amount of sugar in the body useful tips 2022
உடம்பில் சர்க்கரை அளவு எவ்வளவு இருக்க வேண்டும்..!
பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் சந்திக்கக்கூடிய பொதுவான ஒரு கொடுமையான நோய் என்றால் அது சர்க்கரை நோய்தான்.
முன்பெல்லாம் நீரிழிவு நோய் வயதானவர்களை தான் அதிகமாக பாதிக்கும், ஆனால் இப்பொழுது குழந்தைகள் கூட இந்த நோயால் பாதிக்கப்படுகிறார்கள்.
நீரிழிவு நோய் வருவதற்கு சில முக்கிய காரணங்கள் இருக்கிறது, அந்த வகையில் நாம் இந்த தொகுப்பில் சர்க்கரை நோய் வருவதற்கான காரணங்கள் மற்றும் உடலின் சர்க்கரை அளவு எவ்வளவு இருக்க வேண்டும் என்பதை முழுவதும் படித்து தெரிந்து கொள்ளலாம்.
சர்க்கரையின் அளவு எவ்வளவு இருக்க வேண்டும்
சர்க்கரையின் அளவு 120 முதல் 140 மில்லி கிராம் / டெ.லி வரை இருந்தால் அது சரியான அளவு.
சர்க்கரையின் அளவு 200 மில்லி கிராம் / டெ.லி வரை இருந்தால் நீரிழிவு நோய் இருப்பதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.
இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கண்டுபிடிப்பதற்கு இரண்டு முறைகள் பயன்படுத்தபடுகிறது, ஒன்று சாப்பிடுவதற்கு முன்பு மற்றொன்று சாப்பிட்ட பிறகு.
சாப்பிடுவதற்கு முன் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு 6 முதல் 110 மில்லி கிராம் வரை இருக்க வேண்டும், இது நார்மலான ஒரு அளவு.
சாப்பிட்ட பின் சர்க்கரையின் அளவு 80 முதல் 140க்குள் இருக்க வேண்டும்.
இதற்கு மேல் ஒருவரின் உடம்பில் சர்க்கரையின் அளவு இருந்தால் நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது.
சாப்பிட்ட பிறகு சர்க்கரையின் அளவு 180க்கு மேல் இருந்தால் நீரிழிவு இருப்பது நிச்சயம்.
முதன் முதலில் நீரிழிவு நோய்க்கான பரிசோதனை மேற்கொள்பவர்கள் சாப்பிடுவதற்கு முன்பாக மற்றும் சாப்பிட்ட பிறகு இரத்த சர்க்கரையின் அளவை,
ஒரு வார இடைவெளியில் இரண்டு முறை அளவிட வேண்டும், இரண்டு முறையும் உங்களுக்கு சர்க்கரை அளவு அதிகமாக இருந்தால், அது நீரிழிவு நோய் என்பதை உறுதி செய்து கொள்ளலாம்.
சர்க்கரையின் அளவு அதிகமானால் சிறுநீரகம், கண்கள், இதயம், கால்களில், உள்ள ரத்தக் குழாய்களில் பாதிப்பு ஏற்படும்.
amount of sugar in the body உடலின் இன்சுலின் அளவு குறைவாக இருந்தாலோ அல்லது இன்சுலின் சுரப்பில் பாதிப்பு ஏற்பட்டாலோ, சர்க்கரை நோய் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம்.
உங்களுடைய குடும்பத்தில் உள்ளவர்களுக்கு, சர்க்கரை நோய் இருந்தால், உங்களுக்கு சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
amount of sugar in the body இனிப்பு உணவுகள் மற்றும் கொழுப்பு மிகுந்த உணவுகளை அதிகம் சாப்பிடுபவர்களுக்கு, உடல் பருமன் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது, உடல் எடை அதிகரிக்கும் போது, இன்சுலின் அளவும் அதிகரிக்கும் இதனால் சர்க்கரை நோய் வரலாம்.
உயர் ரத்த அழுத்தம் மற்றும் மன அழுத்தம் உள்ள நபர்களுக்கு சர்க்கரை நோய் ஏற்படும்.
அதிக தாகம், சோர்வு, அடிக்கடி பசி, அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பிரச்சனை இருக்கும் நபர்களுக்கு சர்க்கரை நோய் உள்ளதா என்பதை சரிபார்த்துக் கொள்வது மிக நல்லது.