Anomaly Scan Meaning Best Tips in tamil 2023
கர்ப்பிணி பெண்களுக்கு எடுக்கப்படும் அனாமலி ஸ்கேன் என்றால் என்ன..!
மனித வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான தாக்கத்தால் இன்று ஒரு பெண் இயற்கையான முறையில் குழந்தை பெற்றுக் கொள்வது என்பது முற்றிலும் மாறுபட்டு உள்ளது.
Anomaly Scan Meaning Best Tips in tamil 2023 குறிப்பாக 100 பெண்களுக்கு 60 சதவீத பெண்கள் ஆபரேஷன் செய்வதன் மூலம் குழந்தை பெற்றுக் கொள்கிறார்கள் அந்த அளவிற்கு வாழ்க்கை முறை முற்றிலும் மாறிவிட்டது.
உலக சுகாதார மையம் வெளியிட்டுள்ள ஒரு முக்கியமான அறிக்கையில் மனித குலத்தின் வளர்ச்சி என்பது சற்று குறைந்துள்ளது.
ஆண்கள் கருத்தரிக்கும் தன்மையை பெரும்பாலும் இழந்து வருகிறார்கள், அதே போல் பெண்களும் குழந்தை பெற்றுக் கொள்ளும் தன்மையும் இழந்து வருகிறார்கள்.
இது மனிதகுல வளர்ச்சிக்கு மிகப்பெரிய ஆபத்து என்று உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.
இந்தியாவிலும் மற்றும் சீனாவிலும் குழந்தை பிறப்பு விகிதம் கடந்த 10 ஆண்டு விட இப்பொழுது கணிசமாக குறைந்துள்ளது என இருநாட்டு தகவல்கள் தெரிவிக்கிறது.
ஒரு பெண் கருவுற்றால் அந்தப் பெண்ணுக்கு பல்வேறு வகையான மருந்து மாத்திரைகள் மற்றும் ஸ்கேனிங் போன்றவைகள் செய்யப்படுகிறது.
குறிப்பாக 5வது மாதத்தில் செய்யப்படும் அனாமலி ஸ்கேன் பற்றி நன்கு தெரிந்திருக்க வேண்டும்.
இது முக்கியமான ஸ்கேன் என்று மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள், அதனை பற்றி முழுமையாக இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
அனாமலி ஸ்கேன் என்றால் என்ன
Anomaly Scan Meaning Best Tips in tamil 2023 பொதுவாக கர்ப்பிணிப் பெண்கள் எடுக்கும் ஒவ்வொரு ஸ்கேனில் ஒவ்வொரு வகையான தகவல்கள் குழந்தையின் வளர்ச்சி நிலை எப்படி இருக்கிறது என்பதை பற்றி மருத்துவர்கள் தெரிவித்தார்கள்.
அந்த வகையில் குறிப்பாக 5வது மாதத்தில் எடுக்கப்படும் ஒரு ஸ்கேன் தான் இந்த அனாமலி ஸ்கேன்.
இந்த அனாமலி ஸ்கேனில் குழந்தையின் அனைத்து வகையான உள் உறுப்புகளையும் பார்ப்பார்கள் அதாவது குழந்தையின் உடல் உள் உறுப்புகளும் அனைத்தும் சரியான இடத்தில் அமைந்துள்ளதா என்பதை இந்த ஸ்கேன் மூலம் பார்த்து தெரிந்து கொள்வார்கள்.
அப்படி அடி வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு ஏதாவது சிறிய குறைபாடு இருக்கிறது என்றால்.
அந்த குழந்தை பிறப்பதற்கு முன்னதாகவே அந்த பிரச்சனையை சரிசெய்துவிடலாம் என்பதற்காகத்தான் இந்த ஸ்கேன் முக்கியமாக பார்க்கப்படுகிறது.
Anomaly Scan Meaning Best Tips in tamil 2023 இந்த அனாமலி ஸ்கேன் குறிப்பாக பெண் கருவுற்றதிலிருந்து 18வது வாரத்தில் இருந்து அல்லது 20ஆவது வாரத்திற்குள் இந்த ஸ்கேன் எடுக்கப்பட வேண்டும்.
இந்த அனாமலி ஸ்கேனில் குழந்தையின் தலை முதல் கால் வரை உள்ள அனைத்து உள் உறுப்புகளும் சரியாக அமைந்து இருக்கிறதா என்பதைப் பார்ப்பார்கள்.
குழந்தை கைகால்களை சரியாக அசைக்கிதா என்பதையும் இந்த ஸ்கேன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
குழந்தையின் இரண்டு சிறுநீரகம், நுரையீரல், இடுப்பு பகுதி, முதுகு தண்டு, இதயம், கண்கள், மூளை வளர்ச்சி, இவை அனைத்தையும் இந்த ஸ்கேன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
குழந்தையின் வளர்ச்சி எப்படி இருக்கிறது குழந்தையின் எடை எப்படி இருக்கிறது,என்பதையும் இந்த ஸ்கேன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
அதே போல் கர்ப்பப்பை வலிமையாக இருக்கிறது மற்றும் குழந்தை கர்ப்பப் பையில்தான் வளர்கிறதா,என்பதையும் ஸ்கேன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.