Amazing egg biryani recipe in tamil 2023
சுவைமிகுந்த முட்டை பிரியாணி செய்வது எப்படி..!
சுவைமிகுந்த முட்டை பிரியாணி செய்வது எப்படி முட்டை என்றால் அனைவருக்கும் பிடித்த ஒரு உணவு, அதிலும் அசைவ உணவு பிரியர்களுக்கு முட்டை பிரியாணி மிகவும் பிடித்த உணவு என்று சொல்கிறார்கள்.
காரணம் முட்டை அனைவருக்கும் பிடித்த உணவாக இருக்கிறது, இந்த பதிவில் சுவைமிகுந்த முட்டை பிரியாணி வீட்டில் எளிமையாக செய்வது எப்படி என்பது பற்றி முழுமையாக பார்க்கலாம்.
முட்டை மசாலா செய்வதற்கு தேவையான பொருட்கள்
முட்டை – தேவையான அளவு
கடலை எண்ணெய் – தேவையான அளவு
மஞ்சள் தூள் – சிறிது
மிளகாய்தூள் – ஒரு டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
சுவைமிகுந்த முட்டை பிரியாணி செய்வது எப்படி
முட்டை பிரியாணி செய்வதற்கு முதலில் முட்டையை நன்கு வேக வைத்துக்கொள்ளுங்கள்
பின் வேக வைத்த முட்டையை லேசாகக் கீறி வைத்துக் கொள்ளவும்
சுவைமிகுந்த பிரியாணி செய்முறை
Amazing egg biryani recipe in tamil 2023 ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி கொள்ளவும் அதில் அரை டேபிள்ஸ்பூன் மஞ்சள்தூள், ஒரு டேபிள்ஸ்பூன் மிளகாய்தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து மிதமான தீயில் வறுத்து கொள்ளவும்.
Amazing egg biryani recipe in tamil 2023 அதில் வேக வைத்த முட்டையை சேர்த்து மசாலா முட்டையில் சேரும் அளவிற்கு சுமார் 4 நிமிடங்கள் நன்கு வறுத்துக் கொள்ளவும்.
பிரியாணி மசாலா செய்வதற்கு
பிரியாணி இலை – 2
பட்டை – 1சிறிதளவு
ஏலக்காய் – 4
கிராம்பு – 6
நட்சத்திர சோம்பு – 2
ஜாதிபத்திரி – 1
சீரகம் – ஒரு டேபிள்ஸ்பூன்
சோம்பு – அரை டேபிள்ஸ்பூன்
மிளகு – தேவையான அளவு
மல்லித்தழை – 1 டேபிள்ஸ்பூன்
இஞ்சி பெரியது – 1 நறுக்கியது
பூண்டு – 8 பல்
பச்சைமிளகாய் – 5
கொத்தமல்லி – தேவையான அளவு
கறிவேப்பிலை – ஒரு கைப்பிடி
முட்டை பிரியாணி செய்யும் முறை எப்படி
Amazing egg biryani recipe in tamil 2023 சுவைமிகுந்த முட்டை பிரியாணி தயார் செய்வதற்கு முதலில் மசால் தயார் செய்ய வேண்டும்.
அதற்கு ஒரு வானொலியில் பிரியாணி இலை, ஒரு துண்டு பட்டை, ஏலக்காய், கிராம்பு, சோம்பு, ஜாதிபத்திரி, சீரகம், அரை டேபிள்ஸ்பூன் சோம்பு, மிளகு, மல்லி தூள், சேர்த்து 2 நிமிடங்கள் நன்கு வறுத்துக் கொள்ளவும்.
இதை மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும் அரைத்த பின்பு அதில் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், சிறிதளவு கொத்தமல்லி சேர்த்து மீண்டும் அரைத்துக் கொள்ளவும்.
முட்டை பிரியாணிக்கு தேவையான மூலப்பொருட்கள்
நெய் – 2 டேபிள்ஸ்பூன்
கடலை எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்
வெங்காயம் – 3 நறுக்கியது
தக்காளி – 2 நறுக்கியது
மஞ்சள்தூள் – சிறிது அளவு
மிளகாய் தூள் – ஒரு டேபிள் ஸ்பூன்
தயிர் – ஒரு கப்
கொத்தமல்லி இலை – தேவையான அளவு
புதினா இலை – கைப்பிடி அளவு
உப்பு – சிறிதளவு
சுவைமிகுந்த பிரியாணி செய்வது எப்படி
2 கப் பாஸ்மதி அரிசியை தண்ணீரில் நன்கு கழுவி கொள்ளவும் பின் அரிசியில் தண்ணீர் ஊற்றி அரை மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளுங்கள்.
Amazing egg biryani recipe in tamil 2023 அதன் பிறகு பிரியாணி செய்வதற்கு குக்கரில் நெய், கடலை எண்ணெய் சேர்த்து, சூடாக்கி கொள்ளவும் பின் அதில் நாம் அரைத்து வைத்திருக்கும் பிரியாணி மசாலா தூள் சேர்த்து 4 நிமிடம் நன்கு வேக வைக்க வேண்டும்.
4 நிமிடம் கழித்து நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறம் வரும் வரை நன்கு வதக்கவும், வெங்காயம் பொன்னிறமாக பிறகு நறுக்கிய தக்காளி சிறிதளவு மஞ்சள் தூள் மிளகாய்தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.
வதக்கிய பின் ஒரு கப் தயிர் சேர்த்து கிண்டிக் கொள்ளவும் பின் அதில் ஊற வைத்த 2 கப் பாஸ்மதி அரிசி, ஒரு கப் தண்ணீர் சேர்த்து கொள்ளவும், பின் அதில் நறுக்கிய கொத்தமல்லி இலை, புதினா இலை மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து லேசாக கொதிக்க வைக்க வேண்டும்.
கொதித்த பிறகு மசாலா சேர்த்த முட்டையை அதில் போட்டு குக்கரை 2 விசில் வரும்வரை மூடிக்கொள்ளவும், 2 விசில் வந்த பிறகு மிதமான சூட்டில் வேக வைக்க வேண்டும்.
பிரஷர் போன பிறகு குக்கரை திறந்தால் சுவையான முட்டை பிரியாணி தயாராகி இருக்கும்.