8 Simple Tips to Grow a Mustache Beard Faster

8 Simple Tips to Grow a Mustache Beard Faster

மீசை தாடி வேகமாக வளர என்ன செய்ய வேண்டும் அதை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

வணக்கம் நண்பர்களே இன்றைக்கு நம்மளுடைய இணையதளத்தில் ஆண்கள் அதிகமாக விரும்பும் மீசை தாடி வேகமாக வளர என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி தெரிந்து கொள்ள போகிறோம்.

சில ஆண்களுக்கு மிக எளிதாகவே அதாவது இயற்கையான முறையில் எளிதில் மீசை தாடி அதிக அளவில் வளர்ந்து விடும்.

ஆண்கள் என்றாலே மீசை தாடி சரியாக இருந்தால் அவர்களுடைய முகத்தோற்றம் மிக அழகாக இருக்கும். ஆனால் சில ஆண்களுக்கு இந்த மீசை தாடி வளர்வது என்பது இப்பொழுது பெரும் சிக்கலாக இருக்கிறது.

அவர்கள் அதற்கு பல்வேறு வழிமுறைகளை பின்பற்றுவார்கள், சில வழிமுறைகள் வெற்றியடையும் சில வழிமுறைகள் தோல்வியில் முடியும்.

எனவே மீசை மற்றும் தாடி எனக்கு வளரவில்லை என்று கவலைப்படுபவர்கள் இனி கவலைப்பட தேவையில்லை இதனை பற்றி தெரிந்து கொள்ளுங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள கட்டுரை மூலம்.

நீங்கள் இந்த செய்முறையை தினமும் கடைப்பிடித்து வந்தால் கண்டிப்பாக உங்களுக்கு மீசை மற்றும் தாடி மிக எளிதாகவே, இயற்கையான முறையில், வேகமாக வளர ஆரம்பித்துவிடும்.

இங்கு கொடுக்கப்பட்டுள்ள எண்ணெய்ணை வித்துக்கள் அனைத்தும் இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட எண்ணெய்களாக இருக்க வேண்டும்.

குறிப்பாக நீங்கள் பயன்படுத்தும் எண்ணெய்களில் கலப்படம் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் ஒருவேளை கலப்படமான எண்ணெய்யை நீங்கள் பயன்படுத்தினால் பல்வேறு பக்க விளைவுகள் ஏற்படும்.

இதனை நீங்கள் எப்போதும் ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்.

8 Simple Tips to Grow a Mustache Beard Faster

ஆமணக்கு எண்ணெய்

நீங்கள் இரவு தூங்குவதற்கு முன்பு ஒரு பாத்திரத்தில் தண்ணீரை நன்றாக கொதிக்கவைத்துக் கொள்ளவும் பின்பு அந்த தண்ணீரை முகத்தில் ஆவி பிடிக்கவும்.

முகத்தில் ஆவி பிடித்த பிறகு முகத்தை சுத்தமாக துடைத்துவிட்டு ஆமணக்கு எண்ணெய்யை மீசை மற்றும் தாடி வளரும் இடத்தில் தேய்த்து நன்றாக மசாஜ் செய்ய வேண்டும்.

பின்பு இரவு முழுவதும் வைத்திருந்து மறுநாள் காலையில் முகத்தை குளிர்ந்த நீரால் கழுவி வந்தால் கண்டிப்பாக மீசை மற்றும் தாடி வளர ஆரம்பித்துவிடும்.

நீங்கள் ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டியது என்னவென்றால் குளிர்ந்த நீரால் மட்டுமே அதிகாலையில் முகத்தை கழுவ வேண்டும்  சுடுதண்ணி பயன்படுத்தக்கூடாது.

8 Simple Tips to Grow a Mustache Beard Faster

விளக்கெண்ணெய்

முகத்தில் முடி வளர்ச்சியை தூண்டுவதற்கு அதிக அளவு விளக்கெண்ணெய் பயனுள்ளதாக இருக்கிறது, எனவே தினமும் இரவு தூங்குவதற்கு முன் முகத்தில் விளக்கெண்ணெய் தடவி மறுநாள் காலையில் முகத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.

இந்த முறையை நீங்கள் தினமும் கடைப்பிடித்து வந்தால் முகத்தில் மீசை மற்றும் தாடி கண்டிப்பாக வேகமாக வளர ஆரம்பித்து விடும்.

ஆலிவ் ஆயில்

தாடி வளர ஆமணக்கு எண்ணெய் மற்றும் ஆலிவ் ஆயில் இரண்டையும் ஓரளவுக்கு ஒன்றாக கலந்து இரவு தூங்குவதற்கு முன்பு முகத்தில் தடவி மறுநாள் காலையில் குளிர்ந்த நீரால் முகத்தை கழுவ வேண்டும்.

இவ்வாறு தினமும் இந்த செய்முறை நீங்கள் கடைபிடித்து வந்தால் முகத்தில் மீசை மற்றும் தாடி கண்டிப்பாக வளர ஆரம்பித்துவிடும்.

வெங்காயச் சாறு

நல்ல முறையில் இருக்கின்ற சிறு வெங்காயத்தை எடுத்துக் கொண்டு அதனை நன்கு அரைத்து சாறு எடுத்துக் கொள்ளவும் அவற்றில் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய், ஒரு ஸ்பூன் விளக்கெண்ணெய், ஒரு விட்டமின் இ மாத்திரை ஒன்றும் மற்றும் ஆலிவ் ஆயில் ஒரு ஸ்பூன் ஆகியவற்றை ஒன்றாக கலந்து கொள்ளவும்.

இந்த கலவையை இரவு தூங்குவதற்கு முன்பு முகத்தில் தடவி மறுநாள் காலையில் குளிர்ந்த நீரால் முகத்தை கழுவ வேண்டும் இந்த செய்முறையை நீங்கள் தொடர்ந்து 10 நாட்கள் வரை கடைப்பிடித்து வந்தால் கண்டிப்பாக உங்கள் முகத்தில் மீசை தாடி வளர ஆரம்பித்துவிடும்.

கருஞ்சீரகம் எண்ணெய்

மீசை வளர கருஞ்சீரகம் எண்ணெய் எப்பொழுதும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது, எனவே நீங்கள் இரவு தூங்குவதற்கு முன்பு முகத்தில் நீராவி பிடித்து விட்டு பின்பு காட்டன் துணியால் முகத்தை நன்கு சுத்தப்படுத்திக் கொள்ளவும்.

இந்த கருஞ்சீரகம் எண்ணெய் மீசை மற்றும் தாடி வளரும் இடத்தில் தடவி இரவு முழுவதும் வைத்திருக்க வேண்டும் மறுநாள் காலையில் குளிர்ந்த நீரால் முகத்தை கழுவி விடவேண்டும்.

இந்த செய்முறையை தினமும் கடைபிடித்து வந்தால் கண்டிப்பாக மீசை மற்றும் தாடி வளர ஆரம்பித்துவிடும்.

இலவங்கப்பட்டை

ஒரு சில இலவங்கப்பட்டைகளை எடுத்து நன்கு அரைத்துக்கொள்ளவும் சிறிது எலுமிச்சை சாறு விட்டு நன்றாக கலந்து கொள்ளவும்.

இந்த பேஸ்ட்டை உங்கள் தாடி பகுதியில் தடவி குறைந்தது 30 நிமிடங்கள் முகத்தில் ஊற வைக்கவேண்டும், பின்பு குளிர்ந்த நீரை பயன்படுத்தி உங்கள் முகத்தை நன்றாக கழுவவேண்டும்.

அதிகபட்ச இந்த செயல்முறை வாரத்தில் இரண்டு முறையாவது நீங்கள் செய்து வந்தால் முகத்தில் தாடி மற்றும் மீசை எளிதாக வளர ஆரம்பித்துவிடும்.

மீசை தாடி வேகமாக வளர தேவையான உணவு முறை

மீசை தாடி வேகமாக வளர்வதற்கு சில வகையான ஊட்டச் சத்துக்கள் அவசியம் தேவை நீங்கள் அது போல் இருக்கும் ஊட்டச்சத்துக்களை எடுத்துக் கொண்டால் கண்டிப்பாக உங்களுக்கு பயன் கிடைக்கும்.

உங்கள் ஆயுசுக்கும் தலைமுடி பிரச்சினை வராது

தினமும் மீன், முட்டை, பால், கேரட், வைட்டமின் சி, உணவுகள் அதிக அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

எங்கள் YouTube சேனலைப் பார்க்க இங்கே கிளிக் செய்யவும்

சின்ன வெங்காயம்

பொதுவாக முடி வளர்ச்சியைவேகமாக தூண்டுவதற்கு சின்ன வெங்காயம் சிறந்த இயற்கை மூலப் பொருட்களாக இருக்கிறது எனவே உங்களுக்கு மீசை தாடி வேகமாக வளர வேண்டும் என்று எண்ணம் இருந்தால்.

Homeopathy treatment history and benefits 2021

இந்த சின்ன வெங்காயத்தின் சாறினை மீசை மற்றும் தாடி வளரும் இடத்தில் நன்றாக பேஸ்ட்போல் அப்ளை செய்து மசாஜ் செய்து வந்தால் விரைவில் மீசை தாடி எளிதாக வேகமாக வளர ஆரம்பித்துவிடும்.

Leave a Comment