Aluminium foil container new business 2022
அலுமினியம் ஃபாயில் கண்டைனர் தயாரிப்பு தொழில்..!
நீங்கள் புதிதாக தொழில் தொடங்க வேண்டும் என்ற சிந்தனையில் இருப்பவரா, என்ன தொழில் செய்யலாம் என்று தேடிக்கொண்டு இருப்பவரா, உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
தமிழகத்தில் பெரிய அளவில் போட்டிகள் இல்லை உள்ளூர் மார்க்கெட்டை குறிவைத்து தொழில் தொடங்கினால் அதிகமான வருமானம் பெற முடியும்.
சில பெரிய ஹோட்டல்களில் பார்சல் செய்துதரும் உணவுப் பொருட்கள் வீட்டுக்குப் போகிறவரை சூடாக இருக்கிற மாதிரி அலுமினியம் பாக்ஸில் போட்டு கொடுப்பார்கள்.
இந்த அலுமினியம் ஃபாயில் கண்டைனர் தயாரிப்பு தொழிலை பற்றி இப்பொழுது தெரிந்து கொள்ளுங்கள்.
எவ்வளவு முதலீடு தேவைப்படும்
நாள் ஒன்றுக்கு 80 முதல் 100 கிலோ வரை உற்பத்தி செய்ய முடியும், இதற்கு குறைந்தபட்சம் 100 கிலோ மூலப் பொருட்கள் தேவைப்படும், உற்பத்தி செய்யும் போது அதிகபட்சம் 20% மூலப்பொருட்கள் கழிவுகளாக போய்விடும்.
ஒரு கிலோ மூலப்பொருள் விலை 200 ரூபாய் முதல் கிடைக்கிறது, கழிவு போக கிலோவுக்கு 225 நடுத்தர சைஸ் பாக்ஸ்கள் உற்பத்தி செய்ய முடியும்.
இந்த பாக்ஸ்களை 1,500 எண்ணிக்கையில் அட்டைப் பெட்டிகளில் அடைத்து விற்பனை செய்யலாம்.
ஒரு மாதத்திற்கு அதிகபட்சமாக 25 வேலை நாட்கள் என்றாலும், மூலப்பொருட்கள் செலவு 100X200X25=5,00,000/- ரூபாயாக இருக்கும் தோராயமாக.
மூலப் பொருட்கள் கிடைக்கும் இடங்கள்
இதற்கான மூலப் பொருட்களான அலுமினியம் ரோல் ஜிண்டால் அலுமினியம் (Jindal aluminum) குஜராத் மற்றும் டால்கோ (Talco) போன்ற நிறுவனங்களில் இருந்து வாங்கலாம், அருகில் உள்ள விற்பனை மையங்களில் வாங்கிக்கொள்ள முடியும்.
ஒரு மாதத்திற்கு குறைந்தபட்சம் 3 டன் தேவை என்கிறபோது இரண்டு மாதத்திற்கு ஒருமுறை என மொத்தமாக ஆர்டர் கொடுத்து வாங்கிக் கொள்ளலாம்.
போக்குவரத்து செலவு இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை தோராயமாக 30 ஆயிரம் ரூபாய் வரை செலவாகும்.
250மி பெட்டிக்கு 40 மைக்ரான் அளவு ரோலும், 450மி பெட்டிக்கு 42 மைக்ரான் 750மி பெட்டிக்கு 45 மைக்ரான் அளவில் மூலப்பொருட்கள் வாங்கவேண்டும்.
உங்களுக்கு தேவையான வடிவத்தில் டை-யை ஆர்டர் கொடுத்து உற்பத்தி செய்யலாம், இதனை இயந்திரத்தில் பொருத்தி செலுத்தினால் அலுமினியம் பாக்ஸ்கள் தனி தனியாக வந்துவிடும் இவற்றை பாலித்தீன் கவர்களில் அடைத்து பேக்கிங் செய்யலாம்.
விற்பனை மற்றும் வரவு செலவுகள்
ஒரு பாக்ஸ் 2ரூபாய் வரை விற்பனை செய்ய முடியும், 100 கிலோ மூலப்பொருட்களுக்கு தோராயமாக 19,000 பாக்ஸ்கள் வரை ஒரு நாளில் உற்பத்தி செய்ய முடியும்.
இதன் அடிப்படையில் மாதத்திற்கு 25 வேலை நாட்கள் என்று கணக்கிட்டாலும் ஒரு மாதத்தின் விற்பனை வரவு (19000X2X25)=950,000/- யாக இருக்கும்.
இதன் கழிவு மூலப்பொருட்களை ஒரு கிலோ 70 ரூபாய் வரை மறுபடியும் விற்பனை செய்ய முடியும் அந்த வகையில் மாத வருமானம் தோராயமாக 40,000 ரூபாய் இருக்கும்.
தயாரிப்பு தொழில் செலவுகள்
அலுமினியம் பெட்டிகளை பாலிதீன் கவரில் அடைத்து அல்லது அட்டைப்பெட்டியில் பேக் செய்து விற்பனை செய்யலாம், அதன்படி பாலிதீன் கவர் அல்லது அட்டைப்பெட்டி நீங்கள் ஆர்டர் கொடுத்து வாங்கிக்கொள்ளலாம்.
உப்பை இப்படி சாப்பிடுவது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை கடுமையாக பாதிக்கும்..!
சந்தை வாய்ப்புகள் எங்கு
போட்டியில்லாத தயாரிப்பு தொழில் என்பதால் அது மட்டுமில்லாமல் தமிழ்நாடு அரசு இப்பொழுது அனைத்து வகையான பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்ய உள்ளது.
why investment in insurance plan ideas 2022
இதனால் பெரிய ஹோட்டல்கள், ரெஸ்டாரன்ட்கள், சிற்றுண்டிகள், போன்ற இடங்களில் அதிகமாக விற்பனை செய்யலாம்.
அதேபோல் திருவிழா காலங்களில் இவற்றில் தேவை என்பது அதிகமாக இருக்கும்.
இதற்கான இயந்திரங்கள் IndiaMART,Alibaba போன்ற இணையதளங்களில் விற்பனை செய்யப்படுகிறது.
அங்கு உங்களுக்கு தேவையான ரூபாய் மற்றும் இயந்திர திறனுக்கு ஏற்ப நீங்கள் வாங்கிக் கொள்ளலாம்.