8 Symptoms of Bone Cancer Useful tips
எலும்பு புற்றுநோயின் ஆரம்ப கால சில அறிகுறிகள்..!
புற்றுநோயில் பல வகைகள் இருக்கிறது அவற்றில் ஒன்றுதான் எலும்பு புற்றுநோய் இது அதிக அளவில் மக்களிடத்தில் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
இந்த எலும்பு புற்றுநோய் பற்றி மக்களுக்கு 90% விழிப்புணர்வு இல்லை இன்னும் சொல்லப்போனால் எலும்பு புற்றுநோய் ஒன்று இருக்கிறதா என்பது கூட மக்களுக்கு தெரியாமல் இருக்கும்.
ஆனால் எலும்பு புற்றுநோய் இருப்பது உண்மை இது அதிக அளவில் வெளியில் தெரிவதில்லை.
இந்த நோயால் இதுவரை அதிகமான மக்கள் பாதிக்கப்படவில்லை மற்ற புற்று நோய்களால் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
இது எலும்புகளில் அசாதாரண செல்கள் கட்டுப்பாடு இன்றி வளரும்போது ஏற்படுகிறது.
எலும்பு புற்று நோயானது எலும்புகளில் உள்ள ஆரோக்கியமான திசுக்களை முற்றிலும் அழிக்கிறது.
இந்த எலும்பு புற்றுநோய் பெரும்பாலும் இடுப்பு எலும்பு அல்லது கைகள் மற்றும் கால்களை தான் பாதிக்கும்.
எலும்பு புற்றுநோய் மிகவும் அரிதானது பெரும்பாலான எலும்புகளில் ஏற்படும் கட்டிகள் தீங்கு ஏற்படுவதில்லை.
அதாவது அவை புற்றுநோய் கட்டிகள் அல்லது மற்றும் அவை உடலில் பிற பகுதிகளுக்கு பரவாது.
ஆனால் எலும்புகளில் வரும் கட்டிகள் எலும்புகளை வலுவிழக்கச் செய்துவிடும், எலும்பு முறிவு அல்லது பிரச்சினைகளுக்கு இது வழிவகை ஏற்படும்.
எலும்பு புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பலருக்கும் மற்றொரு புற்றுநோய் இரண்டாம் நிலை பரவலில் இருந்து உருவாகிறது.
எலும்பு புற்றுநோய் இருந்தால் என்ன மாதிரியான அறிகுறிகள் உடலில் தோன்றும் என்பதை பற்றி முழுமையாக இந்த கட்டுரையில் தெரிந்துகொள்ளலாம்.
கடுமையான உடல் சோர்வு
நீங்கள் நாள் முழுவதும் சோர்வாக உணர்கிறீர்களா அல்லது அடிக்கடி உடல்நலம் சரியில்லாமல் போகிறது.
உங்களுடைய அன்றாட வேலையை கூட சரியாக உங்களால் செய்ய முடியவில்லையா.
உடல் ஒத்துழைப்பு கொடுக்கவில்லை அப்படி என்றால் உடனே மருத்துவரை அணுகி உங்களுடைய முழு உடலை பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.
ஏனென்றால் உடல் சோர்வும் எலும்பு புற்றுநோய் முக்கிய அறிகுறிகளாக இருக்கிறது.
இரவு நேரத்தில் அதிகமாக வியர்ப்பது
உங்களுக்கு சில நாட்களாகவே இரவு நேரத்தில் அதிகமாக வியர்க்கிறதா அப்படியானால் உடனடியாக நீங்கள் மருத்துவரை அணுகி அவரிடம் இதைப் பற்றி முழுமையாக தெரிவியுங்கள்.
ஏனெனில் இரவு நேரத்தில் உடல் அதிகமாக வியர்க்க தொடங்கினால் பல்வேறு வகையான நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
மிகவும் கொடுமையான நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம், அதில் எலும்பு புற்று நோயும் இருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.
நகர முடியாத சூழ்நிலை
உங்களால் சிறிய தூரத்திற்கு கூட நகர முடியவில்லையா, நடக்க முடியவில்லையா, அல்லது உட்கார முடியவில்லையா.
அப்படியானால் உடனடியாக நீங்கள் மருத்துவரிடம் செல்லுங்கள் ஏனெனில் இது எலும்பு புற்று நோயின் மிக முக்கிய அறிகுறியாகும்.
காய்ச்சல் வந்து கொண்டே இருக்கிறதா
காய்ச்சல் அனைவருக்கும் வரக்கூடிய பொதுவான ஒரு சிறிய உடல் நல பாதிப்பு.
ஆனால் எலும்பு புற்றுநோய் அறிகுறிகளுடன் காய்ச்சல் தொடர்ந்து கொண்டே இருந்தால், அது எலும்பு நோயாக இருக்கலாம் எனவே விழிப்புணர்வுடன் இருங்கள்.
மூட்டு விறைப்பு தன்மை
8 Symptoms of Bone Cancer Useful tips மூட்டு விறைப்பு இருக்கிறதா உங்களின் அன்றாட வேலையை கூட உங்களால் செய்ய முடியவில்லையா மூட்டை விறைப்புடன் மூட்டுவலியும் இருக்கிறதா.
உடனடியாக மருத்துவரை அணுகி அதற்கான சிகிச்சைகளை எடுத்துக்கொள்ளுங்கள் இதுவும் எலும்பு புற்று நோயின் ஒரு அறிகுறி தான்.
நொண்டி நடப்பது போன்ற உணர்வு
8 Symptoms of Bone Cancer Useful tips நீங்கள் நடக்கும் பொழுது நொண்டி நடப்பது போன்ற ஒரு உணர்வு உங்களுக்கு இருக்கிறதா.
பொதுவாக வலி, பலவீனம், நரம்பு தசை, ஏற்றத்தாழ்வு அல்லது எலும்பு சிதைவு போன்றவற்றால் நொண்டி நடக்க நேரிடும்.
எனவே இந்த மாதிரியான சூழ்நிலையில் உடனே மருத்துவரை அணுகி நீங்கள் பரிசோதனை செய்து கொள்வது மிகவும் நல்லது.
ஏனெனில் எலும்பு புற்று நோயின் முக்கிய அறிகுறிகள் இது ஒன்றாக இருக்கிறது.
வீக்கம் மற்றும் வலிகள்
8 Symptoms of Bone Cancer Useful tips கால் மூட்டுகளில் தொடர்ச்சியான வலி மற்றும் வீக்கத்தை நீங்கள் சந்தித்தால்.
வலியால் சரியாக தூங்க முடியாமல் இருந்தால் உங்கள் மன அமைதி பாதிக்கப்பட்டு மன அழுத்தம் அதிகமாக இருந்தால்.
இரவு நேரத்தில் அடிக்கடி வலி இருந்து கொண்டே இருந்தால் இது எலும்பு புற்று நோயாக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.
உடல் எடை இழப்பு
பொதுவாக உடல் எடையானது நீங்கள் உடற்பயிற்சி செய்து மற்றும் உணவில் கட்டுப்பாடு இருந்து உடல் எடையை குறைத்தால் அது ஆரோக்கியமானது.
ஆனால் எந்த ஒரு முயற்சியும் இன்றி ஒரு நபருக்கு திடீரென்று உடல் எடை குறையத் தொடங்கினால் உடல் உள்ளுறுப்புகளில் மிகப் பெரிய பாதிப்பு ஏற்படுகிறது என்று அர்த்தம்.
உடலில் ஏதோ ஒரு மிகப்பெரிய பிரச்சினை ஏற்படுகிறது என்று அர்த்தம்.
உடனடியாக மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.
ஏனெனில் அனைத்து வகையான நோய்களுக்கும் பொதுவான ஒரு அறிகுறி என்றால் திடீரென்று உடல் எடை இழப்பது மட்டுமே.