Arisi kadai business best tips in tamil 2022
இந்த தொழிலை செய்தால் எந்த சூழ்நிலையிலும் நஷ்டம் ஏற்படாது..!
இன்றைக்கு நம்மளுடைய இணையதள பதிவில் எந்த ஒரு சூழ்நிலையிலும் நஷ்டம் ஏற்படாத தொழிலை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள போகிறோம்.
அது என்ன தொழில்,எப்படி செய்வது என்று அனைவரும் தெரிந்து கொள்ளலாம்.
நாம் அனைவரும் சாப்பிட்டால்தான் வாழமுடியும் சாப்பிடுவதற்கு தேவையான உணவுகளில் முக்கியமானது என்றால் அரிசி.
நம் உணவுகளில் இட்லி, சாதம், இடியாப்பம், இன்னும் பல உணவுகள் செய்வதற்கு முக்கிய மூலப் பொருளாக இருப்பது அரிசி மட்டுமே.
இப்போது இந்த அரிசியை வைத்து என்ன மாதிரியான தொழில் செய்யலாம், எந்த தொழில் செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும், இந்த தொழிலை எப்படி சிறப்பாக செய்ய வேண்டும் என்பதை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
அரிசி வகைகள் என்ன
இட்லி அரிசி
பிரியாணி அரிசி
பொன்னி அரிசி
பாஸ்மதி அரிசி
கர்நாடகா அரிசி
சீரக சம்பா அரிசி
புழுங்கல் அரிசி
பச்சை அரிசி
வேகவைத்த அரிசி
இன்னும் பல வகைகள் இருக்கிறது அதில் உங்களுக்கு தேவையான அரிசிகளை மட்டும் நீங்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.
அரிசி வியாபாரம் பற்றிய தகவல்கள்
Arisi kadai business best tips in tamil 2022 உங்கள் அன்றாட வாழ்க்கையில் முக்கியமானது ஒன்று அரிசி அத்தியாவசியமான பொருட்கள் என்றால் முக்கியமானது அரிசி எப்போதும் இந்த தொழில் செய்தால் எந்த ஒரு சூழ்நிலையிலும் உங்களுக்கு நஷ்டம் ஏற்படாது.
நீங்கள் முதலில் செய்ய வேண்டியது உங்கள் சுற்றுவட்டார பகுதியில் என்ன அரிசி அதிக வியாபாரம் நடைபெறுகிறது என்பதை தெரிந்துகொள்ள வேண்டும்.
அப்போதுதான் இந்த தொழில் தொடங்குவதற்கு எளிமையாக இருக்கும், நீங்கள் சிறிய அளவிற்கு தொழில் தொடங்குகிறீர்கள் என்றால் சிறிய கடை போதும்.
அந்த கடைக்கு மாத வாடகையாக அதிகபட்சம் ரூபாய் 3,000/- வரை இருக்கலாம் இல்லை எனில் பெரிய அளவில் தொடங்க வேண்டும் என்றால் நீங்கள் ஒரு குடோனை வாடகைக்கு எடுத்துக்கொள்ளலாம்.
அரிசியில் பல வகைகள் இருக்கிறது, ஆனால் நீங்கள் அரிசி கடை வைக்கும் இடத்தில் என்ன மாதிரியான அரிசி அதிக வியாபாரம் நடைபெறுகிறது.
அங்கு மக்களின் சூழ்நிலை, பொருளாதாரம், தொழில் வளர்ச்சி, ஆகியவற்றை தெரிந்து கொள்வதன், மூலம் நீங்கள் இந்த தொழிலை சிறப்பாக செய்யலாம்.
அதிக அளவில் அரிசி வாங்குவது எப்படி
Arisi kadai business best tips in tamil 2022 நீங்கள் சிறிய கடைதான் தொடங்கப் போகிறீர்கள் என்றால் உங்கள் ஏரியாவில் wholesale sales அரிசி கடைகள் அதிக அளவில் இருக்கும்.
அங்கு வாங்குவது சிறந்தது இல்லை என்றால் அரிசி விலையும் இடத்தில் மொத்த அளவில் அதிக அளவில் எடுத்தால் உங்களுக்கு லாபம் அதிகமாகக் கிடைக்கும்.
அதாவது தஞ்சாவூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கர்நாடக, போன்ற இடங்களில் அரிசி ஆலைகள் அதிகமாக உள்ளது. இந்த இடங்களில் அரிசி மொத்தமாக வாங்கிக் கொள்ள முடியும்.
எப்படி விளம்பரம் செய்வது
நீங்கள் எந்த தொழில் செய்தாலும் விளம்பரம் என்பது மிக முக்கியம் உங்களுடைய தொழில் பற்றி உங்கள் ஏரியாவில் உள்ள மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.
கடையில் உள்ள சிறப்பம்சம் என்ன,எந்தெந்த அரிசி வகைகள் உங்களிடம் இருக்கிறது, என்ன விலையில் இருக்கிறது என்பதை பற்றி முழுமையாக விளம்பரம் செய்யுங்கள்.
அந்த வகையில் அரிசி கடைக்கு சிறிய notice அல்லது இல்லை என்றால் உங்களுக்கு உகந்த வகையில் விளம்பரம் செய்யுங்கள் சமூக வலைதளங்கள் போன்றவற்றிலும் இதனை நீங்கள் செய்யலாம்.
விற்பனையில் அதிக லாபம் பெறுவது எப்படி
Arisi kadai business best tips in tamil 2022 நீங்கள் உங்கள் ஏரியாவில் உள்ள கடைகளில் விற்கும் விலையைவிட சற்று குறைவாக விற்பனை செய்ய வேண்டும்.
அது மட்டுமில்லாமல் அவ்வப்போது சலுகைகள், விலை குறைப்பு, மொத்தமாக விற்பனை, என பல்வேறு வகையான வியாபார உத்திகளை நீங்கள் கடைப்பிடித்தால் மட்டுமே வாடிக்கையாளர்கள் உங்களை தேடி வருவார்கள்.
Arisi kadai business best tips in tamil 2022 ஹோட்டல்கள், திருமண மண்டபங்கள், கோயில்கள் போன்ற இடங்களில் நீங்கள் தொடர்பு வைத்துக் கொண்டால் சில நேரங்களில் அதிக அளவில் உங்களால் அரிசி விற்பனை செய்ய முடியும்.
இது போல் செய்தால் கண்டிப்பாக உங்களுக்கு அதிக லாபம் கிடைக்கும், இந்த தொழில் எக்காரணத்தை கொண்டும், எந்த ஒரு சூழ்நிலையிலும் நஷ்டம் ஏற்படுத்தாது.