Amla oil for grey hair useful tips 2022
இளநரையை தடுக்கும் நெல்லிக்காய் எண்ணெய்..!
நெல்லிக்காவிற்க்கு இயற்கையாகவே இளநரையை போக்கும் ஊட்டச்சத்து தன்மை உள்ளது.
அதாவது நெல்லிக்காயில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் தலைமுடிக்கு நல்ல ஒரு ஊட்டச்சத்து அளித்து தலைமுடியை நன்கு நீளமாக வளர செய்கிறது.
குறிப்பாக இளம் வயதிலேயே சிலருக்கு தலை முடி சார்ந்த பல்வேறு பிரச்சினைகள் தோன்றும், அந்த நரை முடி கருமையாக நெல்லிக்காய் ஒரு சிறந்த ஊட்டச்சத்து பொருளாக விளங்குகிறது.
நெல்லிக்காயில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ள நெல்லிக்காயை அதிகளவு சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.
சரி நரை முடி கருமையாக மாறுவதற்கு நெல்லிக்காய் எண்ணெய் தயார் செய்வது எப்படி என்று முழுமையாக இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
தேவையான மூலப்பொருட்கள்
தேங்காய் எண்ணெய் 250 கிராம்
காய்ந்த நெல்லிக்காய் 50 கிராம்
நெல்லிக்காய் எண்ணெய் தயாரிக்கும் முறை
அடுப்பில் ஒரு இரும்பு எண்ணெய் கடாயை வைத்து அவற்றில் சிறிதளவு தேங்காய் எண்ணெய் முதலில் ஊற்றிக் கொள்ள வேண்டும்.
அதன் பிறகு 50 கிராம் காய்ந்த நெல்லிக்காய் சேர்த்து நன்றாகக் கருகி வரும் அளவிற்கு வறுத்து தெடுக்க வேண்டும்.
நெல்லிக்காயை வறுக்கும் போது அவ்வப்போது சிறிதளவு தேங்காய் எண்ணெய் ஊற்றிக் கொள்ளுங்கள், நெல்லிக்காயை நன்கு வறுபட்டதும் அடுப்பில் இருந்து இறக்கி நன்கு ஆற விட வேண்டும்.
பின்பு நெல்லிக்காய் நன்கு ஆறியதும் 250 கிராம் தேங்காய் எண்ணெயை அவற்றில் ஊற்றி 4 அல்லது 5 மணி நேரம் தொடர்ச்சியாக ஊறவைக்க வேண்டும்.
இவ்வாறு தொடர்ச்சியாக ஊறவைப்பதினால் நெல்லிக்காயில் உள்ள ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் தேங்காயெண்ணெயில் சேர்ந்துவிடும்.
நெல்லிக்காய் குறைந்தது 5 மணி நேரம் நன்கு ஊறியதும் நெல்லிக்காய் எண்ணெயை வடிகட்டி காற்றுப்புகாத ஒரு சுத்தமான பாட்டிலில் ஊற்றி வாரத்தில் 4 அல்லது 5 முறை தினமும் தலைக்கு தடவி வாருங்கள்.
இந்த நெல்லிக்காய் எண்ணெய் தலை முடி அடர்த்தியாக வளர செய்யும், நரைமுடி மற்றும் முடி உதிர்வு போன்ற பிரச்சனைகளை முழுவதும் சரி செய்துவிடும்.
இதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன
Amla oil for grey hair வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து இதனை செய்வதால் உங்களுக்கு செலவும் மிச்சமாகும்.
இதனால் எந்த ஒரு பக்க விளைவுகளும் உடல் மற்றும் தலைமுடிக்கு வராது.
முடி வளர்ச்சி அதிகமாக
நரைமுடி தோன்றாது மறுபடியும்