Amazing 4 hair care tips in tamil
முன் நெற்றியில் முடி வளர சில இயற்கை வழிகள்..!
ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்கும் தலை முடி நீளமாகவும் அடர்த்தியாகவும் இருந்தால் மட்டுமே அழகான தோற்றம் கிடைக்கும்.
இன்றைய கால கட்டத்தில் தலைமுடி சார்ந்த பல்வேறு பிரச்சினைகள் இருக்கிறது.
பெண்களுக்கு முன் நெற்றி பகுதியில் முடி ஏறிக்கொண்டே போகும் இதன் காரணமாக அவர்களுடைய முக அழகு மாறுபடும்.
ஆண்களுக்கு முன் நெற்றி அல்லது தலையில் சொட்டை விழுந்து விடும் இதனால் முக அழகு உடல் தோற்றம் முழுவதும் மாறிவிடும்.
எனவே முன் நெற்றியில் முடி வளர வீட்டில் இருக்கும் சில பொருட்களைக் கொண்டு எளிதாக வைத்தியம் பார்க்கலாம்.
வயதாக வயதாக உடலில் ஊட்டச்சத்து குறைபாடு, மன அழுத்தம், வேலை பளு, ஒரே இடத்தில் உட்கார்ந்து அதிக நேரம் வேலை செய்வது.
உடற்பயிற்சி இன்மை, தூக்கமின்மை, மாசுபாடு காரணமாக, பல்வேறு காரணங்களால் முன் நெற்றியில் தலைமுடி விழுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
முன் நெற்றியில் முடி வளர இயற்கை குறிப்புகள்
வெங்காயத்தில் அதிக அளவு சல்பர் நிறைந்துள்ளதால் வெங்காயத்தை அரைத்து சாறு எடுத்து முடி உதிர்ந்த இடத்தில் தடவி வேண்டும்.
இதுபோன்று வாரத்திற்கு குறைந்தது 3 அல்லது 4 முறை செய்து வந்தால் மீண்டும் நெற்றியில் முடி வளர தொடங்கும்.
எனவே வெங்காயத்தின் சாறை முடி உதிர்ந்த இடத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து பின்பு தலையை குளிர்ந்த நீரால் அலச வேண்டும்.
முன் நெற்றியில் முடி வளர கொத்தமல்லி பயன்பாடு
முன் நெற்றியில் முடி வளர கொத்தமல்லி பெரிதும் பயன்படுகிறது கொத்தமல்லியில் வைட்டமின் சி, இரும்புச் சத்து, புரோட்டீன் ஆகியவை நிறைந்துள்ளது.
கொத்தமல்லி முடி உதிர்வு பிரச்சினையை முழுமையாக தடுக்கிறது, முன் நெற்றியில் முடி வளர கொத்தமல்லியை அரைத்து தலையில் நன்கு தடவி.
குறைந்தது 10 நிமிடம் மசாஜ் செய்து குளிர்ந்த நீரில் தலையை அலச வேண்டும்.
இவ்வாறு வாரத்திற்கு குறைந்தது 3 முறை செய்து வந்தால் முன் நெற்றியில் முடி வளர தொடங்கிவிடும்.
முன் நெற்றியில் முடி வளர ஆலிவ் ஆயில்
Amazing 4 hair care tips in tamil முடி உதிர்வை மீண்டும் வளர செய்வதற்கு ஆலிவ் ஆயில் பெரிதும் பயன்படுத்தப்படுகிறது.
இந்த ஆலிவ் ஆயிலில் ஆன்டி-ஆக்சிடன்ட்கள் மற்றும் வைட்டமின் சி அதிக அளவில் நிறைந்துள்ளது.
இது முடி வளர்ச்சியை தூண்டுகிறது எனவே நெற்றியில் முடி வளர ஆலிவ் ஆயிலுடன் சிறிது இலவங்கப் பட்டை பொடி மற்றும் ஒரு டீஸ்பூன் தேனை ஒன்றாக கலந்து முடி உதிர்ந்த இடத்தில் இந்த கலவையை நன்கு தடவி வேண்டும்.
அதன் பின்பு 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் அலச வேண்டும்.
இந்த முறையை வாரத்திற்கு குறைந்தது 4 முறை செய்துவர முன் நெற்றியில் வேகமாக முடி வளர ஆரம்பித்துவிடும்.
முன் நெற்றியில் முடி வளர வேப்பிலை
Amazing 4 hair care tips in tamil வேப்ப இலையில் அதிக அளவில் கிருமிநாசினி நிறைந்துள்ளது அதுமட்டுமின்றி சில அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களும் உள்ளது.
இது முடி வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது எனவே சிறிது அளவு வேப்பிலை எடுத்து அவற்றை நன்கு கொதிக்க வைத்து அந்த நீரில் தலையை அலச வேண்டும்.
வேப்ப இலையை நன்கு அரைத்து சாறு எடுத்து அதனுடன் தேங்காய் எண்ணெய் கலந்து நன்கு தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து.
பிறகு குளிர்ந்த நீரில் தலையை அலசினால் முடி நன்கு வளர ஆரம்பித்துவிடும், தலையில் இருக்கும் பொடுகு, பேன், சொரிசிரங்கு, தலைமுடி சார்ந்த, அனைத்து பிரச்சினைகளும் குணமாகிவிடும்.