Amazing 5 health benefits rohu fish in tamil
ஆரோக்கியம் நிறைந்த ரோகு மீன் சாப்பிடுவதால் என்ன நன்மைகள் கிடைக்கும்..!
மீன்களில் அதிகமான வகைகள் உள்ளன ஒவ்வொன்றும் ஒவ்வொரு மருத்துவ குணங்களை கொண்டிருக்கும்.
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அசைவ உணவு வகைகளில் மீனை அதிக விரும்பி சாப்பிடுபவர்கள்,மீன்களில் நிறைய ஊட்டச்சத்துக்கள் அதிக அளவில் நிறைந்துள்ளன.
மற்ற இறைச்சி வகைகளை காட்டிலும் மீன்களில் அதிக அளவு இயற்கையாக பல்வேறு வகையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன, அதிலும் குறிப்பாக ஒமேகா-3 ஊட்டச்சத்து மீன்களில் அதிகமாக நிறைந்துள்ளது.
கடல் மீன்கள், நன்னீர் மீன்கள், ஆற்று மீன்கள், குளம் ஏரி, பண்ணை மீன்கள், என பல்வேறு வகைகளில் மீன்கள் நமக்கு கிடைக்கிறது.
இந்த ரோகு மீனில் ஏராளமான புரதச்சத்து, ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின் ஏ, வைட்டமின் பி மற்றும் வைட்டமின் சி அதிக அளவில் நிறைந்துள்ளது.
மேலும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களான அயோடின், செலினியம், துத்தநாகம், கால்சியம், போன்ற சத்துக்களும் நிறைந்துள்ளன.
குறிப்பாக இந்த மீனில் மெர்குரி அளவு குறைவாக உள்ளதால் கர்ப்பிணிப் பெண்கள் அதிக அளவில் எடுத்துக்கொள்ளலாம்.
இந்த ரோகு மீன் சாப்பிடுவதால் உங்கள் இதயத்திற்கு மிகவும் நல்லது குறிப்பாக இதயம் சம்பந்தமான பிரச்சினைகள் ஏதும் வராமல் தடுக்கும்.
இது ஒருஆற்று மீன் என்பதால் கொழுப்பு குறைவாகவும் ஒமேகா-3 சத்து அதிகமாகவும் நிறைந்திருக்கும்.
இந்த ரோகு மீன் இதயம் சம்பந்தமான பிரச்சினைகளை குணப்படுத்துவது மட்டுமில்லாமல் நமது ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவையும் குறைக்கிறது.
கடல் உணவில் உள்ள DHA/ECA ஒமேகா-3 போன்ற ஊட்டச்சத்துகள் உங்கள் உடலில் கெட்ட கொழுப்பின் அளவை வெளியேற்றும்.
இந்த ரோகு மீனை வாரத்தில் ஒருமுறை உணவில் சேர்த்துக் கொள்வதால் உங்களுடைய கண்பார்வை மேம்படும்.
health benefits rohu fish உங்கள் உடலில் தைராய்டு சுரப்பிக்கு அயோடின் சத்து மிகவும் முக்கியமானது, எனவே அயோடின் நிறைந்த இந்த ரோகு மீனை இனி நீங்கள் வாரத்தில் ஒருமுறை சாப்பிடுவதினால் உடலில் தைராய்டு சுரப்பி சீராக சுரக்க உதவும்.
மேலும் இவற்றில் நிறைந்திருக்கும் செலினியம் ஊட்டச்சத்து உடலில் புற்றுநோய் செல்கள் உருவாகாமல் தடுக்கிறது.
இந்த ரோகு மீன் விலை கிலோ ரூபாய் 260/- முதல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இது ஆற்று மீன் என்பதால் இதனுடைய சுவை தனி ரகமாக இருக்கும்.