Amazing 7 health benefits of mango leaves
Amazing 7 health benefits of mango leaves
மா இலையின் அற்புத நன்மைகளை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்..!
முக்கனிகளில் முதல் கனி என்று அழைக்கப்படும் மா மரம் இலை முதல் வேர் வரை அனைத்தும் பயன்படுத்தப்படுகிறது.
மாம்பழம் என்றால் அனைவரும் தேர்ந்தெடுக்கக் கூடிய முதல் தேர்வாக எப்பொழுதும் இருக்கிறது.
மாமரத்தின் வேர், இலை, விரகு, பூ, மாம்பழம், மாம்பழ கொட்டை, என அனைத்தும் அதிக அளவில் மருத்துவம் மற்றும் உணவு சார்ந்த துறைகளில் பயன்படுத்தப்படுகிறது.
கோடைகாலத்தில் மாம்பழம் சீசன் தொடங்கிவிடும் இந்த சுவை மிகுந்த மாம்பழம் சுவை மட்டுமில்லாமல் பல்வேறு வகையான உடலுக்கு தேவையான ஊட்டச் சத்துக்களையும் அதிக அளவில் தன்னுள் கொண்டுள்ளது.
மாமரத்து இலைகள் பல நோய்களை குணப்படுத்தக்கூடியது அதேநேரம் வெட்டுக்காயங்கள், கீறல்கள், போன்றவற்றை குணப்படுத்த சிறந்த மருந்தாகவும் இது பயன்படுகிறது.
வைட்டமின் சி ஏ மற்றும் பி நிறைந்துள்ள இந்த இலைகளில் பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.
தென்கிழக்கு ஆசியாவில் இதனை உணவாக சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள் பல தரப்பு மக்கள்.
தமிழ் கலாச்சாரத்தில் இதனை வீட்டு வாசலில் தொங்க விடுவதோடு நிறுத்தி விடுகிறோம், மாமரத்து இலையின் பல்வேறு மருத்துவ குணங்களை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளலாம்.
நீரிழிவு நோயை கட்டுப்படுத்த
நீரிழிவு நோயை கட்டுப்படுத்துவதற்கு மா இலை ஒரு மிகச்சிறந்த மருந்தாகும்.
டானின் என்னும் வேதிப்பொருள் அதிக அளவில் நிறைந்துள்ளது இது ஆரம்ப கால நீரிழிவு நோய்க்கும் இது சிறந்த மருந்தாக இருக்கிறது.
இந்த இலைகளை காய வைத்து பொடியாக்கி தேநீர் தயாரித்து குடிக்கலாம் அல்லது இரவு முழுவதும் இலைகளை நீரில் ஊற வைத்து.
காலையில் அதனை வடிகட்டி குடித்தால் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டுக்குள் வரும்.
மேலும் இது ஹைபர்கிளேசிமியாவை குணப்படுத்துவதில் சிறந்ததாக இருக்கிறது என மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.
இரத்த அழுத்தத்தை குறைக்கிறது
மா இலையில் ரத்த அழுத்தத்தை குறைக்கும் ஹைப்போடென்சிவ் குணங்கள் நிறைந்துள்ளது இவை இரத்த நாளங்களை வலிமைப்படுத்தி வெரிகோஸ் நோயை குணப்படுத்துகிறது.
கொழுந்து இலைகளை உங்கள் உணவில் தொடர்ந்து சேர்த்து வந்தால் போதும் உங்களுக்கு அதிகப்படியாக இரத்த அழுத்தம் இருந்தால் தானாக குறைந்துவிடும்.
உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற
உடலில் நச்சுக்கள் அதிக அளவில் இருந்தால் பித்தங்கள் உருவாகி உடல்சூடு உருவாகும், இதனால் உங்களால் நேர்மறையாக சிந்திக்க முடியாது.
ஒற்றை தலைவலி, டென்ஷன், இரத்த அழுத்தம், கண் பார்வை மங்குதல், போன்ற பல்வேறு வகையான நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
புண்கள் மற்றும் காயங்களை குணப்படுத்த
காயம் ஏற்பட்டு அந்த இடம் எரிந்தால் அல்லது வலி ஏற்பட்டால் அதற்கு மாமரத்து இலையை எரித்து அதன் சாம்பலை காயப்பட்ட இடங்களில் பூசும் போது எரிச்சல் உடனடியாக நின்றுவிடும்.
காது வலி உடனடியாக குணமாக
காது வலி என்பது அதிக வலியையும், எரிச்சலையும், துக்கத்தையும், ஏற்படக்கூடிய ஒரு கொடிய வலியாகும்.
வீட்டு மருத்துவ முறையில் இதனை நீங்கள் உடனடியாக குணப்படுத்தலாம்,இதற்கு சிறந்த தீர்வாக இருக்கும் என சங்க கால மருத்துவ குறிப்புகள் தெரிவிக்கிறது.
இலைகளில் இருந்து தயாரிக்கப்படும் சாறு சிறந்த மருந்தாகும் வலி நிவாரணியாகவும் பயன்படுத்துவதற்கு முன்பு சிறிது சூடு படுத்தினால் நன்றாக இருக்கும்.
வயிற்றுப்போக்கு உடனடியாக நிற்பதற்கு
Amazing 7 health benefits of mango leaves வயிற்றுப் போக்கை உடனடியாக குணப்படுத்த மாமரத்தை இலையை நீங்கள் பயன்படுத்தலாம்.
இலையை நிழலில் காயவைத்து பொடியாக்கி அதனை நீரில் கலந்து தினமும் இரண்டு முறை காலை மற்றும் இரவு வேளைகளில் குடித்தால் வயிற்றுப் போக்கை உடனடியாக குணமாகிவிடும்.
சிறுநீரக கற்கள் கரைய
Amazing 7 health benefits of mango leaves மா இலைகளில் சிறுநீரக கற்கள் மற்றும் பித்தப்பை கற்களை கரைக்கக்கூடியது தினமும் மாலை பொடியை நீரில் கரைத்து இரவு தூங்குவதற்கு முன்பும் மற்றும் அதிகாலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் சிறுநீரக கற்கள் விரைவில் கரைந்துவிடும்.