தமிழ்நாடு அரசு தேர்வாணையம் 365 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.(Agriculture Officer extension New Job 2021)
தமிழ்நாடு அரசு பணி தேர்வாணையம் (TNPSC) Agriculture Officer extension பணியிடங்களை நிரப்புவதற்கு மிகப்பெரிய வேலை வாய்ப்பினை அறிவித்துள்ளது.
தமிழ்நாடு வேளாண்மை நீட்டிப்பு சேவைக்கு மொத்தம் 365 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இந்த பணியிடங்களுக்கு விருப்பமும் தகுதியும் உடைய விண்ணப்பதாரர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் 05 /02/2021 முதல் 04/03/2021 வரை.
கல்வித்தகுதி, வயதுவரம்பு, சம்பள விபரங்கள், விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யும் முறை, உள்ளிட்ட அனைத்து விபரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ள கட்டுரையில் காணலாம்.
நிறுவனம் | TNPSC |
பணியின் பெயர் | Agriculture Officer extension |
பணியிடங்கள் | 365 |
அதிகாரப்பூர்வ இணையதளம் | www.tnpscexams.in |
இறுதி தேதி | 04/03/2021 |
விண்ணப்பிக்கும் முறை | இணையதளம் |
TNPSC வெளியிட்ட அறிக்கை.
தமிழ்நாட்டில் 365 காலிப்பணியிடங்கள் உள்ளது இதனை நிரப்புவதற்கு இணையதளம் மூலம் தகுதியும் விருப்பமும் உடைய விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
Agriculture Officer Extension வயது வரம்பு கல்வித்தகுதி.
குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 30 வயதுக்குள் இருக்கவேண்டும் 01/07/2021 தேதியின்படி.
தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி இந்த பணியிடங்களுக்கு SCs, SC(A)s,STs,MBCs/DCs,BC(OBCM)s,BCMs,and Destitute windows ஆகிய விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் எந்த சலுகைகளும் அளிக்கப்படவில்லை.
Agriculture Officer Extension கல்வித்தகுதி.
மத்திய மாநில அரசுகளால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் வேளாண்மையில் இளங்கலை பட்டம் (BSC Agri) பெற்றிருக்க வேண்டும் மேலும் தமிழில் நன்றாக எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
Agriculture Officer Extension தேர்வு செய்யும் முறை.
விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் முறையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் மேலும் தேர்வு நடைபெறும் நாள் 18/04/2021 என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
Agriculture Officer Extension தேர்வு கட்டணம்.
இந்தப் பணியிடங்களுக்கு தேர்வு கட்டணமாக ரூபாய் 200 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
முதல் முறை பதிவு செய்யும் நபருக்கு நிரந்தர பதிவு கட்டணம் ரூபாய் 150.
நமது அரசு நடைமுறைப்படுத்தும் உயிரை காக்கும் 3 இன்சூரன்ஸ் திட்டங்கள்.
கட்டணத்தை செலுத்துவதற்கு Net banking /Credit card /Debit card உள்ளிட்ட பல வசதிகளை தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.
Agriculture Officer Extension விண்ணப்பிக்கும் முறை.
www.tnpscexams.in என்ற இணையதள முகவரி மூலம் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்