Amazing 5 information about Piranha fish
தம்மை விட பல மடங்கு பெரிய விலங்குகளை கூட ஒரு சில மணி நிமிடங்களில் கடித்து குதறி எலும்புக்கூடுகளை மட்டும் விட்டு செல்கின்ற பிராா மீன்களின் பற்கள் மிகக் கூர்மையானவை தாடைகள் மிகவும் வலிமை மிக்கதாக இருக்கிறது.
அனைத்து பிரானா மீன் இனங்களும் இறைச்சியை உணவாக எடுத்துக் கொள்வதில்லை, சில பிரானா மீன் இனங்கள் தாவரங்களையும் உணவாக எடுத்துக் கொள்கிறது.
Amazing 5 information about Piranha fish இந்த மீன்கள் பற்றிய திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது, குறிப்பாக ஹாலிவுட்டில் இந்த மீன்களை வைத்து பல்வேறு திரைப்படங்கள் வெளிவந்துள்ளன.
அந்த அளவிற்கு இந்த மீன்களின் தாக்குதல் என்பது மிகக் கொடூரமாக இருக்கும், சிறிய விலங்குகளை ஒரு சில நிமிடங்களில் தின்று தீர்த்து விடும்.
இந்த மீன் இனங்கள் ரத்தத்தின் சுவை உணரும் திறன் கொண்டது, ஒரு மீன் ஒரு இறையை பார்த்து விட்டால் அனைத்தும் மீன்களுக்கும் சமிக்கை கொடுத்து உடனடியாக ஒரு கூட்டமாக சேர்ந்து, அந்த உயிரினத்தை சில நிமிடங்களில் தின்று விடும்.
பிரானா மீன் இனங்கள் வாழும் இடம்
Amazing 5 information about Piranha fish இந்த பிரானா மீன்கள் தென் அமெரிக்காவிலுள்ள ஆறுகளிலும் ஏரிகளிலும் வாழ்வதாகக் கூறப்படுகிறது, அர்ஜென்டினாவின் வடபகுதி முதல் கொலம்பியா வரையில் காணப்படுகிறது, இவ்வகை மீன்களின் வித்தியாசமான 20 இனங்கள் அமேசான் நதியில் வாழ்கின்றன.
குறிப்பாக வயிற்றுப் பகுதியில் செந்நிற இனங்கள் மிக கொடூரமான தாக்குதலுக்கு பெயர் பெற்றதாகும், இந்த மீன்கள் மற்ற மீன் இனங்களை விட மிகவும் வலிமையான தடைகளையும், மிகக் கூர்மையான பற்களையும் கொண்டுள்ளன.
பிரானா மீனின் வடிவம்
Amazing 5 information about Piranha fish பிரானா மீன் இனங்களை சேர்ந்த பெரும்பாலான மீன்கள் நீளத்தில் 60 சென்டி மீட்டருக்கு மேல் வளர்வதில்லை, சில இனங்களில் வயிற்றுப்பகுதி செம்மஞ்சள் நிறமாகவும், ஏனைய பகுதிகள் வெள்ளை நிறமாகவும் இருக்கும்.
வேறு சில முற்றாகக்கறுப்பு நிறமானவை பிராண மீன்களின் தலை பெரிதாகவும் இருக்கும், உடல் ஆழமானதாக இருப்பதோடு வயிறு சிறியதாக காணப்படும்.
இவற்றின் வலிமையான தாடைகளில் முக்கோண வடிவ கூரிய பற்கள் இருக்கின்றன,இரு தாடைகளும் ஒன்று சேரும்போது கத்திரிக்கோலை போல நறுக்கக்கூடியானதாக இருக்கிறது இதனுடைய பற்கள்.
பொதுவாக இந்த மீன் இனங்கள் ஒரு குழுவாக பயணம் செய்கிறது இதனால் சிறிய பூச்சிகள், விலங்குகள், மீன்கள், பறவைகள், கடல் வாழ் உயிரினங்களை வெகுவிரைவில் தாக்குகிறது.
இந்த மீன் இனங்கள் மனிதர்களையும் தாக்கி உள்ளது என பிரேசில் போன்ற நாடுகளில் சில தகவல்கள் வெளிவருகிறது, ஆனால் இதைப்பற்றி இன்னும் உறுதியான தகவல்கள் இல்லை.