arokya milk dealership useful business 2022
குறைந்த முதலீடு போதும் அதிகமான வருமானம் பெற முடியும் ஆரோக்கிய பால் டீலர்ஷிப் பிசினஸ்..!
ஆரோக்கியா பால் டீலர்ஷிப் எப்படி எடுப்பது பற்றிதான் இந்த கட்டுரையில் முழுமையாக பார்க்க போகிறோம்.
பால் என்பது அனைவருக்கும் பிடித்தமான மற்றும் மிகவும் தேவைப்படுகின்ற, தவிர்க்கமுடியாத, ஒரு அத்தியாவசியமான பொருளாக, இன்றைய காலகட்ட வாழ்க்கையில் இருக்கிறது.
டீலர்ஷிப் என்பது விநியோகஸ்தர்களுக்கும் வியாபாரிகள் இடையே உள்ள தொடர்பு ஆகும்.
ஆரோக்கிய பால் டீலர்ஷிப் தொடங்க என்னென்ன ஆவணங்கள் தேவைப்படுகிறது, எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும், என்பது பற்றிய முழு விவரங்களையும் இந்த கட்டுரையில் காணலாம்.
டீலர்ஷிப் எப்படி விண்ணப்பிப்பது
இந்த ஆரோக்கிய பால் டீலர்ஷிப் தொழிலுக்கு நீங்கள் இணையதளம் மூலமாகவும் அல்லது நேரடியாக சென்று விண்ணப்பிக்கலாம்.
இணையதளம் மூலம் விண்ணப்பம் செய்யும் நபர்கள் www.hapin.com என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பம் செய்யலாம்.
நேரடியாகவும் சென்று விண்ணப்பம் செய்யலாம், ஒருவேளை நீங்கள் சென்னை மாவட்டமாக இருந்தால்.
சென்னையில் காரப்பாக்கம் என்ற இடத்தில் டீலர்ஷிப் இடம் அமைந்துள்ளது அங்கே சென்று விண்ணப்பம் செய்யலாம்.
இதற்கு தேவையான ஆவணங்கள்
இந்த டீலர்ஷிப் தொழில் தொடங்குவதற்கு MSME மற்றும் FSSAI என்ற சான்றிதழ் கட்டாயம் பெறவேண்டும்.
தொழில் தொடங்க தேவையான முதலீடு
இந்த ஆரோக்கியா பால் டீலர்ஷிப் தொழில் எப்படி தொடங்குவது எவ்வளவு முதலீடு செய்வது என்றால் சொந்தமாக உங்களிடம் இடம் இருந்தால் எந்த பிரச்சனையும் இல்லை.
அதுவே வாடகைக்கு இடம் எடுக்க வேண்டிய சூழ்நிலை இருந்தால் வாடகை தொகைக்கு நீங்கள் பணம் செலுத்த வேண்டும்.
தேவைப்படும் பொருட்கள் என்ன
பால் தயிர்களை வைப்பதற்கு Cooler /Freezer தேவைப்படும்.
பொருட்களை வாங்கி எடுத்து வருவதற்கு கண்டிப்பாக உங்களிடம் நான்கு சக்கர வாகனம் இருக்கவேண்டும், இருசக்கர வாகனத்தில் அதிக பொருட்களை எடுத்து வர முடியாது, அதற்கு காவல்துறை அனுமதி கொடுக்காது.
ஆரோக்கியா என்ற பிராண்ட் பெயர் உங்களுக்கு கொடுப்பதால் தொழில் நிறுவனத்திற்கு நீங்கள் முதலீடு தொகையாக குறைந்தபட்சம் இரண்டு லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும்.
இந்த 2 லட்சம் தொகையினை கடையின் டிசைன்களுக்கு மற்றும் பிராண்டு பெயருக்காக எடுத்துக்கொள்வார்கள்.
தேவைப்படும் வேலையாட்கள்
இந்தத் தொழிலை தொடங்குவதற்கு கண்டிப்பாக கடைக்கு வேலை பார்ப்பதற்கு குறைந்தபட்சம் ஒரு நபர் தேவைப்படும்.
பாலை எடுத்து வருவதற்குள் உங்களிடம் ஒரு வாகன ஓட்டுனர் தேவைப்படும்.
பணத்தை வசூல் செய்வதற்கு நீங்களும் செல்லலாம் அல்லது அதற்கு வேலை ஆட்களை உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப தேவையென்றால் வைத்துக்கொள்ளலாம்.
பால் விநியோகத்திற்கு நேரம்
பால் வாங்குவதற்கு அதிகாலை 4 மணி அளவில் அதாவது ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு நேரத்திற்கு பால் வினியோகம் தமிழ்நாடு முழுவதும் செய்யப்படுகிறது.
சென்னை போன்ற பெரு நகர இடத்தில் அதிகாலை 4 மணிக்கு விநியோகம் செய்வார்கள் நாம் அப்போது சென்று வாங்க வேண்டும்.
உங்களுக்கு எத்தனை பாக்கெட் பால் தேவைப்படுகிறது பால் விநியோகம் செய்யப்படும் நபர்களுக்கு முதல் நாளே நீங்கள் தெரியப்படுத்த வேண்டும்.
பாலுக்கான தொகையினை மாலை நேரத்தில் அக்கவுண்டில் செலுத்திவிட வேண்டும், அப்போதுதான் மறுநாள் காலை நீங்கள் உங்களுக்கு தேவைப்படும் பாலை பெற்றுக்கொள்ள முடியும்.
தமிழ்நாடு அரசால் நிர்வகிக்கப்படும் ஆவின் பால் நிறுவனத்தில் வாடிக்கையாளர்களுக்கு நேரடியாகவே அவர்களே பால் விநியோகம் செய்வார்கள், ஆனால் ஆரோக்கிய பால் நிறுவனத்தில் அந்த மாதிரியான எந்த திட்டமும் இல்லை.
பணம் வாங்கப்படும் நேரம் என்ன
arokya milk dealershi விற்ற பால்களின் பணத்தொகை நீங்கள் எப்போது பெற முடியும் என்றால் பெரும்பாலான கடைகளில் மாலை நேரத்தில் தான் கொடுப்பார்கள்.
ஏனென்றால் காலை நேரத்தில் பால்விற்ற தொகையினை மாலை நேரத்தில்தான் செலுத்துவார்கள்.
கிடைக்கும் லாபம் எவ்வளவு
arokya milk dealershi ஒரு பால் பாக்கெட்டிற்க்கு குறைந்தபட்சம் 1.50 பைசா கமிஷன் உங்களுக்குக் கிடைக்கும்.
தயிர், பன்னீர், போன்ற பொருட்களை விற்பனை செய்தால், ரூபாய் 2 முதல் 4 ரூபாய் வரையிலும் கமிஷன் கிடைக்கும்.
பட்டர் போன்றவற்றிற்கு ரூபாய் 3 ரூபாய் கமிஷன் கிடைக்கும்.
எவ்வளவு தொகை வருமானம் கிடைக்கும்
arokya milk dealershi சராசரியாக ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் 800 முதல் 1000 பாக்கெட் வரை விற்பனை செய்தால் ஒரு மாதத்திற்கு 40,000/-ரூபாய் முதல் 60,000/- ரூபாய் வரை நிச்சயம் லாபம் கிடைக்கும்.
இந்த தொழிலானது குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் செய்யக்கூடிய தொழில் என்பது இல்லை.
பால் எப்போதும் மிகவும் அத்தியாவசியமான, உணவுப் பொருளாக இருப்பதால், அனைத்து கால நேரத்திற்கும் ஏற்ற தொழிலாக இருக்கிறது.
கண்டிப்பாக நீங்களும் இந்த தொழில் தொடங்கி அதிகமான வருமானத்தை பெற முடியும்.