AIADMK general committee case best 2022
அவசரமாக சட்டவிரோதமாக அதிமுகவை கைப்பற்ற எடப்பாடி திட்டம் உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் பரபரப்பு பதில் மனு தாக்கல்..!
அதிமுக பொதுக்குழு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நாளை மறுநாள் 12ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ள நிலையில் ஓ பன்னீர்செல்வம் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சட்டவிரோதமாக எடப்பாடிபழனிசாமி அதிமுகவை கைப்பற்ற திட்டமிட்டுள்ளார்.
அதிமுகவை எடப்பாடி கே பழனிசாமி கைப்பற்றுவதற்கு அதிகாரம் எதுவும் இல்லை என மனுவில் கூறப்பட்டுள்ளது.
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி,ஓ பன்னீர்செல்வம் இடையே மோதல் உச்சகட்டத்தை அடைந்துள்ளது, இருவரும் உச்சநீதிமன்றத்திற்கு சென்றுள்ளார்கள்.
இதற்கு இடையே தான் பொதுக்குழுவை கூட்டி எடப்பாடி கே பழனிசாமி கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் தேர்வானார்.
மேலும் ஒருங்கிணைப்பாளர்,துணை ஒருங்கிணைப்பாளர்,பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளது.
உயர் நீதிமன்றத்தில் நடந்த வழக்குகள்
AIADMK general committee case best 2022 எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டது செல்லாது என பன்னீர்செல்வம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இதனை விசாரித்த தனி நபர் நீதிபதி இந்த பொதுக்குழு செல்லாது எனவும் உத்தரவிட்டார்.
அதன் பிறகு எடப்பாடி கே பழனிசாமி தரப்பினர் 2 நீதிபதிகள் அடங்கிய அமர்வு குழுவிற்கு வழக்கை மாற்றினார்கள் அப்பொழுது இரண்டு நீதிபதிகள் பொதுக்குழு கூடியது செல்லும் எனவும்.
15 நாட்களுக்கு முன்பு பொதுக்குழு தொடர்பாக தொலைக்காட்சியில் அறிவிக்கப்பட்டது எனவும் அவர்கள் தெரிவித்தார்கள்.
இதனால் எடப்பாடி கே பழனிசாமி அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அதன்பிறகு இதனை எதிர்த்து ஓ பன்னீர்செல்வம் அவர்கள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
இந்த வழக்கு இப்பொழுது சில மாதங்களாக உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
பல்வேறு திருப்பங்களில் வழக்கு விசாரணை
AIADMK general committee case best 2022 இந்த வழக்கு தொடர்பாக எடப்பாடி கே பழனிசாமி ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தில் இன்னும் கூடுதல் இரண்டு வழக்குகளைப் போட்டுள்ளார்.
இந்த வழக்கிற்கு பதில் மனு தாக்கல் செய்துவிட்டார் ஆனால் இந்த வழக்கை காலம் தாழ்த்த வேண்டும் என ஓ பன்னீர்செல்வம் அவர்கள் பதில் மனு தாக்கல் செய்ய ஒரு வாரம் கூடுதல் அவகாசம் கேட்டார்.
AIADMK general committee case best 2022 கடந்த 6ஆம் தேதி இந்த வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் வந்தபோது ஓ பன்னீர்செல்வம் தரப்பில் வழக்கறிஞர் ஆஜராகாமல் இருந்ததால் இந்த வழக்கு இப்பொழுது 12ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
இன்று இந்த வழக்கு தொடர்பாக ஓ பன்னீர்செல்வம் அவர்கள் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.