AIADMK office key case useful tips 2022
வெற்றி மேல் வெற்றி வந்து என்னை சேரும் எடப்பாடிக்கு வெற்றி மேல் வெற்றி குவிந்து கொண்டிருக்கிறது.
இதனால் அதிமுக கட்சிக்குள் அடுத்த கட்ட நிகழ்வு என்ன என்பதை ஒரு அளவுக்கு கற்பனை செய்யமுடியும்.
அதிமுக அலுவலக சாவி வழக்கில் ஓபிஎஸ் பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
மேலும் சாவியை எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு வழங்கியது தவறு என்று சொல்ல முடியாது என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளார்கள்.
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளது.
எடப்பாடி பழனிசாமி, ஓ பன்னீர்செல்வம் மற்றும் அவரது மகன்கள் அவருடைய ஆதரவாளர்களை கட்சியை விட்டு முழுமையாக நீக்கி விட்டார்.
தனியாக பொதுக்குழுவை நடத்தி அதிரடிகளை மேற்கொண்டு இடைக்கால பொதுச்செயலாளராக மாறிவிட்டார்.
இதனையடுத்து ஓ பன்னீர்செல்வம் அவர்கள் தற்போது நீதிமன்றத்தை நாடி பல்வேறு வழக்குகளை நடத்தி வருகிறார் இருந்தாலும் ஒரு பயனும் கிடைக்கவில்லை.
11ம் தேதி நடந்தது என்ன..?
மிகப்பெரிய கலவரமாக வெடித்தது பல நபர்களுக்கு மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது கடுமையான அடி விழுந்தது.
அதிமுக அலுவலகம் கலவரமாக மாறியது அங்கிருந்த பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டது.
இதையெல்லாம் கண்ணெதிரே பார்த்த ரத்தத்தின் ரத்தங்கள் ரத்தக் கண்ணீர் வடித்தனர்.
இதையடுத்து அதிமுக அலுவலகம் பூட்டி சீல் வைக்கப்பட்டது அதனால் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓபிஎஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது
AIADMK office key case useful tips 2022 இந்த மனுக்கள் மீதான விசாரணை ஜூலை 20ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றது.
நீதிபதி சதீஷ்குமார் விசாரணை நடத்தி அளித்த தீர்ப்பில் அதிமுக அலுவலக சாவியை எடப்பாடிபழனிசாமி இடம் ஒப்படைக்க உத்தரவிட்டார்.
அதன்படி ஒப்படைக்கப்பட்டது இப்போது எடப்பாடி கே பழனிசாமி கட்டுப்பாட்டில் அந்த அலுவலகம் இருக்கிறது.
அதை அவர்கள் பயன்படுத்துகிறார்கள் இந்த தீர்ப்பை எதிர்த்து பன்னீர்செல்வம் சுப்ரீம் கோர்ட்டுக்கு ஓடினார்.
அப்பிலும் செய்தார் கடந்த மாதம் 4ம் தேதி இது தொடர்பான மனுவை ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர்கள் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தார்கள்.
சாவி யாரிடம் கொடுக்க வேண்டும்
AIADMK office key case useful tips 2022 இது தொடர்பான வழக்கு விசாரணை கடந்த மாதம் 18ஆம் தேதி நடைபெற்றது அப்போது ஓ பன்னீர்செல்வம் தரப்பில் எடப்பாடி பழனிசாமி இடம் அதிமுக அலுவலகம் சாவியை ஒப்படைத்து தவறு என்று வாதிடப்பட்டது.
சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு தடை விதிக்கவும் ஓ பன்னீர்செல்வம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதனை விசாரித்த சுப்ரீம் கோர்ட் சாவி விவகாரத்தில் எந்த தடையும் விதிக்க மறுத்துவிட்டது, இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி மற்றும் வருவாய் துறையினர் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
எடப்பாடி பழனிசாமி எடுத்துவைத்த வாதங்கள்
AIADMK office key case useful tips 2022 இந்த வழக்கில் எடப்பாடி கே பழனிசாமி சுப்ரீம் கோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்தார்.
கட்சியின் முக்கிய கோப்புகள் பண விவரங்களில் பன்னீர்செல்வம் கையாடல் செய்துள்ளதால் அவரிடம் அதிமுக அலுவலகம் சாவியை ஒப்படைக்க முடியாது.
அது மட்டுமில்லாமல் அவர் அலுவலகத்தில் கலவரத்தை ஏற்படுத்தினார் இதனால் பல நபர்கள் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளார்கள்.
கட்சியின் முக்கிய கோப்புகளை அவர் திருடி சென்று விட்டார் அவர் இப்பொழுது அதிமுக கட்சியின் அடிப்படை உறுப்பினர் கிடையாது இதனால் அவரிடம் சாவி ஒப்படைக்க முடியாது என்றும் வாதிட்டார்.