Actor Vijay fined by Income Tax useful 2019
நடிகர் விஜய்க்கு 1.5 கோடி ரூபாய் அபராதம் விதித்த வருமானவரித்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் நடக்கும் வழக்கு என்ன..!
புலி படத்திற்கு பெற்ற 15 கோடி ரூபாய் சம்பளத்தை மறைத்ததாக நடிகர் விஜய்க்கு 1.5 கோடி ரூபாய் அபராதம் விதித்தது வருமானவரித்துறை.
வருமான வரித்துறை ரெய்டு நடத்திய ஆவணத்தில் புலிபடம் வருமானத்தை மறைத்ததாக தாமதமாக அபராதம் விதித்ததாக விஜய் தரப்பு உயர் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்திருக்கிறது.
உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்த நிலையில் தற்போது இடைக்கால தடையை மீண்டும் நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.
விஜய்க்கு அபராதம் விதித்த வருமானவரித்துறை
கடந்த 2016 மற்றும் 2017 ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கை நடிகர் விஜய் தாக்கல் செய்தபோது அந்த ஆண்டிற்கான வருமானமாக.
35 கோடியே 42 லட்சத்து 93 ஆயிரத்து 890 ரூபாய் பெற்றதாக குறிப்பிட்டிருந்தார்.
அந்த ஆண்டுக்கான மதிப்பீட்டு நடவடிக்கையை மேற்கொண்ட வருமான வரித்துறை.
நடிகர் விஜய் வீட்டில் கடந்த 2015ஆம் ஆண்டு நடத்திய சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களுடன் ஓட்டிட்டு பார்த்தது.
புலி படத்தின் சம்பளத்தை மறைத்துவிட்டார்
Actor Vijay fined by Income Tax useful 2019 அந்த ஆவணங்களை ஒப்பிட்டு பார்த்ததில் புலி படத்திற்கு பெற்ற 15 கோடி ரூபாய் வருமானத்தை கணக்கில் காட்டவில்லை என கண்டறியப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
இதனால் விஜய்க்கு 1.5 கோடி ரூபாய் அபராதம் விதித்து கடந்த ஜூன் 30-ஆம் தேதி வருமானவரித் துறை உத்தரவு பிறப்பித்தது.
தனக்கு அபராதம் விதிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து நடிகர் விஜய் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அபராதம் விதிப்பதாக இருந்திருந்தால் 2019 ஆம் ஆண்டிலேயே உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
காலதாமதமாக பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் கோரியிருந்தார்.
இடைக்கால தடை விதித்த நீதிமன்றம்
Actor Vijay fined by Income Tax useful 2019 இந்த மனு நீதிபதி அனிதா சும்ந்த் முன் கடந்த மாதம் 16ஆம் தேதி விசாரணைக்கு வந்தது வழக்கை விசாரித்த நீதிபதி வருமானவரித்துறை உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.
மேலும் மனுவுக்கு வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை செப்டம்பர் 16-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
விஜய் தரப்பில் வரி ஏய்ப்பு செய்து இருந்தால் அதற்கு அபராத தொகையாக உடனே தெரிவிக்காமல்.
3 ஆண்டுகள் கழித்து காலம் தாழ்த்தி பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது எனவே இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்த வழக்கிற்கு இப்பொழுது இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது, வருகின்ற அக்டோபர் 26-ஆம் தேதிக்கு இந்த வழக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.