேறுகிறார்கள்.

எந்த ஒரு தொழிலுக்கும் மூலப்பொருள் என்பது மிகவும் முக்கியமானதாகும் காரணம் மூலப்பொருளில் அதிக அளவில் முதலீடு செய்தால் அந்த தொழில் லாபம் பார்க்க முடியாது. மூலப் பொருட்களை வாங்கும்பொழுது வரி செலுத்தக்கூடிய வகையில் வாங்கக்கூடாது.

வேளாண் சார்ந்த துறைகளுக்கு அரசாங்கம் எப்பொழுதும் மானியத்துடன் கூடிய கடன்கள் வழங்கிக் கொண்டே இருக்கிறது இதைப்பற்றி இது தெரிந்து கொள்வது நல்லது.

2015 ஆண்டுக்கு பிறகு தமிழகத்தில் உள்ள மக்கள் இயற்கை சார்ந்த உணவு பொருட்களை அதிக அளவில் வாங்க தொடங்கினார்கள். தமிழகத்திலுள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் தொழில் தொடங்குவதற்கான ஆலோசனைகள் மாவட்ட நிர்வாகத்தால் வழங்கப்படுகிறது

இந்த கட்டுரையில் வேளாண் சார்ந்த லாபம் தரக்கூடிய தொழில்களைப் பற்றி பார்ப்போம்.

தேனீ வளர்ப்பு (Beekeeping)

8 High Profitable small agriculture business

ஆரோக்கிய முதல் அலகு வரை அனைத்திற்கும் தேன் ஒரு சிறந்த பொருளாக பயன்படுத்தப்படுகிறது மேலும் இந்த உலகில் சுத்தமான தேன் எப்பொழுதும் கெட்டுப் போகாமல் இருக்கும் .

தேன் நல்ல மருந்தாக பல்வேறு ஆயுர்வேத மூலிகைகள் தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது தற்போது வளர்ந்து வரும் துறைகளில் தேனி வளர்ப்பு அதிக முக்கியத்துவம் பெறுகிறது இதனை அறிந்த பன்னாட்டு  நிறுவனங்கள் தேன் வளர்ப்பு துறைகளில் ஈடுபடுகிறது. மேலும் மத்திய மாநில அரசுகளும் இந்தத் தொழிலை ஊக்குவிக்க ஆர்வம் செலுத்தி வருகிறது  புது தொழில் செய்ய திட்டமிடுபவர்கள் தேன் வளர்ப்பு குறித்து முறையான பயிற்சியை மேற்கொண்டால் இந்த தொழிலை நல்ல முறையில் செய்யலாம்.

சேமிப்பு கிடங்கு (Storage warehouse)

தமிழ்நாடு அரசு பல்வேறு மாவட்டங்களில் விவசாயிகளின் பொருளாதாரத்தை ஊக்குவிக்க சேமிப்புக் கிடங்கை அமைத்துள்ளது.

வேளாண் சார்ந்த பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் பொழுதுதான் விவசாயிகள் விளைவித்த பொருட்களுக்கு அதிக லாபம் பெற முடியும் இதனால் பெரும்பாலான விவசாயிகள் மற்றும் வணிகர்கள் தங்கள் விளைவித்த பொருட்களை அதிக அளவில் சேமித்து வைக்க தொடங்குகிறார்கள் எனவே இதுபோன்ற சூழலில் சேமிப்புக் கிடங்கின் தேவை எப்பொழுதும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது நல்ல தொழில் நுட்பம் கொண்டு ஒரு சேமிப்புக் கிடங்கு அமைப்பதன் மூலம் நீங்கள் இதில் அதிக லாபம் பார்க்க முடியும் மேலும் விவசாயிகள் அதிகம் உள்ள பகுதியில் சேமிப்புக் கிடங்கு அமைத்து அதற்கு குறைந்த அளவில் கட்டணம் வசூலித்தால் எப்பொழுதும் லாபம் பார்க்க முடியும்.

பால் பண்ணை (Dairy)

8 High Profitable small agriculture business

சமூக வலைத்தளங்களில் பலமுறை சில நபர்கள் பால் பண்ணை அமைத்து அதிக வருமானம் ஈட்டுகிறார்கள் என்ற செய்தியை அனைவரும் படித்து இருப்போம் இது ஒரு உண்மையான செய்தியாகும் காரணம் பால் பண்ணையில் அதிக லாபம் கிடைக்கிறது ஆனால் இதை நடத்துவதற்கு சரியான வழிமுறை தெரிந்து இருக்க வேண்டும்.

மாடுகளுக்கு தேவையான தீவனங்களை  நீங்கள் தயாரித்தால் மட்டுமே பால் பண்ணையில் லாபம் பார்க்க முடியும். மேலும் பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களை உங்கள் அருகில் உள்ள மக்களுக்கு விற்பனை செய்யவும் அதனை பன்னாட்டு நிறுவனங்களுக்கு விற்பனை செய்தால் உங்களால் பால்பண்ணையில் லாபம் பார்க்க முடியாது.

பூக்கள் விவசாயம் (Flowers farming)

8 High Profitable small agriculture business

இந்தியாவில் இந்துக்கள் பண்டிகை அதிகமாக வரும் மாதங்களில் பூக்களின் விலை  1,000 ரூபாய் வரை செல்லும் ஒரு கிலோ. பூக்கள் மீது எப்பொழுதும் மக்களுக்கு ஆர்வம் உண்டு இந்த தொழிலை நல்ல பயிற்சி எடுத்துக்கொண்டு மேற்கொண்டால் மட்டுமே நல்ல லாபம் பார்க்க முடியும். காலத்திற்கு ஏற்ப பூக்களை சாகுபடி செய்ய வேண்டும்.

மருந்து மற்றும் அழகு சாதன பொருட்கள் தயாரிப்பதற்கு பூக்களை அதிக அளவில் விலை கொடுத்து சில பன்னாட்டு நிறுவனங்கள் வாங்கிக்  கொள்கிறது. மேலும் வெளிநாடுகளுக்கு ஒப்பந்த முறையில் ஏற்றுமதி செய்தால் அதிக லாபம் பார்க்க முடியும்.

இயற்கை உரம் தயாரித்தல் (Making compost).

8 High Profitable small agriculture business

செயற்கையாக தயாரிக்கப்படும் உரங்களை நிலங்களுக்கு பயன்படுத்தும் பொழுது நிலத்தடி நீர்மட்டம் குறைகிறது மற்றும் நிலங்களில் இருக்கும் மூலிகை செடிகள் அழிந்து வருகிறது இதனை அறிந்த அரசாங்கம் இயற்கை சார்ந்த உரங்களை தயாரிப்பதற்கு  விவசாயிகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது.

இயற்கையான முறையில் விளைவித்த காய்கறிகளை மக்கள் அதிக விலை கொடுத்து வாங்குகிறார்கள் இதனால் இன்று வளர்ந்து வரும் தொழில்களில் முதன்மையாக இந்த தொழில் உள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் தொழில் பயிற்சி நிறுவனங்களை தமிழக அரசு நடத்துகிறது அங்கு இதனை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளலாம்.

காளான் வளர்ப்பு (Mushroom cultivation)

8 High Profitable small agriculture business

குறைந்த முதலீடு குறைந்த காலத்தில் அதிக லாபம் பெற முடியும் இந்த தொழிலில் இந்த தொழிலை நடத்துவதற்கு தேவையான பயிற்சி நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும் இதற்கு நீங்கள் அதிகம் சிரமப்பட தேவை இல்லை இது தொடர்பாக ஒவ்வொரு மாவட்டத்திலும் வேளாண் துறை அதிகாரிகளை அணுகி இது குறித்து விபரங்களை பெற்றுக் கொள்ளலாம்.

சாலையோரங்களில் விற்கப்படும் துரித உணவுகளின் காளான் பயன்படுத்தப்படுகிறது மேலும் புதுமனை புகுவிழா, திருமணம், திருவிழா போன்ற இடத்தில் காளான் பிரியாணி அதிகளவில் தயாரிக்கப்படுகிறது. காளான் தொழிலில் அதிக லாபம் குறைந்த முதலீடு குறைந்த நாட்களில் கிடைக்கிறது.

நாட்டுக்கோழி பண்ணை (Poultry farm) 

8 High Profitable small agriculture business    

பண்ணைகளில் வளர்க்கப்படும் வெள்ளை கோழிகள் குளங்களில் வளர்க்கப்படும் மீன்கள் அதிக அளவில் வளர்வதற்கு செயற்கையாக ஊசிகள் போடப்படுகிறது இதனால் இதனை சாப்பிடும் மக்களுக்கு பலவித நோய்கள் ஏற்படுகிறது இதனை அறிந்த நமது அரசு நாட்டுக்கோழி பண்ணை அமைப்பதற்கு 10 லட்சம் ரூபாய் முதல் மானியத்துடன் கடன்களை வழங்குகிறது.

நாட்டுக்கோழி முட்டை ஒன்று 10 ரூபாய்க்கு விற்கப்படுகிறது, நாட்டுக் கோழிகள் அதிக அளவில் இப்பொழுது இருக்கும் காலங்களில் கிலோ 400 ரூபாய் முதல் விற்கப்படுகிறது.

நாட்டுக்கோழி பண்ணைகளுக்கு தீவனங்களை அதிக அளவில் விலை கொடுத்து வாங்கினால் லாபம் பார்க்க முடியாது மேலும் சந்தைகளில் அழுகிய காய்கறிகளை நாட்டுக்கோழிகளுக்கு குறைந்த விலையில் உணவாக கொடுக்கலாம் இதன்மூலம் உங்களுக்கு சிறிய அளவில் பணம் சேமிப்பாகும்.

இயற்கை நாற்றங்கால் (natural nursery planet)

8 High Profitable small agriculture business

இந்த தொழிலுக்கு சிறிய கிராமம் முதல் பெரிய நகரங்கள் வரை வாடிக்கையாளர்கள் அதிக அளவில் உண்டு.

வீடு மற்றும் அலுவலகத்தை அழகு படுத்துவதற்கு சிறிய மணி பிளான்ட் செடிகளை அதிக அளவில் நகரவாசிகள் வாங்குகிறார்கள்.

சிறந்த முதலீட்டு திட்டம் தேசிய கால்நடை பணி 2020.

பூஞ்செடிகள் மூலிகை செடிகள் விவசாயிகளுக்கு தேவையான நாற்றங்கள் அதிக அளவில் எல்லா காலங்களிலும் விற்பனையாகிக் கொண்டிருக்கிறது இந்த தொழிலை நடத்துவதற்கு முறையான பயிற்சியும் அனுமதியும் அரசிடம் பெற வேண்டும்.twitter

Leave a Comment