தமிழகத்தில் ஆவின் நிறுவனத்தில் 636 காலிப்பணியிடங்கள் TNPSC மூலம் நிரப்பப்படும்(Aavin post to be filled by TNPSC 2021 New)
தமிழகத்தில் ஆவின் நிறுவனத்தில் முறைகேடாக 636 பணியிடங்கள் நிரப்பப்பட்டது என்று பால்வளத் துறை அமைச்சர் அவர்கள் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவித்துள்ளார் இந்த பணியிடங்கள் அனைத்தும் இப்போது ரத்து செய்யப்படுவதாக மேலும் இந்த பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு மூலம் இனி தேர்வுகள் நடத்தப்படும் என அறிவித்துள்ளார்.
தமிழக அரசுக்கு சொந்தமான பால் நிறுவனமான ஆவின் என்பது பால் கொள்முதல் பதப்படுத்துதல் குளிரூட்டல் மற்றும் விற்பனை செய்தல் ஆகியவை செய்து வரும் தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனம் ஆகும்.
இது ஆவின் என்னும் பெயரால் அழைக்கப்படுகிறது தமிழ்நாட்டில் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் இணையம் மூலம் இதில் பால் கொள்முதல் செய்யப்படுகிறது மலேசியா சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு ஆவின் பொருட்களை ஏற்றுமதி செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் முதல்வராக பொறுப்பேற்ற திரு மு க ஸ்டாலின் அவர்கள் தனது தேர்தல் அறிக்கையில் வெளியிட்டுள்ள அறிவிப்பு ஆவின்பால் விலை குறைப்பு லிட்டருக்கு 3 ரூபாய் குறைத்துள்ளார் இதன் மூலம் இப்பொழுது ஆவின் பால் விற்பனை முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளது.
இது குறிப்பாக நகர்ப்புறங்களில் இருக்கும் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது ஆவின் நிறுவனம் ஒரு நாளைக்கு சுமார் 2 லட்சத்து 10 ஆயிரம் லிட்டர் பாலை தமிழகம் முழுவதிலும் இருந்து கொள்முதல் செய்கிறது அதில் 1 லட்சத்து 75 ஆயிரம் லிட்டர் பாலை விற்பனை செய்து விடுகிறது
தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசர் அவர்கள் நேற்று செய்தியாளர்களை சந்திக்கும் பொழுது ஒரு அறிவிப்பினை வெளியிட்டார்.
எங்கள் YouTube சேனலைக் காண இங்கே கிளிக் செய்க
ஆவின் நிறுவனத்தில் 636 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளது அந்த பணியிடங்கள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளார் அந்த பணியிடங்களுக்கு தற்போது TNPSC தேர்வுகள் மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
5 Special Tips for Getting Beautiful Skin
ஆவின் பொருட்களை மலேசியா, சிங்கப்பூர், உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதன் மூலம் தமிழகத்திற்கு வருகை அதிகரிக்கும் இதன் மூலம் தமிழகத்தில் பால் உற்பத்தி என்பது இனி வரும் காலங்களில் அதிகரிக்கும்.
5 Simple Ways to Lose Weight without exercise
தமிழகத்தில் ஆவின் பால் விலை குறைக்கப்பட்ட பிறகு விற்பனை என்பது நகர்ப்புறங்களில் குறிப்பாக அதிகரித்துள்ளதாகவும் இனிவரும் காலங்களில் தமிழக அரசு பால் கொள்முதலை அதிகரிக்கவும் விவசாயிகளை அதற்கு ஊக்குவிக்கவும் திட்டமிட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.