Annamalai padayatra program starts in Rameswaram
அண்ணாமலை பாதயாத்திரை தொடக்க விழாவில் தமிழக மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்ட அமித்ஷா என்ன நடந்தது..!
தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியை வேரூன்ற வேண்டும் கட்சியை வளர்க்க வேண்டும் என்ற நோக்கில் அக்கட்சியின் தலைவர் அண்ணாமலை பல்வேறு விதமான அரசியல் செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகிறார்.
இப்போது அண்ணாமலை தமிழ்நாடு முழுவதும் பாதையாத்திரை செல்வதற்கான நடவடிக்கையை தொடங்கியுள்ளார்.
இந்த விழாவை தொடங்கி வைப்பதற்கு மதிய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேரடியாக ராமேஸ்வரம் வந்தார்.
ராமேஸ்வரத்தில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்ட மேடையில் அமித்ஷா தமிழக மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்டார் என்னவென்றால்.
தமிழில் எனக்கு பேச தெரியாது என்பதற்காக உங்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்பதை மட்டும் தமிழில் பேசினார்.
அதன்பிறகு மத்திய உள்துறை அமைச்சர் தலைமையில் கூட்டணி கட்சியினர் ஆலோசனை நடத்தினர்,தமிழகத்தில் ஊழலுக்கு எதிராகவும்.
தமிழ் மக்களுக்கு அனைத்து நலத்திட்டங்களையும் சென்றடைவதை உறுதி செய்யும் வகையில் என் மண் என் மக்கள் என்ற பாதயாத்திரையை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ராமேஸ்வரத்தில் தொடங்கினார்.
நேற்றைய தின தொடக்க விழாவில் திமுக குடும்ப ஆட்சியை கண்டித்து பேசியிருந்தார் அவர் பேசுகையில் குடும்ப ஆட்சி ஊழல் ஆட்சிக்கு முடிவு வருகிறது.
நம் பிரதமர் மோடிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் இப்போது ஒரு கூட்டணி உருவாக்கியுள்ளார்கள் அந்த கூட்டணிக்கு இந்தியா என பெயர் சூட்டியுள்ளார்கள்.
இதில் புதிதாக ஒன்றும் இல்லை கடந்த காலத்தில் இவர்களை கூட்டிய ஐக்கிய முற்போக்கு கூட்டணி தான் பல்லாயிரம் கோடி ரூபாய் ஊழல் செய்தவர்கள்.
இப்போது மீண்டும் ஒன்று கூடி உள்ளனர் காங்கிரசும் திமுகவும் இணைந்து மக்களிடம் ஓட்டு கேட்க சென்றால் அவர்களுக்கு 2g ஊழல் நிலக்கரி ஊழல் தான் நினைவுக்கு வரும்.
சோனியா காந்தி ராகுலை பிரதமர்யாக்க வேண்டும் முதல்வர் ஸ்டாலின் உதயநிதி முதல்வராக வேண்டும் லாலுவுக்கும் அவரது மகனை முதல்வராக வேண்டும் என்ற நோக்கம் இருக்கிறது.
இப்படியே இந்த கூட்டணியில் உள்ள கட்சிகள் குடும்ப ஆட்சி செய்து வருகிறார்கள் இந்த கட்சிகள் எதுவும் மக்களுக்கு நன்மை செய்யவில்லை.
அண்ணாமலை என் மண் என் மக்கள் பாதையாத்திரை 169 நாட்களில் முடிக்கும் போது நாடாளுமன்ற தேர்தல் வந்துவிடும் 2024 பாஜக மீண்டும் வென்று ஆட்சியைப் பிடிக்கும்.
மோடி பிரதமர் ஆவார் தமிழகத்தில் மாற்றம் நடைபெறும் இந்த நிகழ்வில் கலந்து கொள்ள தேசிய ஜனநாயக கூட்டணியை சேர்ந்த தலைவர்களுக்கு அழைப்புகள் விடுக்கப்பட்டது.
அதன்படி எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது அண்ணாமலை ஆனால் அவர் உடல்நிலை பாதிப்பு காரணமாக கலந்து கொள்ளவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவருக்கு பதிலாக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
அதேபோல் மற்ற கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் ஜி கே வாசன், ஏசி சண்முகம், கிருஷ்ணசாமி, உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள் இந்த நிகழ்வுக்கும் பாமகவுக்கும் தேமுதிகவிற்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.
ஆனால் அக்கட்சிகள் பங்கேற்கவில்லை இந்த நிலையில் நேற்றைய தினம் அமித்ஷா தலைமையில் மேற்கொண்ட கூட்டணி கட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.
இந்த ஆலோசனையில் தேசிய ஜனநாயக கூட்டணியை வெற்றி பெற செய்ய என்ன மாதிரியான அரசியல் வியூகங்கள் வகுக்கப்படும் என்பது குறித்தும்.
தேர்தல் வெற்றிக்கு அனைத்து கட்சிகளும் பாடுபட வேண்டும் என்பது குறித்தும் தீவிரமான ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
எங்கள் Telegram குரூப்பில் இணையுங்கள்
Morning drinks to lower bad cholesterol
How to change Passport photo in tamil
How to renew your old Passport in online 2023