Amazing Delicious mutton biryani 2022
சுவையான மட்டன் பிரியாணி வீட்டிலேயே செய்வது எப்படி..!
இன்றைய காலகட்டத்தில் இறைச்சி வகை உணவு என்றால் அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு உணவாக மாறிவிட்டது.
அதிலும் குறிப்பாக பிரியாணி என்றால் சிறு குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவரும் விரும்புகிறார்கள்.
பிரியாணியில் உள்ள சுவை மற்றும் வாசனை மூலம் கூடுதலாக சாப்பிட கூடிய ஒரு சூழ்நிலை இருக்கிறது.
பிரியாணி பல வகைகள் உள்ளது மட்டன் பிரியாணி, பீப் பிரியாணி, சிக்கன் பிரியாணி, காளான் பிரியாணி, முட்டை பிரியாணி, மீன் பிரியாணி, இறால் பிரியாணி, என்ற பல வகைகள் நிறைந்துள்ளது.
என பலவகையான பிரியாணிகள் இருந்தாலும் அதில் எப்போதும் மக்கள் அதிக அளவில் விரும்பப்படுவது மட்டன் பிரியாணி மட்டுமே.
காரணம் அதனுடைய சுவை மற்ற பிரியாணியை விட எப்பொழுதும் அதிகமாக இருக்கும்.
மட்டன் பிரியாணி செய்வதற்கு தேவையான மசாலா பொருட்கள்
பிரியாணி இலை – 1
மல்லிதூள் – 1/2 டீஸ்பூன்
நட்சத்திர சோம்பு – (அண்ணாச்சி பூ) ஒன்று
லவங்கம் பட்டை – 1
ஏலக்காய் – 3
கிராம்பு – 4
சீரகம் – 1 டீஸ்பூன்
மிளகு – 1/2 டீஸ்பூன்
மட்டன் பிரியாணி செய்வதற்கு தேவையான மூலப்பொருட்கள்
கடலை எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்
நெய் – 2 டேபிள் ஸ்பூன்
கிராம்பு – 4
பிரியாணி இலை – 4
பெரிய வெங்காயம் – 2 நன்கு சிறிதாக நறுக்கியது
பச்சை மிளகாய் – 6
இஞ்சி பூண்டு விழுது – 3 ஸ்பூன்
மிளகாய் தூள் – 2 ஸ்பூன்
மல்லி இலை – ஒரு கைப்பிடி அளவு
புதினா இலை – ஒரு கைப்பிடி அளவு
கறிவேப்பிலை – ஒரு கைப்பிடி அளவு
தக்காளி – 3 சிறிதாக நறுக்கியது
கட்டி தயிர் – 1 கப்
பொன்னி அரிசி அல்லது பாஸ்மதி அரிசி
ஆட்டுக்கறி ஒரு கிலோ – உங்களுக்கு தேவையான அளவு
ஏலக்காய் – 4
மஞ்சள் தூள் – 2 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
சுவையான மட்டன் பிரியாணி செய்யும் முறை
அடுப்பில் வாணலி வைத்து அவற்றில் பிரியாணி மசாலா செய்வதற்கு முதலில் நட்சத்திர சோம்பு, லவங்கம் பட்டை, ஏலக்காய், சீரகம், சோம்பு, மிளகு, கிராம்பு, மற்றும் பிரியாணி இலை, ஆகியவற்றை சேர்த்து நன்கு பொன்னிறமாக வரும் வரை வறுத்துக் கொள்ளுங்கள்.
அதன் பிறகு மிக்ஸியில் அல்லது அம்மியில் நன்கு நைஸாக அரைத்துக் கொள்ளுங்கள், இப்பொழுது சுவையான இயற்கையான முறையில் பிரியாணி மசாலா தயாராகிவிட்டது.
மட்டன் பிரியாணி செய்முறை குறிப்பு
Amazing Delicious mutton biryani 2022 இப்பொழுது அடுப்பில் வாணலி வைத்து அவற்றில் 3 டேபிள்ஸ்பூன் கடலை எண்ணெய் மற்றும் 2 டேபிள்ஸ்பூன் நெய் சேர்த்து சூடேற்றவும்.
கடலை எண்ணெய் சூடு ஏறியதும் கிராம்பு, பிரியாணி இலை, நறுக்கிய பெரிய வெங்காயம், ஏலக்காய் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும்.
வெங்காயம் நன்றாக பொன்நிறமாக வந்த பிறகு 2 டேபிள்ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது,6 பச்சை மிளகாய், மிளகாய்த்தூள், ஒரு டேபிள்ஸ்பூன் மஞ்சள்தூள், பிரியாணி மசாலா, ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
Amazing Delicious mutton biryani 2022 மசாலா நன்கு வதங்கியபின் ஒரு கையளவு மல்லி இலை, ஒரு கையளவு புதினா இலை, ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளுங்கள்.
அதன்பிறகு சிறிதாக நறுக்கி வைத்துள்ள தக்காளியை சேர்த்து வதக்க வேண்டும், தக்காளி நன்கு வதங்கியதும் ஒரு கப் தயிர் சேர்த்து நன்கு கிளறி விடுங்கள்.
அடுத்ததாக ஒரு கிலோ ஆட்டுக்கறியை சேர்த்து நன்கு வதக்க வேண்டும் பின், தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு வேகும் வரை கொதிக்க வைக்க வேண்டும்.
உடலில் சேரும் நச்சுக்களை நீக்க இவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்..!
Amazing Delicious mutton biryani 2022 அதன் பிறகு இதனுடன் உங்களுக்கு தேவையான அளவு அரிசி சேர்த்து தண்ணீர் மற்றும் உப்பு தேவையான அளவு சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
பின்பு குறைந்தது 20 நிமிடங்கள் வரை நன்கு வேக வைக்க வேண்டும் அதன் பிறகு சுவையான மட்டன் பிரியாணி தயாராகி விடும்.