Amazing 5 main symptoms of failure liver
உங்கள் கல்லீரல் நலமாக இருக்கிறதா?இந்த அறிகுறிகளை கொண்டு தெரிந்து கொள்ளலாம்..!
கல்லீரல் உடலில் மிக முக்கியமான உறுப்பாகும், கல்லீரல் சரியாக வேலை செய்வதை நிறுத்தினால், உங்களுக்கு மிகப்பெரிய பிரச்சினைகள் ஏற்பட தொடங்கிவிடும்..!
உணவை சரியாக செரிக்க வைப்பதில் இருந்து உடலை சீராக வைத்திருப்பது வரை கல்லீரல் பல்வேறு வகையான வேலைகளை உடலில் செய்கிறது.
கல்லீரலில் ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் அதன் விளைவு உடலில் தெரிய ஆரம்பித்துவிடும்.
இருப்பினும் கல்லீரல் பிரச்சினை ஏற்படுவதற்கான அறிகுறிகள் முன்னரே கண்டறியலாம், ஆனால் சில நபர்கள் அறிகுறிகளை புரிந்துக் கொள்ளாமல் புறக்கணிக்க தொடங்குகிறார்கள்.
அப்படி செய்வது மிகவும் தவறு இதில் அதிக கவனம் செலுத்த வேண்டும் அப்படி செய்தால் தான் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை போன்ற பெரிய பிரச்சனைகளை நீங்கள் தவிர்க்கலாம்.
கல்லீரல் சரியாக வேலை செய்யவில்லை என்பதை காட்டும் சில அறிகுறிகள் என்னவென்று பார்ப்போம்.
ரத்தப்போக்கு
உங்களுக்கு இரத்தப்போக்கு இருந்தால் நீங்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.
ஏதேனும் விதத்தில் நீங்கள் காயமடைந்து அந்த காயங்கள் குணமடைய அதிக நேரம் எடுத்தால் நீங்கள் மருத்துவரை உடனடியாக தொடர்பு கொள்ள வேண்டும்.
பசியின்மை
உங்களுக்கு பசி குறைவாக இருந்தால் இதைப்பற்றி நீங்கள் சற்று சிந்திக்க வேண்டும், ஏனெனில் கல்லீரல் ஒரு வகையான பித்த அமிலத்தை உருவாக்குகிறது.
இது உணவை செரிக்க உதவுகிறது கல்லீரல் சரியாக வேலை செய்யாதபோது அதன் முழு செயல்படும் மோசமடையும் இதன் காரணமாக பசியின்மை ஏற்படும்.
தோல் அரிப்பு
கல்லீரல் பாதிப்பால் ஏற்படும்பிரச்சனை காரணமாக சருமத்திற்கு அடியில் பித்த உப்பு அதிகமாக சேர தொடங்கிவிடும்.
இதன் காரணமாக தோலில் ஒரு அடுக்கு குவிந்து அரிப்பு ஏற்படுகிறது, அதாவது தோல் தொடர்பான பிரச்சனைகளும் கல்லீரல் உடன் தொடர்புடையவை.
மஞ்சள் காமாலை மிகப்பெரிய அறிகுறி
Amazing 5 main symptoms of failure liver மஞ்சள் காமாலை பிரச்சனை கல்லீரல் சரியாக வேலை செய்யவில்லை என்பதை காட்டும் சரியான அறிகுறியாகும், ஏனெனில் மஞ்சள் காமாலையில் தோலின்நிறம் மற்றும் கண்களின் வெள்ளைப் பகுதி மஞ்சள் நிறமாக மாறிவிடும்.
சிறுநீர் அடர் மஞ்சள் நிறமாக இருக்கும், கல்லீரல் இரத்த சிவப்பணுக்களை ஒழுங்காக நிர்வகிக்க முடியாத போது மஞ்சள் காமாலை ஏற்படுகிறது.
செறிவு இல்லாமை
Amazing 5 main symptoms of failure liver செறிவு இல்லாமை இருப்பது உண்மையில் கல்லீரலால் ரத்தத்தில் உள்ள நச்சுக்களை வடிகட்ட முடியாவிட்டால், அது உடலின் மற்ற செயல்பாடுகளை பாதிப்படைய தொடங்குகிறது, ஆகவே இதுவும் ஒரு முக்கிய அறிகுறியாக கருதப்படுகிறது.