amazing health benefits of crab in tamil 2022

amazing health benefits of crab in tamil 2022

நண்டு சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்..!

உங்களுக்கு வாரம்தோறும் மட்டன், சிக்கன், மீன், பன்றி இறைச்சி, மாட்டு இறைச்சி, போன்றவற்றை சாப்பிட்டு போர் அடித்துவிட்டதா அப்படியெனில்.

இந்த வாரம் சற்று வித்தியாசமாக நண்டு செய்து சுவைத்துப் பாருங்கள், ஏனெனில் நண்டு நாவிற்கு விருந்து கொடுக்கும் வண்ணம் வித்தியாசமான சுவையுடன் இருக்கும்.

உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானதாக இருக்கும், இதற்கு காரணம் நண்டில் நிறைந்துள்ள ஊட்டச்சத்துக்கள் என்று சொல்லலாம்.

அதிலும் நண்டில் கனிமச்சத்துக்கள் தான் மிகவும் அதிகமாக இருக்கிறது, மேலும் இதில் கலோரிகள் மற்றும் கொழுப்புகள் மிகவும் குறைவாக இருக்கின்றது.

எனவே நண்டை உணவுப் பட்டியலில் சேர்த்துக்கொள்வது நல்லதாக அமையும்,நண்டு சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும், என்பதை பற்றி இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ள போகிறோம்.

முடக்கு வாதம்

செலினியம் என்பது ஒரு ஆன்டி ஆக்சிடன்ட் என்பது உங்களுக்கு தெரியுமா? செலினியம் மற்ற ஆன் -ஆக்சிடென்ட் களோடு சேர்ந்து விஷத்தன்மையுள்ள அழுத்தத்தை தடுக்கும்.

மேலும் மருத்துவ ஆய்வு ஒன்றில் செலினியம் உடலில் குறைவாக இருந்தால் அது மூட்டுகளில் வீக்கத்தை ஏற்படுத்தி கடுமையான வலியை ஏற்படுத்தும் என நிரூபிக்கப்பட்டுள்ளது.

ஆகவே செலினியம் நிறைந்த உணவை சாப்பிட்டு வந்தால் முடக்கு வாதத்தில் இருந்து தப்பித்து விடலாம்.

வளர்ச்சியை அதிகப்படுத்தும்

நண்டில் உள்ள புரதச்சத்து ஒருவரின் வளர்ச்சிக்கும் எலும்புகளுக்கும் மிகவும் முக்கியமானதாக தேவைப்படுகிறது.

எனவே குழந்தைகளுக்கு நண்டு சமைத்து கொடுப்பது மிகவும் நல்லது மேலும் நண்டு சாப்பிட்டால் நகம், சருமம், முடி, போன்றவை ஆரோக்கியமாக இருக்கும்.

amazing health benefits of crab in tamil 2022

முகப்பருக்களை தடுக்கும்

முகத்தில் பருக்கள் இருந்தால் நண்டுகளை அதிக அளவில் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள், ஏனெனில் நண்டில் உள்ள ஜிங்க் எண்ணெய் முகப்பருக்கள் சுரப்பதை கட்டுப்படுத்தும், இதனால் முகப்பருக்கள் தோன்றுவது முற்றிலும் தடுக்கும்.

இரத்த அழுத்தம்

மக்னீசியம் நரம்பு மற்றும் தசைகளின் இயக்கத்திற்கு மிகவும் முக்கியமானதாக தேவைப்படுகிறது,நண்டில் மக்னீசியம் ஊட்டச்சத்துக்கள் அதிகமாக உள்ளது.

இதனால் நரம்புகள் தளர்ந்து, இரத்த அழுத்தத்தின் அளவு எப்பொழுதும் சீராக இருக்கும்.

இதய நோய்கள்

நண்டில் ஒமேகா-3 ஊட்டச் சத்து அதிகமாக உள்ளது அது மட்டுமில்லாமல் ஃபேட்டிக் அமிலம் அதிகமாக உள்ளது.

இவை இரத்தத்தில் உள்ள கொழுப்புகளின் அளவை குறைத்து, இதய நோய்களை முற்றிலும் தடுத்து விடுகிறது.

மீன் குழம்பு மிக சுவையாக செய்வது எப்படி..!

கொலஸ்ட்ரால் அளவு

நண்டில் கெட்ட கொலஸ்ட்ரால் உள்ளது ஆனால் அதேசமயம் அதில் நியாசின் அதிகமாக இருக்கிறது, இந்த வைட்டமின் பி நல்ல கொலஸ்ட்ராலை அதிகரித்து, கெட்ட கொலஸ்ட்ரால் மற்றும் ட்ரைகிளிசரைடு அளவை குறைத்துவிடும்.

amazing health benefits of crab in tamil 2022

வலிமையான எலும்புகள்

காப்பர் மற்றும் ஜிங்க் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமான ஊட்டச்சத்து ஏனெனில் இவை இரண்டும் தான் உடலானது வைட்டமின் டி-யை உறிஞ்சிக் அதனால் எலும்புகள் கால்சியத்தை உறிஞ்சுகிறது.

Kadan pathiram format full details 2022

ரத்த சோகையை குறைக்கும்

நண்டில் இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தி தேவையான வைட்டமின் பி ஊட்டச் சத்து நிறைந்துள்ளது, எனவே நண்டு சாப்பிட்டு வந்தால், ரத்தசோகை ஏற்படுவது முற்றிலும் தடுத்து விடலாம்.

Leave a Comment