aavaram poo amazing 10 uses in tamil
ஆவாரம் பூவின் அற்புத நன்மைகளை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்..!
ஆவாரம் பூ எண்ணற்ற பல அதிசய மருத்துவ குணங்களைத் தன்னுள் கொண்டுள்ளது.
இது நோய்களைக் குணப்படுத்துவதால் நோயினால் மனிதன் இறப்பதை தடுக்கிறது.
இன்றைய உலக மக்கள் தொகையில் அதிகப்படியான மக்கள் நீரிழிவு அதாவது சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
இந்த சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் குணம் ஆவாரம் பூவுக்கு அதிகமாக உண்டு, மேலும் தோலுக்கு தங்க நிறத்தையும் கொடுக்கும் தங்கநிறப் பூவும் என்று அழைக்கப்படுகிறது.
உடல் துர்நாற்றம் நீங்க
ஆவாரம் பூக்களை சிறிதளவு எடுத்து அதை நன்கு அரைத்து உடல் முழுவதும் பூசி காய்ந்த பின்பு குளிர்ந்த நீரால் குளித்து வந்தால் உடலில் ஏற்படும் துர்நாற்றம் நீங்கும்.
அதோடு தோல் சம்பந்தமான பிரச்சனைகள் சரியாகும் சொறி, அரிப்பு, போன்றவை குணமாகும்.
காய்ச்சல் குணமாக
காய்ச்சல் ஒருவகை நுண்ணுயிரி தொற்றுகள் மூலமே உடலில் ஏற்படுகிறது எப்படிப்பட்ட காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருந்தாலும்.
ஆவாரம் பூக்களை போட்டு வேக வைத்த தண்ணீரை காய்ச்சல் ஏற்பட்ட காலங்களில், அவ்வப்போது குடித்து வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி பல மடங்கு அதிகரித்து, காய்ச்சல் முற்றிலும் குணமாகிவிடும்.
பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில்
சில பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு அடிவயிற்றில் வலி மிகுந்து நிலை ஏற்படும்.
இதுபோன்ற சமயங்களில் ஆவாரம் பூக்களை கூட்டு போல் செய்து சாப்பிட்டு வந்தால் மாதவிடாய் காலத்தில் அதிக ரத்தப்போக்கு ஏற்படுவது நிற்கும்.
அடிவயிற்றில் ஏற்படும் வலி குறையும், அது மட்டுமில்லாமல் கர்ப்பப்பையில் இருக்கும் நச்சுக்களையும் நீக்கி விடும்.
கிருமி நாசினியாக பயன்படுத்தலாம்
ஆவாரம்பூ இயற்கையிலே கிருமி நாசினித் தன்மை அதிகம் கொண்டது இந்த பூக்களை அவ்வப்போது பக்குவப்படுத்தி சாப்பிட்டு வருவதால்.
உடலில் தொற்று நோய்க் கிருமிகளால் பாதிப்பு ஏற்படாமல் தடுத்துக் கொள்ள முடியும்.
கெட்டுப்போன உணவுகளை சாப்பிடுவதால் ஏற்படும் பாதிப்புகளையும் குணப்படுத்தலாம்.
ஆவாரம் பூ சிறந்த இயற்கை மருந்தாக இப்பொழுதும் பயன்படுத்தப்படுகிறது.
தலை முடி பளபளப்பாக
ஒரு கை பிடி ஆவாரம் பூவை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி வைத்துக் கொள்ளுங்கள்.
நீங்கள் தலைக்கு குளிக்கும் போது இந்த தண்ணீரில் ஒரு எலுமிச்சை பழத்தை பிழிந்து விட்டு தலைக்கு குளித்தால் முடி மினுமினுப்பாக மாறும்.
மூலநோய் குணமாக
ஆவாரம் பூ, கொழுந்து, ஆவாரம் பட்டை, வேர், இவற்றை சம அளவு எடுத்து நிழலில் உலர்த்தி இடித்து மெல்லிய துணியால் சலித்துக் கொள்ளுங்கள்.
இந்த பொடியுடன் பசு நெய் கலந்து சூரணம் செய்து ஒரு மண்டலம் அதாவது 48 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர உள் மூலம் முற்றிலும் குணமாகிவிடும்.
தலைமுடி நன்கு வளர
ஆவாரம் பூ, செம்பருத்திப் பூ, தேங்காய் பால், சோற்று கற்றாழை, என ஒரு கப் எடுத்துக் கொண்டு வாரம் ஒரு முறை தலைக்கு குளியுங்கள்.
உடல் குளிர்ச்சி பெறும் முடி கொட்டுவது உடனடியாக நின்றுவிடும், தலைமுடி சம்பந்தமான அனைத்து பிரச்சினைகளும் குணமாகிவிடும், கூந்தல் கருமையாக வளரத் தொடங்கிவிடும்.
உடல் சூட்டினால் ஏற்படும் கண் நோய்களுக்கு
aavaram poo amazing 10 uses in tamil ஆவாரம் பூக்களை நன்கு வதக்கி ஒரு மெல்லிய துணியில் சுற்றி கண்களில் ஒத்தி எடுங்கள் உடல் சூட்டினால் ஏற்படும் கண் நோய் முற்றிலும் குணமாகும்.
Bamboo rice amazing benefits list 2022
ஆவாரம் பட்டையை கஷாயம் வைத்து வாய் கொப்பளித்தால் வாய் துர்நாற்றம் பல் சம்பந்தமான பிரச்சனைகள் குணமாகும்.
உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள
aavaram poo amazing 10 uses in tamil உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளை வியர்வை மூலம் வெளியேற்றி, சருமத்திற்கு மினுமினுப்பைக் கொடுக்கும்.
குடும்ப தலைவிகளுக்கு இலவச ஸ்மார்ட் போன் மாநில அரசு அறிவிப்பு..!
பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் குணமாகும், ஆவாரம் பூவை கசாயம் வைத்து தொடர்ந்து குடித்து வந்தால், உடலை நோயின்றி அரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.
உடல் நன்கு வலிமை பெற
aavaram poo amazing 10 uses in tamil ஆவாரம் மரத்தின் பட்டை, பனங்கல்கண்டு, வால் மிளகு, ஏலக்காய் சேர்த்து, தண்ணீர் விட்டு பாகு போல் காய்ச்சி அதில் பால் கலந்து தொடர்ந்து குடித்து, வர உடல் வலிமை அடையும், சர்க்கரை நோய் முழுவதும் கட்டுக்குள் வந்துவிடும்.