தலைமுடிப் பிரச்சினை இன்று இருக்கும் இளைஞர்களுக்கு முதன்மை பிரச்சினையாக உள்ளது(almond oil hair growth top 3 tips using)
முடி உதிர்வு நரை முடி தோன்றுவது உடைவது போன்ற பிரச்சனைகளால் இன்று இருக்கும் தலைமுறைகள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். இதில் ஆண்களும் சரி பெண்களும் சரி
தலை முடியை எப்படி பராமரித்தாலும் காலநிலை மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு அடைவதால் மனிதர்களின் ஆரோக்கியமும் பாதிக்கப்படுகிறது. முடி உதிர்வு நாளுக்குநாள் அதிகமாகிறது சில இளைஞர்களுக்கு.
இதற்கு காரணம் சரியான ஊட்டச்சத்து இன்மையும் முறையான கூந்தல் பராமரிப்பின்மை ஆகும். பல்வேறு இயற்கை மூலப் பொருட்களைக் கொண்டு இதற்கான தீர்வுகளை காணலாம்.இந்த கட்டுரையில் பாதாம் எண்ணெயில் தலைமுடிக்கு பயனளிக்கும் பல நன்மைகளைப் பற்றி விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது
பாதாம் எண்ணெயின் நன்மைகள்
பாதாம் கொட்டைகளை நன்கு பதமான முறையில் அரைத்து அதிலிருந்து எண்ணெய்கள் எடுக்கப்படுகிறது. இந்த எண்ணெய் அதிக பலன்களை முடி உதிர்வுக்கு தருகிறது தலைமுடி பிரச்சனைகளை எதிர்கொள்ளும் நபர்களுக்கு பெரும்பாலும் உதவியாக இருக்கிறது பாதாம் எண்ணெய்.
இந்த எண்ணெய் தலைமுடி நன்கு வளர்வதற்கு வேர்களுக்கு சரியான ஊட்டச்சத்தை வழங்குகிறது. நீங்கள் தொடர்ந்து பயன்படுத்தும்போது உங்கள் கூந்தலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களையும் விட்டமின் ஈ சத்துக்களை கொடுக்கிறது.
அதேசமயத்தில் இந்த எண்ணெயில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் கூந்தல் மென்மையாகவும் பளபளப்பாகவும் இருப்பதற்கு உதவுகிறது
பாதாம் எண்ணெயின் முடி வளர்ச்சி
நீங்கள் வாரத்திற்கு ஒருமுறையாவது உங்களுடைய தலை முடியை மசாஜ் செய்ய வேண்டும் அதுபோல் மசாஜ் செய்யும் பொழுது அது உங்கள் உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது.
இதனால் உங்கள் தலைமுடி வலுவடைய உறுதி செய்கிறது ஆனால் இதற்கு நீங்கள் சரியான இயற்கையான இருக்கும் எண்ணெய்களை பயன்படுத்த வேண்டும். இதில் உங்களுடைய தேர்வு பாதம் எண்ணெய்யாக இருந்தால் உங்கள் தலைமுடி வளர்ச்சி சிறப்பாக அமையும்
பாதாம் எண்ணெயில் வைட்டமின் ஈ நிறைந்திருப்பதால் முடி உதிர்வை தடுக்கிறது அதுமட்டுமில்லாமல் ஒரு நல்ல ஆக்சிஜனேற்றியாக வைட்டமின் ஈ இருப்பதால் பாதிப்படைந்த தலைமுடியை சீர்செய்கிறது.
பாதாம் எண்ணெயில் உள்ள பயோடின் என்னும் ஊட்டச்சத்து உங்கள் தலைமுடியின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு பெரும் உதவி புரிகிறது. நீங்கள் வழக்கம்போல் உபயோகிக்கும் ஆலிவ் எண்ணெய் தேங்காய் எண்ணெய் மற்றும் ஆமணக்கு எண்ணெய் போன்ற எண்ணெய்களுடான் கலந்து இந்த பாதாம் எண்ணெய் நீங்கள் பயன்படுத்தலாம்.
இதை நீங்கள் அடிக்கடி உங்கள் உச்சந்தலையில் தடவி ஹைட்ரேட் செய்ய வேண்டும்
MOST READ இந்தப் பிரச்சினைகள் இருந்தால் திருமணமானவர்களுக்கு
பாதாம் எண்ணெயை இதனுடன் பயன்படுத்துங்கள்
இயற்கையிலே வெந்த விதைகள் மற்றும் கறிவேப்பிலை தலை முடிக்கு சிறந்த மருந்துகளாக இருக்கிறது இது நாம் பழங்காலத்திலிருந்து அறிந்த ஒரு மருத்துவக் குறிப்பு.
அந்த வகையில் வெந்தய விதைகளை நன்றாக ஊறவைத்து கொள்ளவும் பின்பு கருவேப்பிலை மற்றும் வாழைப்பழத்தை இந்த ஊறவைத்த வெந்தயம் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
எங்கள் YouTube சேனலைக் காண இங்கே கிளிக் செய்க
நீங்கள் இந்தக் கலவையில் ஒரு டீஸ்பூன் பாதாம் எண்ணெய்யை சேர்த்துக் கொள்ளவும் இந்த கலவையை உங்கள் தலை முடியில் தடவி சிறிது நேரம் ஆவி பிடித்துக் கொள்ளுங்கள் அதன் பிறகு உங்களுக்கு பிடித்தமான ஷாம்புகளை கொண்டு உங்கள் உச்சந்தலையை அலசிக் கொள்ளவும.
5 Special Tips for Getting Beautiful Skin
இதுபோல் வாரத்திற்கு 2 முறை அல்லது 3 முறை செய்து வந்தால் சிறிது நாட்களில் உங்களுடைய தலை முடி நன்கு ஆரோக்கியமாக வளர்வதை உங்களால் காண முடியும்