anadeenam nilam endral enna useful tips 2022
அனாதினம் நிலம் என்றால் என்ன..!
அனாதினம் நிலம் என்பது அரசாங்கம் தன்கீழ் கையகப்படுத்தி இருக்கும் உரிமை கோரப்படாத நிலம் எனலாம் 1960 க்கு முன்னர் மக்கள்.
சுமார் 30 ஏக்கருக்கு மேல் நிலங்களை ஏகப்பட்ட பேர் வைத்து இருந்தார்கள் ஆனால் நில உச்சவரம்பு சட்டம் 1961 அடிப்படையில் 30 ஏக்கருக்கு மேல் யாராவது நிலங்களை வைத்திருந்தால் அரசாங்கம் அதனை எடுத்துக் கொண்டனர் இதனைத்தான் அனாதினம் நிலம் என்று அழைப்பார்கள்.
ஒருவேளை நீங்கள் பதிவுத்துறையில் உங்கள் நிலம் சம்பந்தமாக பதிவு செய்யப்பட்டிருந்தாலும், அதனை வருவாய்த்துறையினர் கண்டிப்பாக ஏற்க மாட்டார்கள், அந்த இடங்களுக்கு பட்டா கிடைக்காது என்பதே உண்மை.
அதுமட்டுமில்லாமல் அந்த இடங்கள் CMDA மற்றும் DTCP அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளாக இருக்கும் மேலும் அந்த கால அவகாசம் 29.06.1986ல் தொடங்கி 29.08.1987 முடிந்து அதனால் அந்த இடங்களை தனிப்பட்ட நபர்கள் யாரும் உரிமை கொண்டாட முடியாது.
இதில் தவறு எங்கே நடந்தது
இதில் முதலில் தவறுகள் என்று பார்த்தால் உங்களுடையது தான் ஏனென்றால் முழுவதும் சரியாக விசாரிக்காமல் பத்திரத்தை படித்து வழக்கறிஞரை நாடியிருந்தால்.
anadeenam nilam endral enna useful tips 2022 இதுபோன்ற பிரச்சினைகள் ஏதும் வந்து இருக்காது, பதிவுத்துறையில் மட்டுமில்லாமல் நீர்நிலைகள், மேய்க்கால், மந்தைவெளி, போன்ற இடங்களை பதிவு செய்துவிடுகிறார்கள் ஆனால் இதற்கு ஒருபோதும் பட்டா வழங்க மாட்டார்கள் என்பதை நீங்கள் நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.
கண்டிப்பாக இது போன்று இருக்கும் நிலங்களை விற்க முடியாது பதிவுத்துறையில் என்னதான் பதிவு செய்து இருந்தாலும் இதுபோன்ற செயல்களால் பல்வேறு மோசடிகள் நடக்கிறது இது மோசடி யாகவே கருதப்படும்.
ஒருவேளை உங்களிடம் பழைய பட்டா இருந்தாலும் அதாவது udr காலத்தில் கொடுக்கப்பட்ட இருந்தாலும் கூட அரசு அலுவலக பதிவேட்டில் அனாதினம் நிலம் இன்று குறிப்பிடப்பட்டிருந்தால்.
அத்தகைய நிலத்தை விற்பனை செய்யக்கூடாது, மேலும் இது அரசாங்கம் இந்த நிலங்களை பொதுப் பணிக்கு மற்றும் நிலமற்ற ஏழைகளுக்கு கொடுக்கும் நோக்கில் தான் இந்த சட்டம் கொண்டு வரப்பட்டது.
இன்றைய காலகட்டத்தில் அரசாங்கம் நிலங்களை அரசாங்கத்திற்கு தெரியாமல் வீட்டுமனைகளாக விற்பனை செய்துவிடுகிறார்கள் அதனை நம்பி ஏராளமான ஏழை மற்றும் நடுத்தர மக்கள் வாங்கி ஏமாந்து விடுகிறார்கள்.
வீடு கட்டுவதற்கு மத்திய அரசு விரைவில் வழங்குகிறது ரூபாய் 4 லட்சம்..!
anadeenam nilam endral enna useful tips 2022 ஒருவேளை நீங்கள் நிலம் வாங்க வேண்டும் என்று முடிவு செய்தால் அந்த நிலத்தின் பற்றிய தகவல்களை முழுவதும் தெரிந்து கொள்ளுங்கள்.
குறைந்த பட்சம் 50 ஆண்டுகள் அந்த நிலம் யாரிடம் இருந்தது அந்நிலத்தின் வில்லங்கச்சான்று போன்ற பல்வேறு தகவல்களை தெரிந்தபின் நிலம் வாங்கினால் நீங்கள் எந்த ஒரு பெரிய பிரச்சனைகளிலும் சிக்கிக்கொள்ள மாட்டீர்கள்.