amazing 5 health benefits list of vettiver
amazing 5 health benefits list of vettiver
தண்ணீரில் ஏன் வெட்டிவேர் சேர்த்து குடிக்க வேண்டும் தெரியுமா? வெறும் குளிர்ச்சி மட்டும் இல்லை, அதிகமான நன்மைகள் மறைந்திருக்கிறது..!
கோடைக் காலத்தில் நம் உடலை குளிர்ச்சியாக வைக்க வேண்டிய அவசியம் தேவைப்படுகிறது.
அந்தவகையில் பார்க்கும்போது வெட்டிவேர் குளிர்ச்சியுடன் பல ஆரோக்கிய நன்மைகளையும் உடலுக்கு கொடுக்கிறது, அதை கண்டிப்பாக நீங்கள் எடுத்துக்கொள்ளலாம்.
கோடைக்காலத்தில் கொளுத்தி எடுக்கும் வெப்பநிலை சமாளிப்பது என்பது பெரிய பிரச்சினையாக இருந்துவருகிறது, இனி வரும் ஆண்டுகளிலும் வெப்பநிலை அதிகரிக்கும்.
இதனால் வீட்டை விட்டு வெளியே சென்று வந்தால் கூட உடம்பு சூட்டை தணிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.
தர்பூசணி பழம், முலாம்பழம், வரை தாகத்தை தணிக்க அதிகமாக கிடைத்தாலும் இதற்கு நிகர் எதுவும் கிடையாது.
வெட்டிவேர் இயற்கையாகவே குளிர்ச்சி தரக்கூடியது ஒன்று இந்த வெட்டி வேரைக் கொண்டு நீங்கள் தயாரிக்கும் பானம் சுவையானதாக இருப்பது மட்டுமில்லாமல்.
உடம்புக்கு குளிர்ச்சியையும் இன்னும் சில ஆரோக்கிய நன்மைகளை வாரி வழங்கும்.
வெட்டிவேர் என்றால் என்ன
இது ஒரு அற்புதமான மூலிகை என்று சொல்லலாம் இந்த வெட்டிவேரைப் பயன்படுத்தி எளிதாக பச்சைநிற சுவையான பானத்தை நீங்கள் வீட்டிலேயே தயாரிக்கலாம்.
வெட்டிவேர் சர்பத்
இந்த வெட்டிவேர் சர்பத்தை நீங்கள் எப்படி தயாரிக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள் கண்டிப்பாக இது உங்களுடைய வாழ்க்கையில் பயனுள்ளதாக இருக்கும்.
முதலில் வாங்கி வந்த வெட்டிவேரை கழுவி சுத்தம் செய்து கொள்ளுங்கள் பிறகு மூன்று நாட்கள் குடிநீரில் அதை ஊற வையுங்கள்.
பிறகு அந்த தண்ணீரை வடிகட்டிக் கொள்ளுங்கள் இந்த வெட்டிவேரைப் பயன்படுத்தி 3 முறை பானம் தயாரிக்க முடியும்.
பிறகு இந்த வெட்டிவேரை பாட்டிலிருந்து எடுத்து சிறிது நேரம் சூரிய ஒளியில் காய வைத்து மீண்டும் பயன்படுத்தலாம்.
வெட்டிவேர் பானத்தின் பயன்கள் என்ன
இது உடல் தாகத்தை தணிப்பது மட்டுமில்லாமல் உடலை நீரோட்டமாக வைக்க உதவுகிறது இதனால் பல்வேறு நன்மைகள் கிடைக்கும்.
வெட்டிவேரில் 300க்கும் மேற்பட்ட என்சைம்களின் செயல்பாட்டிற்கு காரணமாக துத்தநாகம் ஊட்டச்சத்து காணப்படுகிறது.
துத்தநாகம் மனித உடலுக்கு இயற்கையான பாதுகாப்பு அமைப்பை வழங்குகிறது, செல் பிரிவு, செல் வளர்ச்சி, மற்றும் காயங்களை குணப்படுத்துவதற்கு இது உதவுகிறது.
நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துகிறது
amazing 5 health benefits list of vettiver வெட்டிவேர் ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்துள்ளது, இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
எனவே இந்த கொரோனா வைரஸ் காலத்தில் இது உங்களுக்கு நல்ல பாதுகாப்பை வழங்கும்,உடல் உறுப்புகளையும் திசுக்களையும் எந்த சேதத்தில் இருந்தும் பாதுகாக்கும்.
இரத்த அழுத்தத்தை நிர்வகிக்கிறது
amazing 5 health benefits list of vettiver இரும்பு, மக்னீசியம், வைட்டமின் பி6, போன்ற பல தாதுக்கள் வெட்டிவேரில் நிறைந்துள்ளன, அனைத்தும் ஊட்டச்சத்துக்களும் ரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதிலும் உடலில் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் தினமும் குடிக்கும் தண்ணீரில் குறிப்பாக வெதுவெதுப்பான நீரில் வெட்டிவேர் ஒரு சிறிதளவு போட்டு குடித்து வந்தால் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தலாம்.