Aavin Milk Notification 2020 Huge Vacancy
ஆவின் நிறுவனத்தில் ரூபாய் 62,000 ஊதியத்தில் வேலைவாய்ப்பு அறிவித்துள்ளது தமிழ்நாடு அரசு.!!!(Aavin Milk Notification 2020 Huge Vacancy)
ஊரடங்கு உத்தரவு படிப்படியாக குறைக்கப்பட்ட பின்பு தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் காலியாக இருக்கும் அரசு பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்புகளை தமிழ்நாடு அரசு தினந்தோறும் வெளியிட்டுக் கொண்டிருக்கிறது. அதன் வகையில் நாமக்கல் மாவட்டம் ஆவின் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
இந்த பணியிடங்களுக்கு 10th வகுப்பு தேர்ச்சி பெற்று ஆய்வக துறையில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது மேலும் தகுதியும் விருப்பமும் உடையவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு மூலம் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள வேலை வாய்ப்பிற்கான முழு விவரங்கள்.
நிர்வாகம் : ஆவின் பால் கூட்டுறவு உற்பத்தியாளர் சங்கம்
மேலாண்மை : தமிழ்நாடு அரசு
அதிகாரப்பூர்வ இணையதளம் : aavin.career.com
தொடக்க தேதி : 24/11/2020
இறுதி தேதி : 15/12/2020
விண்ணப்பிக்கும் முறை : இணையதளம்
பணியின் தன்மை : ஆய்வக தொழில்நுட்பவியலாளர்
வேலைக்கான இடம் : நாமக்கல் மாவட்டம்
கல்வித்தகுதி.
இந்தப் பணியிடங்களுக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று ஆய்வாக துறையில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் இதைப் பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள ஆவின் நிறுவனம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.
வயது வரம்பு.
இந்த பணியிடங்களுக்கு 30 வயது முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும் மேலும் தமிழக அரசின் விதிமுறைகளின்படி சில குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.
ஊதிய விவரங்கள்.
19,500 முதல் 62,500 வரை தமிழக அரசின் ஊதிய விவர படிகளின் படி.
தேர்வு செய்யும் முறை.
எழுத்துத் தேர்வு
நேர்காணல் முறை மற்றும் ஆவணங்கள் சரிபார்ப்பு முறையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்ப கட்டணம்.
பொதுப்பிரிவு மற்றும் OBC விண்ணப்பதாரர்களுக்கு ரூபாய் 250/-
SC/ST/SCA / விண்ணப்பதாரர்களுக்கு ரூபாய் 100/-
சிறந்த தபால் அலுவலக சேமிப்பு திட்டம் 2020.!!!
விண்ணப்பிக்கும் முறை.
இந்த பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசு பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் ஆவின் நிறுவனம் வெளியிட்டுள்ள இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் 24/11/2020 முதல் 15/11/2020 வரை விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம் மேலும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க முன்பு ஆவின் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் உள்ள விதிமுறைகளை தெரிந்து கொள்வது நல்லது. ஏனென்றால் உங்களுடைய விண்ணப்பம் நிராகரிக்கப்படாமல் இருக்க வேண்டும்.