AIADMK general committee case news useful 2022
இனி வாய்ப்புகள் இல்லை நொறுங்கிய கனவுகள் ஓபிஎஸ் அஸ்திரம் அதைப்பற்றி பேச மாட்டோம் நீதிபதிகள் சொன்ன முக்கிய கருத்து.
அதிமுக பொதுக்குழு மேல்முறையீட்டு வழக்கு தீர்ப்பில் இன்று இரட்டை நீதிபதிகள் முக்கியமான சில விஷயங்களை குறிப்பிட்டுள்ளார்கள்.
கடந்த ஜூலை 11ஆம் தேதி அதிமுக வின் பொதுக்குழு நடைபெற்றது அந்த பொதுக்குழுவில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி கே பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது.
அதிமுகவின் சட்ட விதிகளை பின்பற்ற வில்லை என்று பன்னீர்செல்வம் அவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் தனி நபர் நீதிபதி அளித்த தீர்ப்பு பல்வேறு சர்ச்சைகளும் கேள்விகளும் ஏற்படுத்தியதாக தமிழகத்தில் இருந்தது.
ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தரப்பு கேட்டுக்கொண்ட விவரங்களின் அடிப்படையில் தீர்ப்புகள் இல்லாமல் கட்சி நலனை கொண்டு தீர்ப்பு வழங்கப்படுகிறது என்றும் அவர் அறிவித்தார்.
அந்தத் தீர்ப்பில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணைப்பாளர் இரண்டு நபர்களும் இணைந்து செயல்பட்டால் கட்சி நலனை பாதுகாக்க முடியும்.
இணைந்து செயல்படுங்கள் என்றும் அறிவித்திருந்தார் இதை சற்றும் ஏற்றுக் கொள்ளாத எடப்பாடிபழனிசாமி உடனடியாக இரண்டு அமர்வுக்கு மேல்முறையீடு செய்தார்.
ஓ பன்னீர் செல்வத்திற்கு வந்த சாதகமான தீர்ப்பு
இந்த வழக்கில் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் வைத்த முக்கியமான வாதத்தில் ஜூலை 11-ஆம் தேதி நடந்த பொதுக் குழுவிற்கு முறையாக தனக்கு நோட்டீஸ் அனுப்பப்பட வில்லை.
அதனால் அந்த பொதுக்குழு சட்டப்பூர்வமானது இல்லை என்று கூறியதை ஏற்றுக் கொண்ட தனி நீதிபதி முந்தைய வழக்கில் பொதுக்குழு கூடியது செல்லாது என்றும் முற்றிலும் ரத்து செய்தார்.
ஓ பன்னீர்செல்வம் பயன்படுத்திய இந்த வாதம் பன்னீர்செல்வத்துக்கு இதற்கு முன் வந்த தீர்ப்பில் சாதகமாக அமைந்தது.
இதை துரைசாமி மற்றும் சுந்தர் ஆகியோரின் இரட்டை நீதிபதி அமர்வு ஏற்றுக்கொள்ளவில்லை.
ஜூலை 11 இல் நடந்தது என்ன
AIADMK general committee case news useful 2022 இந்த வாதத்தை ஏற்றுக் கொள்ளாமல் 2 நீதிபதிகளும் இன்று வழங்கிய தீர்ப்பில் அந்த பொதுக்குழு ஜூலை 11 நடக்குமென ஜூன் 13-இல் பொது குழுவிற்கு அறிவித்த நோட்டீஸ் தான் முறையான நோட்டீஸ் ஆகவேண்டும்.
பொதுக்குழு உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்று நடத்தப்படும் சிறப்பு கூட்டங்களுக்கு இன்னொரு நோட்டீஸ் அனுப்ப வேண்டியது அவசியமில்லை.
பன்னீர்செல்வம் இருந்தபோதுதான் ஜூலை11 பொதுக்குழு நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டதை தனக்கு தெரியாது என கூற முடியாது என 2 நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளார்கள்.